டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஓமிக்ரான் வைரஸ்: இந்தியாவில் 3ஆவது அலையை தூண்டுமா?.. விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Google Oneindia Tamil News

டெல்லி: புதிய வகை ஓமிக்ரான் வைரஸால் இந்தியாவில் 3ஆவது அலையை தூண்டுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா முதல் அலையை விட இரண்டாவது அலை மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த இரண்டாவது அலையில் ஏராளமானோர் உயிரிழந்தனர்.

இதனால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் தடுப்பூசி ஒன்றுதான் தீர்வு என சொல்லப்பட்ட நிலையில் தடுப்பூசி போடும் முயற்சியை மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. மாநில அரசுகள் இலவசமாக தடுப்பூசிகளை செலுத்துகிறது.

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை தாக்கினால் பரிசு… மதுரைக்கார டாக்டரின் சர்ச்சை அறிவிப்பு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை தாக்கினால் பரிசு… மதுரைக்கார டாக்டரின் சர்ச்சை அறிவிப்பு

கொரோனா

கொரோனா

இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா 3ஆவது அலை ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. எப்போதுமே ஒரு வேரியண்ட் வந்தால்தான் 3ஆவது அலை தீவிரமடையும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்தனர். அந்த வகையில் தற்போது தென்னாப்பிரிக்காவில் ஓமிக்ரான் எனும் புதிய வேரியண்ட் உருவாகியுள்ளது.

டெல்டா வேரியண்ட்

டெல்டா வேரியண்ட்

இது இந்தியாவில் உருவான டெல்டா வேரியண்ட்டை விட மிகவும் வீரியமிக்கதாக சொல்லப்படுகிறது. 50 பிறழ்வுகள் இருப்பதால் இது கொடியது என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த புதிய வைரஸால் இனி வரும் நாட்களில் கொரோனா 3ஆவது அலை உருவாகலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தியா

இந்தியா

இதுகுறித்து தேசிய தடுப்பூசி திட்டத்தின் ஆலோசகர் டாக்டர் நரேஷ் புரோகித் கூறுகையில் ஒரு வைரஸ் எளிதில் பாதிக்கக்கூடிய ஒரு உடலில் நுழைகிறபோது, அது நகல் எடுக்கத்தொடங்குகிறது. நோய்த்தொற்றின் பரவலுடன் நகலெடுப்பதும் அதிகரிக்கிறது. ஒரு வைரஸ் கொண்டிருக்கிற பிறழ்வு, உருமாற்றம் ஆகும். புதிதாக கண்டறியப்பட்டுள்ள ஒமிக்ரான் என பெயரிடப்பட்டுள்ள பி.1.1.529 வைரஸ், இந்தியாவில் 3-வது அலையை ஏற்படுத்தலாம்.

வைரஸ்

வைரஸ்

தென் ஆப்பிரிக்காவில் முதலில் கண்டறியப்பட்டுள்ள இந்த வைரஸ். தற்போதுள்ள உருமாறிய வைரஸ்களை விட ஸ்பைக் புரதத்தில் கூடுதல் பிறழ்வுகளை கொண்டுள்ளது என்பதால் தடுப்பூசியின் செயல்பாடுகள் குறித்து கேள்விகளை எழுப்புகிறது. அதாவது தற்போதுள்ள தடுப்பூசிகளால் இந்த வைரஸை கட்டுப்படுத்த முடியாது என சொல்கிறார்கள்.

Recommended Video

    Omricon Covid variant from South Africa Triggers World | OneIndia Tamil
    ஓமிக்ரான் வைரஸ்

    ஓமிக்ரான் வைரஸ்

    புதிய வைரஸான ஓமிக்ரானை பொருத்தமட்டில் அது பரவும் தன்மை, தடுப்பூசி செயல்திறன் குறித்து எந்த ஆதாரமும் இல்லை. எனினும் மக்கள் எப்போதும் எச்சரிக்கையாகவும் கொரோனா விதிமுறைகளை பின்பற்றியும் இருக்க வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார். இனி வரும் நாட்கள் பண்டிகை காலம் என்பதால் கூடுதல் கவனம் அவசியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    English summary
    The new deadly Omicron Variant leads to Coronavirus 3rd wave? What are experts says?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X