இந்தியாவில் மெல்ல, மெல்ல ஆதிக்கம் செலுத்தும் ஓமிக்ரான் வைரஸ்..குஜராத்தில் மேலும் 2 பேருக்கு அறிகுறி
டெல்லி: உலகம் முழுவதையும் கொரோனா தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நிலையில் தென்னாப்பிரிக்காவில் புதிய வகை உருமாறிய ஓமிக்ரான் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது உலக நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த உருமாறிய வைரஸ் மிகவும் ஆபத்தானது என்று உலக சுகாதார அமைப்பே கூறியுள்ளது. முழுமையாக 2 டோஸ் தடுப்பூசி போடப்பட்ட மக்கள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் டெல்டாவை வைரஸை விட இது வீரியம்மிக்கது என்றும் தகவல்கள் கூறுகின்றன.

ஓமிக்ரான் வைரஸ்
ஓமிக்ரான் வைரஸ் புகுந்து விடக்கூடாது என்பதில் இந்தியாவும் மிகவும் அலர்ட்டாக இருந்தது. வெளிநாடுகளில் இருந்து குறிப்பாக ஆப்பிரிக்க நாடுகளிடம் இருந்து வருபவர்களை விமான நிலையங்களில் தீவிரமாக பரிசோதிக்கும்படி மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் கட்டாயம் ஆர்.டி.பி.சி ஆர் சோதனை செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்தியாவிலும் புகுந்தது
ஆனால் இந்தியாவில் ஓமிக்ரான் புகுந்து விட்டது. நாட்டில் இப்போது மொத்தம் 21 ஓமிக்ரான் தொற்று பாதிப்புகள் பதிவாகியுள்ளன. ஓமிக்ரான் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் குஜராத் மாநிலத்தை சேர்ந்த 72 வயதான நபரும் உள்ளார். ஜிம்பாப்வே நாட்டில் பல ஆண்டுகளாக வசித்து, கடந்த நவம்பர் 28-ஆம் தேதி நாடு திரும்பிய நிலையில் அவருக்கு ஓமிக்ரான் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது.

மனைவி மற்றும் மைத்துனருக்கும் பாதிப்பு
இந்த நிலையில் இந்த நபரின் மனைவி மற்றும் மைத்துனருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் ஓமிக்ரான் வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளனரா என்பதை அறிய அவர்களின் மாதிரிகள் மரபணு வரிசைமுறைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்கள் இருவரும் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுக்கு மாற்றப்பட்டதாக ஜாம்நகர் மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video

ஆக்டிவ் கேஸ்கள் எத்தனை
ஓமிக்ரான் வைரஸ் அச்சம் ஒருபுறம் இருந்தாலும் நாட்டில் கொரோனா பாதிப்பு குறைந்து ஆறுதல் அளிக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் 8,306 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத பாதிப்பு எண்ணிக்கை 3,46,41,561 ஆக உயர்ந்துள்ளது, அதே வேளையில் ஆக்டிவ் கேஸ்கள் 98,416 ஆக குறைந்துள்ளது, இது 552 நாட்களில் மிகக் குறைவு என்று மத்திய சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications