ஆபரேஷன் கங்கா: உக்ரைனில் சிக்கிய மாணவர்களை மீட்க விரையும் 4 அமைச்சர்கள்! பிரதமர் மோடி முக்கிய முடிவு
டெல்லி: உக்ரைனில் சிக்கிய மாணவர்களை மீட்கும் பணியில் 4 மத்திய அமைச்சர்கள் அண்டை நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளவிருப்பதாக தெரியவந்துள்ளது.
உக்ரைன் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடந்தது. உக்ரைன் எல்லையில் மாணவர்கள் மீது தாக்குதல் நடந்த நிலையில், இன்று மீண்டும் பிரதமர் தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடந்தது.
இதில் உக்ரைனில் சிக்கி இருக்கும் இந்தியர்களை மீட்டெடுக்க அண்டை நாடுகளுக்கு மத்திய அமைச்சர்கள் செல்வது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

ஆபரேஷன் கங்கா
ஆபரேஷன் கங்கா என்ற பெயரில் உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பிரதமர் மோடி தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற மத்திய வெளியுறவு செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷிரிங்லா, உக்ரைனில் இருந்து இந்தியமாணவர்களை மீட்க எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கைகளை விவரித்தார். மாணவர்களை விரைந்து மீட்க நடவடிக்கை எடுக்குமாறு வெளியுறவுத் துறை அதிகாரிகளுக்கு பிரதமர் உத்தரவிட்டார்.

ஆலோசனை
உக்ரைனில் இருந்து அண்டை நாடுகள் வழியாக, 5 விமானங்களில் இதுவரை இந்தியர்கள் தாயகம் திரும்பி உள்ளார்கள். இந்நிலையில், உக்ரைன் எல்லையில் இந்திய மாணவர்கள் மீது உக்ரைன் ராணுவம் தாக்குதல் நடத்தும் வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் இந்தியாவில் உள்ள பெற்றோர்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்நிலையில் இன்று பிரதமர் மோடி மீண்டும் ஆலோசனை நடத்தியுள்ளார்.

மீட்பு பணி
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், உக்ரைனில் இருந்து மாணவர்களை எப்படி மீட்பது, பத்திரமாக எப்படி எல்லையைக் கடக்கவைப்பது என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் உக்ரைனின் அண்டை நாடுகளின் வழியாக மாணவர்களை மீட்டு வரலாம் என்று முடிவெடுக்கப்பட்டது. அதோடு, இந்த மீட்பு பணிகளில் மத்திய அமைச்சர்கள் ஈடுபட்டு அண்டை நாடுகளுக்கு பயணம் செய்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video

மத்திய அமைச்சர்கள்
மத்திய அமைச்சர்கள் ஹர்தீப் சிங் பூரி, ஜோதிராதித்ய சிந்தியா, கிரண் ரிஜிஜூ ஆகியோரை உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்கள் உட்பட அனைவரையும் மீட்கும் பணியில் ஈடுபட அந்நாட்டின் அண்டை நாடுகளுக்கு அனுப்ப மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. உக்ரைனில் போர் தீவிரமடைந்துள்ளதால் இந்திய மாணவர்கள் அவரவர் தங்கியுள்ள இடத்தை விட்டுவெளியே வரக்கூடாது. பொதுவெளியில் நடமாடக் கூடாது என உக்ரைனில் இருக்கும் இந்தியர்களை மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications