Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'அப்செட்'.. மீட்டிங்கிற்கு வராத உத்தவ் தாக்கரே.. ஷாக்கான எதிர்க்கட்சிகள்.. எடுத்த புதிய தீர்மானம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவின் வீட்டில் நேற்று இரவு நடந்த வியூக கூட்டத்தில் காங்கிரஸ் உள்பட 17 எதிர்க்கட்சிகளின் பிரநிதிகள் பங்கேற்ற கூட்டம் நடந்தது. இனி சாவர்க்கர் போன்ற சென்செட்டிவ்வான விஷயங்களில் கருத்து தெரிவிப்பதை தவிர்க்க முடிவு செய்யப்பட்டது. முன்னதாக ராகுல் காந்தி சாவர்க்கர் குறித்து பேசிய கருத்து சர்ச்சையானது அப்செட்டான உத்தவ் தாக்கரே இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கடந்த 2019ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின்போது தீவிரப்பிரச்சாரம் மேற்கொண்டார். 2019-ம் ஆண்டு, ஏப்ரல் 13-ந் தேதியன்று கர்நாடக மாநிலம், கோலாரில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரசார கூட்டத்தில் ராகுல் கலந்து கொண்டார்.

கூட்டத்தில் ராகுல் காந்தி பேசுகையில், "நிரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி என எப்படி எல்லா திருடர்களும் தங்கள் பெயருக்குப்பின்னே மோடியை பொதுவான பெயரையே வச்சிருக்காங்க" என்று கேள்வி எழுப்பினார். பிரதமர் நரேந்திர மோடியைக் குறிவைத்து ராகுல் காந்தி பேசிய இந்தப் பேச்சு, பெருத்த சர்ச்சையானது.

குஜராத் அமைச்சர்

குஜராத் அமைச்சர்

இது தொடர்பாக ராகுல் காந்தி மீது குஜராத் மாநில முன்னாள் அமைச்சரும், பா.ஜ.க. எம்.எல்.ஏ.வுமான புர்னேஷ் மோடி, குஜராத்தின் சூரத் மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடுத்தார். அவர் தனது மனுவில் ராகுல் காந்தி ஒட்டுமொத்த மோடி சமூகத்தையும் அவமதித்து விட்டதாக குற்றம் சாட்டி இருந்தார்.

ராகுல் காந்தி குற்றவாளி

ராகுல் காந்தி குற்றவாளி

இந்த வழக்கைப் பரிசீலித்த நீதிமன்றம், இதில் ராகுல் காந்தி மீதான குற்றச்சாட்டுக்கு அடிப்படை ஆதாரம் இருப்பதாகக் கூறி, விசாரணைக்கு ஏற்றது.
இந்த வழக்கை தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட்டு எச்.வர்மா விசாரித்தார். விசாரணைக்கு பின்னர் நேற்று தீர்ப்பை அவர் அறிவித்தார்.
நீதிபதி கூறுகையில், ராகுல் காந்தி மீது இந்திய தண்டனைச்சட்டம் பிரிவுகள் 499 மற்றும் 500-ன் கீழான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது . ராகுல் காந்தி குற்றவாளி , அவருக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படுகிறது என்றார்.

 மோசமான முன்னுதாரணம்

மோசமான முன்னுதாரணம்

சூரத் நீதிமன்றம் தனது தீர்ப்பில், ராகுல் காந்தி உச்சநீதிமன்றத்தால் எச்சரிக்கப்பட்டு அறிவுறுத்தப்பட்டாலும் அவரது நடத்தையில் எந்த மாற்றமும் இல்லை. குற்றம் சாட்டப்பட்டவர் எம்.பி. என்ற தகுதியில் மக்களிடம் பேசும் ஒரு எம்.பி. மற்றும் சமூகத்தின் பெரும்பகுதியை பாதிக்கிறார், எனவே இந்த குற்றத்தின் விளைவுகள் இந்த வழக்கில் மிகவும் விரிவானது. அவருக்கு தண்டனையை குறைப்பது ஒரு மோசமான முன்னுதாரணமாக அமைந்துவிடும். சமூகத்தில் ஒரு எதிர்மறை செய்தி.அதை மனதில் வைத்து குற்றம் சாட்டப்பட்டவருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படுகிறது" என்று சூரத் நீதிமன்றம் ராகுலுக்கு 2ஆண்டு சிறை தண்டனை ஏன் என்பது குறித்து தீர்ப்பில் விளக்கம் அளித்திருந்தது.

மக்களவை செயலகம்

மக்களவை செயலகம்

இதனிடையே சூரத் நீதிமன்றம் மோடி குறித்து அவதூறாக பேசியதாக 2 ஆண்டு சிறை தண்டனை விதித்த மறுநாளே மக்களவை செயலகம் ராகுல் காந்தியை எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டது. இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கும், குடியரசுத் தலைவருக்கும் நகல்களை மக்களவை செயலகம் அனுப்பி வைத்து இருந்தது. மக்களவை செயலகம் இப்படி அறிவிப்பு வெளியிட்ட அடுத்த நாளே ராகுல் காந்தி எம்பியாக வென்ற வயநாடு தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

மம்தா கெஜ்ரிவால்

மம்தா கெஜ்ரிவால்

இந்நிலையில் ராகுல் காந்தி எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டிருப்பது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. கிட்டத்தட்ட இந்தியாவில் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளுமே ஒன்று திரண்டு இந்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. ராகுல் காந்திக்கு ஆதரவாக கெஜ்ரிவால் தொடங்கி மம்தா பனார்ஜி வரை அனைவருமே கருத்து தெரிவித்துள்ளனர். ராகுல் காந்திக்கு நடந்தது பெரும் அநீதி என பாஜகவை கடுமையாக கண்டித்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. நேற்று நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் கருப்பு உடை அணிந்து வந்து எதிர்ப்பு தெரிவித்தனர். இதுஒருபுறம் எனில் காங்கிரஸ் கட்சி நாடு முழுவதும் போராட்டத்தில் இறங்கி உள்ளது.

சிவசேனா கோபம்

சிவசேனா கோபம்

ராகுலுக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கருத்து தெரிவித்து வந்த நிலையில், ராகுல் காந்தி சனிக்கிழமை செய்தியாளர்களை சந்தித்து பேசும் போது, "நான் காந்தி, சாவர்க்கர் அல்ல, காந்திகள் மன்னிப்பு கேட்க மாட்டார்கள்'' என்றார். இதனால் கோபம் அடைந்த சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே, "அந்தமான் சிறையில் கற்பனை கூட செய்ய முடியாத அளவுக்கு பல கொடூரங்களை 14 ஆண்டுகள் சாவர்க்கர் அனுபவித்தார். அதுவும் ஒருவிதமான தியாகம்தான். சாவர்க்கரை இழிவுபடுத்துவதை எப்போதும் சகித்துக் கொள்ள மாட்டோம். சாவர்க்கர் எங்களின் கடவுள். அவரை அவமரியாதை செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. நாங்கள் போராட தயாராகிக் கொண்டு இருக்கிறோம். அவரை இழிவுபடுத்தி பேசுவதை ராகுல் காந்தி நிறுத்திக்கொள்ள வேண்டும். ஜனநாயகத்தைப் பாதுகாக்கவே நாங்கள் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் (என்சிபி) கூட்டணி வைத்துள்ளோம். ஆனால் ராகுல் காந்தி எங்களை சீண்டும் வகையில் பேசி இருக்கிறார் என வேதனை தெரிவித்தார் உத்தவ் தாக்கரே.

17 கட்சிகள் பங்கேற்பு

17 கட்சிகள் பங்கேற்பு

இந்நிலையில் ராகுல் காந்தி எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் அடுத்த கட்டமாக என்ன செய்யலாம் என்பது குறித்து டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவின் வீட்டில் நேற்று இரவு எதிர்க்கட்சிகள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் ராகுல் காந்தி, திமுக சார்பில் டிஆர்பாலு, மதிமுக சார்பில் வைகோ ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ், நிதிஷ் குமாரின் ஜனதா தளம் ஐக்கிய, தெலுங்கானாவில் ஆளும் பாரத ரக்ஷா சமிதி, ஆர்எஸ், சிபிஎம், சிபிஐ, அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி, மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ், விசிகி, ஜேஎம்எம், ஆர்ஜேடி, விசிக உள்பட 17 கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் உத்தவ் தாக்கரே பங்கேற்கவில்லை. ராகுலின் சாவர்க்கர் கருத்து அவருக்கு வருத்தத்தை தந்ததால் பங்கேற்கவில்லை. எனினும் எதிர்க்கட்சிகளின் இந்த கூட்டத்தில் சவார்க்கர் போன்ற சென்செட்டிவ்வான விஷயங்களில் கருத்து தெரிவிப்பது இல்லை என்று முடிவு செய்யப்பட்டது.

ஜனநாயக விரோதம்

ஜனநாயக விரோதம்

இருப்பினும் எதிர்க்கட்சித் தலைவர்கள் பலர், இது காங்கிரஸுக்கு பிரச்சினை அடிப்படையிலான ஆதரவு என்றும், 2024 பொதுத் தேர்தலின் பின்னணியில் இதை பார்க்க வேண்டியது அல்ல என்றும் கூறினார்கள். திரிணாமுல் காங்கிரஸ் எம்பி ஜவஹர் சிர்கார் கூறும் போது, "ஒன்றாக நடப்பது சரியான அடையாளம், இதை இன்று நாம் மேற்கொண்டது - அனைவருக்கும் எதிரான ஒருங்கிணைந்த மற்றும் ஜனநாயக விரோத தாக்குதல்களுக்கு எதிரான ஒற்றுமையின் சிறப்பு அடையாளம் என்றார்

ஜெய்ராம் ரமேஷ்

ஜெய்ராம் ரமேஷ்

காங்கிரஸ் கட்சியின் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், "இன்றிரவு (நேற்று) 18 எதிர்க் கட்சிகளின் தலைவர்கள் கார்கேஜியின் இல்லத்தில் கூடி, ஜனநாயகத்தை அழித்து, அனைத்து அமைப்புகளையும் சீர்குலைகக்கும் மோடி ஆட்சிக்கு எதிராகவும், அவர்களின் மிரட்டலுக்கு எதிராகவும் பிரச்சாரத்தைத் தொடர ஒரே குரலில் முடிவு செய்துள்ளனர். இந்த தீர்மானம் பாராளுமன்றத்திற்கு வெளியே கூட்டு நடவடிக்கைகளிலும் பிரதிபலிக்கும்" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+