டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

முண்டியடித்து! தலைவர்களை பின்னுக்கு தள்ளி! மோடியோடு முன் வரிசைக்கு ஓடிவந்த ரவீந்திரநாத்! பரபர வீடியோ

Google Oneindia Tamil News

டெல்லி: பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக திரெளபதி முர்மு இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். இந்த நிகழ்வில் ஓ பி ரவீந்திரநாத் எம்பி நடந்து கொண்ட விதம் வைரலாகி வருகிறது.

குடியரசுத் தலைவராக உள்ள ராம் நாத் கோவிந்தின் பதவிக்காலம் ஜூலை 24ம் தேதி முடியும் நிலையில், இந்த வருடம் ஜூலை மாதம் 18ம் தேதி புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெற உள்ளது.

ஜூலை 21ம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்த முறை பாஜக கூட்டணிக்கு எம்பி, எம்எல்ஏ எல்லாம் சேர்த்து 5.42 லட்சம் வாக்குகள் உள்ளன. எதிர்க்கட்சிகளின் திமுக, காங்கிரஸ் எல்லாம் சேர்த்து 4.49 லட்சம் வாக்குகள் கொண்டு உள்ளன.

குடியரசுத் தலைவர் தேர்தல்.. சென்னை வரும் திரெளபதி முர்மு.. யாருடன் சந்திப்பு?குடியரசுத் தலைவர் தேர்தல்.. சென்னை வரும் திரெளபதி முர்மு.. யாருடன் சந்திப்பு?

 யஷ்வந்த் சின்கா

யஷ்வந்த் சின்கா

இந்த தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்கா அறிவிக்கப்பட்டு இருக்கிறார். அதேபோல் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக திரெளபதி முர்மு அறிவிக்கப்பட்டு உள்ளார். இவருக்கு ஏற்கனவே ஆந்திர பிரதேச முதல்வர் ஜெகன் மோகன் அறிவித்துள்ளார். அதேபோல் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் இந்த அறிவிப்பை வரவேற்று இருக்கிறார். இதனால் தற்போதைய நிலவரப்படி திரெளபதி முர்மு அதிகம் வெற்றிபெறவே வாய்ப்பு உள்ளதாக தெரிந்தது.

 திரெளபதி முர்மு

திரெளபதி முர்மு

ஒடிஷாவை சேர்ந்த பழங்குடி இனத் தலைவர் திரெளபதி முர்மு ஆவார். இவர் இதற்கு முன்பு ஆளுநர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்து இருக்கிறார். இதையடுத்து இன்று பிற்பகல் 1 மணிக்கு திரெளபதி முர்மு வேட்புமனு தாக்கல் செய்தார் . பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் திரவுபதி முர்மு வேட்பு மனு தாக்கல் செய்தார். நாடாளுமன்ற வளாகத்தில் ராஜ்ய சபா செயலகத்தில் அவர் மனுதாக்கல் செய்தார்.

 அதிமுக தலைகள்

அதிமுக தலைகள்

மனு தாக்கலின் போது அதிமுக தலைவர்கள் உடன் இருந்தனர். ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், எம்பி தம்பிதுரை ஆகியோர் உடன் இருந்தனர். இந்த நிகழ்வின் போது ஓ பன்னீர்செல்வம் மகன் ஓ பி ரவீந்திரநாத் எம்பி உடன் இருந்தார். மூத்த தலைவர்கள் பிரதமர் மோடி, அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், பாஜக தலைவர் நட்டா ஆகியோர் முன் வரிசையில் இந்த நிகழ்விற்காக சென்றனர். அப்போது ஓ பி ரவீந்திரநாத் பின் வரிசையில் வந்து கொண்டு இருந்தார்.

ரவீந்திரநாத்

ரவீந்திரநாத்

இந்த நிலையில் திடீரென ரவீந்திரநாத் முன் வரிசையில் பிரதமர் அருகே நிற்க முயற்சி செய்து வேகமாக நடந்தார். முண்டியடித்துக்கொண்டு மூத்த தலைவர்களை பின்னுக்கு தள்ளி ஓபிஆர் வேகமாக வந்தார். அப்போது அருகில் ஒரு பூ செடி இருந்தது. அதை கூட கண்டுகொள்ளாமல்.. அதில் லேசாக உரசியபடி வேக வேகமாக அவர் ஓடி வந்தார். அதிமுகவில் பிரச்சனை நிலவி வரும் நிலையில், மோடியுடன் தனக்கு உள்ள நெருக்கத்தை காட்டும் விதமாக ஓ பி ஆர் வேகமாக முன்னோக்கி வந்தார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

English summary
OPS and O P Raveendranath has seen in the video while Draupathi Murmu nominated for President election. பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக திரெளபதி முர்மு இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். இந்த நிகழ்வில் ஓ பி ரவீந்திரநாத் எம்பி நடந்து கொண்ட விதம் வைரலாகி வருகிறது.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X