மக்களின் தீர்ப்பை ஏற்கிறோம்; எங்களின் யுத்தம் தற்போதுதான் தொடங்கியுள்ளது - பிரியங்கா காந்தி
மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம்; எங்களது யுத்தம் தற்போதுதான் தொடங்கியுள்ளது என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்
டெல்லி: ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் பற்றி கருத்து கூறியுள்ள காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளார். எங்களது யுத்தம் தற்போதுதான் தொடங்கியுள்ளது, தைரியம் மற்றும் புதிய ஆற்றலுடன் தொடர்ந்து பயணிக்க வேண்டும் என்று பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.
உத்தர பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி கடும் பின்னடைவை சந்தித்து உள்ளது. கண்ணுக்கு எட்டிய தூரம் வரைக்கும் வெற்றியைக் காணோம் என்று கவலைப்படுகிறது காங்கிரஸ் கட்சி.
கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்த கட்சி, மத்தியிலும் மாநிலங்களிலும் ஆண்ட காங்கிரஸ் கட்சி அந்திமக்காலத்தை எட்டியுள்ளதாகவே பலரும் கருதுகின்றனர். ஐந்து மாநில தேர்தல் முடிவுகளும் காங்கிரஸ் கட்சிக்கு பலத்த அடியை கொடுத்துள்ளது.

உ.பி பரிதாப தோல்வி
நாட்டிலேயே பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் 403 தொகுதிகள் உள்ளன. இங்கு பாரதிய ஜனதா வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது. பாஜகவிற்கு அடுத்த படியாக அகிலேஷ் யாதவ் கட்சி அதிக இடங்களை பிடித்து இருக்கிறது. ஆனால் காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தை மட்டுமே பிடிக்கும் நிலையில் உள்ளது. இதன் மூலம் உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி கடந்த தேர்தலை விட மிகவும் பரிதாபமான தோல்வியை சந்தித்து உள்ளது.

எடுபடாத பிரச்சாரம்
5 மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவர்களான ராகுல், பிரியங்கா ஆகியோர் தீவிரமாக பிரசாரம் செய்தனர். குறிப்பாக பிரியங்கா உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களில் தனது பிரசாரத்தை வேகப்படுத்தி இருந்தார். பெண்களை கவரும் வகையில் மாத ஓய்வூதியம், இலவச இருசக்கர வாகனம் உள்ளிட்ட அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டு இருந்தார். பிரியங்காவின் பிரச்சாரம் மக்களிடம் எடுபடவில்லை ஆனால் இந்த அறிவிப்புகள் எதுவும் ஓட்டாக மாறவில்லை.

சோகத்தில் தொண்டர்கள்
வாக்கு எண்ணிகை முடிவுகள் ஆரம்பம் முதலே காங்கிரஸ் கட்சிக்கு பாதகமாகவே இருந்தது. உத்தரபிரதேச மாநிலத்தில் அந்த கட்சி படு தோல்வியை சந்தித்து உள்ளது. இதன் மூலம் பிரியங்காவின் பிரசாரம் சட்டசபைத் தேர்தலில் எந்த வகையிலும் கைகொடுக்கவில்லை. காங்கிரஸ் கட்சியின் இந்த தோல்வி அக்கட்சி தொண்டர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

மயான அமைதி
பாஜக அலுவலகங்கள் கொண்டாட்டங்களில் இருக்க, காங்கிரஸ் கட்சி அலுவலகங்கள் மயான அமைதியாக காட்சியளிக்கின்றன. ராகுல்காந்தி இந்த தேர்தல் முடிவுகளைப் பற்றி எந்த வித அறிவிப்பு வெளியிடவில்லை. முக்கிய தலைவர்களும் அமைதிகாக்கின்றனர். காங்கிரஸ் கட்சி சுயபரிசோதனை செய்ய வேண்டிய நேரம் இது என்று பலரும் கூறி வருகின்றனர்.

ஜெய் காங்கிரஸ்
இதனிடையே ஐந்து மாநில தேர்தல் வரும் முன்னதாகவே மிகப்பெரிய அறிக்கை ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட பிரியங்கா காந்தி, உபி காங்கிரஸின் தொண்டர்கள் , வேட்பாளர்கள், அலுவலகப் பணியாளர்கள் மற்றும் தலைவர்களுக்கு எனது செய்தி. வாழ்க இந்தியா...ஜெய் காங்கிரஸ் என்று குறிப்பிட்டிருந்தார்.

மக்கள் தீர்ப்பு
இந்த நிலையில், மக்களின் தீர்ப்பை ஏற்றுக் கொள்வதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம்; எங்களது யுத்தம் தற்போதுதான் தொடங்கியுள்ளது, தைரியம் மற்றும் புதிய ஆற்றலுடன் தொடர்ந்து பயணிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
-
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது?












Click it and Unblock the Notifications