‛‛வெட்கி தலைகுனியனும்’’.. கார்கேவால் ராஜ்யசபாவில் கண்சிவந்த ஜெகதீப் தன்கர்! கடும் கண்டனம் - பரபரப்பு
டெல்லி: நாடாளுமன்ற ராஜ்யசபாவில் இன்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை, சபையின் தலைவரும், துணை ஜனாதிபதியுமான ஜெகதீப் தன்கர் அவரது பேச்சை ஏற்க முடியாது எனக்கூறி கடும் கண்டனம் தெரிவித்தார். அதோடு வெட்கி தனைகுனிய வேண்டும் என்ற வார்த்தையை பயன்படுத்தி பரபரப்பை கிளப்பினார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாள் கூட்டம் இன்று நடந்தது. வழக்கம்போல் லோக்சபா, ராஜ்யசபா காலை 11 மணிக்கு தொடங்கியது. ராஜ்யசபாவை துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் தலைமையேற்று நடத்தினார்.

இந்த வேளையில் உத்தர பிரதேச மாநிலத்தில் செயல்பட்டு வரும் ஆர்எல்டி கட்சியின் தலைவரும், ராஜ்யசபா எம்பியுமான ஜெயந்த் சவுத்ரி பேச எழுந்தார். அப்போது அவருக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
அதாவது ஆர்எல்டி கட்சி உத்தர பிரதேசத்தில் ‛இந்தியா' கூட்டணியில் இருந்த நிலையில் நேற்று திடீரென்று பாஜகவுடன் கைகோர்த்தது. பாஜக கூட்டணியில் உத்தர பிரதேச மாநிலத்தில் 2 லோக்சபா தொகுதி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் ‛இந்தியா' கூட்டணியில் உள்ள காங்கிரஸ் மற்றும் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி அதிர்ச்சியடைந்துள்ளது. இத்தகைய சூழலில் தான் ராஜ்யசபாவில் இந்த சம்பவம் அரங்கேறியது.
அதாவது ஆர்எல்டி கட்சியின் தலைவராக உள்ள ஜெயந்த் சவுத்ரியின் தாத்தா சவுத்ரி சரண் சிங் இந்தியாவின் முன்னாள் பிரதமர் ஆவார். இவருக்கு சமீபத்தில் மத்திய அரசு ‛பாரத ரத்னா' விருது அறிவித்தது. இந்த விருதுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பேரனான ஜெயந்த் சவுத்ரி இன்று ராஜ்யசபாவில் பேச தொடங்கினார்.
அப்போது காங்கிரஸின் மல்லிகார்ஜுன கார்கே உள்பட எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மல்லிகார்ஜுன கார்கே எழுந்து ‛‛விருது அறிவிக்கப்பட்ட அனைவரையும் நான் மதிக்கிறேன். ஜெயந்த் சவுத்ரியை எந்த விதியின் கீழ் பேச அனுமதி கொடுத்துள்ளீர்கள். ஒரு உறுப்பினருக்கு பேச அனுமதி கொடுப்பது என்பது உங்களின் உரிமையாக இருக்கலாம். இருப்பினும் அது நியாயமாக இருக்க வேண்டும். ஒருபுறம் எங்களை பேச அனுமதிக்க வேண்டும். இதனால் எம்பி ஒருவர் பேச விரும்பினால் அவர் எந்த விதியின் கீழ் பேசுகிறார் என்பது எனக்கு தெரிய வேண்டும்'' எனக்கூறினார்.
இதனை கேட்ட ஜெகதீப் தன்கர் கோபமானார். இயைதடுத்து அவர், ‛‛இதுபோன்ற வார்த்தைகளை பயன்படுத்த கூடாது. பொறுத்து கொள்ளவும் முடியாது. சவுத்ரி சரண் சிங்கை நீங்கள் அவமானப்படுத்தும் வகையில் பேசுவதை என்னால் பொறுத்து கொள்ள முடியாது. பொதுமக்களுக்காகவும், விவசாயத்துக்காக அவர் பணியாற்றினார். இப்போது ஒவ்வொரு விவசாயியையும் காயப்படுத்துகிறீர்கள். இதனை நினைத்து நாம் வெட்கத்தில் தலை குனிய வேண்டும்'' என கடிந்து கொண்டார். இதற்கு எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் ராஜ்யசபாவில் கடும் அமளி ஏற்பட்டு பரபரப்பான சூழல் நிலவியது குறிப்பிடத்தக்கது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications