பாக்கெட் இல்ல பர்சும் இல்ல! ஆனா நீ பிக்பாக்கெட் அடிச்சனு சொல்றாங்க! ’அவரை’ கிண்டலடித்த ப.சிதம்பரம்!
டெல்லி : சீனர்களுக்கு முறைகேடான முறையில் விசா வழங்கப்பட்ட விவகாரத்தில் கார்த்தி சிதம்பரத்திற்கு தொடர்பு இருப்பதாகக் கூறி வழக்குப்பதிவு செய்த சிபிஐ, அவர் மீது சிறப்பு நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்துள்ள நிலையில், பாக்கெட்டும் இல்லை, பர்சும் இல்லை, ஆனால் நீ பிக்பாக்கெட் அடித்தாய் என்று சொன்னால் எப்படியிருக்கும்?" என்று ப.சிதம்பரம் ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னாள் நிதி அமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தொடர்ந்து ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசை விமர்சித்து வருகிறார்.
பொருளாதார ரீதியாகவும் சிந்ததாந்த ரீதியாகவும் பாஜக அரசு தோல்வி அடைந்துவிட்டதாகவும் அவர் குற்றம்சாட்டி வருகிறார். இந்நிலையில் சமீபத்தின் அவர் மகனான கார்த்தி சிதம்பரம் மீது புதிய குற்றச்சாட்டு ஒன்று சுமத்தப்பட்டுள்ளது.

புதிய வழக்கு
ஏற்கெனவே ஏர்செல் மேசிஸ், ஐஎன்எக்ஸ் மீடியா வழக்குகளில் சிபிஐ, அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் பலமுறை சோதனை நடத்திய நிலையில் தற்போது வெளிநாட்டவர் சிலருக்கு சட்டவிரோதமாக விசா பெற்றுத்தந்ததாக கார்த்தி சிதம்பரம் மீது வழக்கு தொடரப்பட்டு சோதனை நடைபெற்றது.

சீனர்களுக்கு விசா
பஞ்சாபில் வேலை செய்வதற்காக கார்த்தி சிதம்பரம், 250க்கும் மேற்பட்ட சீனர்களுக்கு விசா பெற்றுக் கொடுத்ததாகவும். அதற்காக ரூ.50 லட்சம் வரை கார்த்தி சிதம்பரம் லஞ்ச பெற்றதாக சிபிஐ குற்ற சாட்டியுள்ளது. பஞ்சாபில் நடைபெறும் மின் திட்டம் ஒன்றில் பணியாற்றும் அந்த சீனர்களுக்கு விசாவினை கார்த்தி சிதம்பரம் பெற்றுக் கொடுத்ததாக புகார் எழுந்தது.

கார்த்தி சிதம்பரத்திற்கு சிக்கல்
கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான இடங்கள் மற்றும் தொடர்புடைய டெல்லி, மும்பை, சென்னை உள்ளிட்ட 9 இடங்களில் ஒரே நேரத்தில் இந்த சோதனை நடைபெற்றது. இது அரசியல் ரீதியான பழிவாங்கும் நடவடிக்கை என காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி வருகிறது . இந்நிலையில் பணப் பரிமாற்றமே இல்லாமல் பணச்செலவை செய்தார்கள் என்று குற்றச்சாட்டு சுமத்துவதாக முன்னாள் நிதி அமைச்சரும், கார்த்தி சிதம்பரத்தின் தந்தையுமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

ப.சிதம்பரம் கிண்டல்
இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,, "பணப் பரிமாற்றமே இல்லை, ஆனால் பணச் சலவை செய்தார்கள் என்று குற்றச்சாட்டு. தண்ணீரே இல்லாத குளத்தில் நீ அத்துமீறி நுழைந்து நீச்சல் செய்தாய் என்று சொன்னால் எப்படியிருக்கும்? பாக்கெட்டும் இல்லை, பர்சும் இல்லை, ஆனால் நீ பிக்பாக்கெட் அடித்தாய் என்று சொன்னால் எப்படியிருக்கும்?" பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications