உடைகிறது பாகிஸ்தான் ராணுவம்? விமானப்படைக்கும் - தரைப்படைக்கும் இடையே கலகம்? வரலாற்றில் முதல்முறை

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாகிஸ்தான் ராணுவத்தில் மிகப்பெரிய கலகம் ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. அதாவது பாகிஸ்தான் ராணுவத்தில் விமானப்படை - தரைப்படை இடையே கடுமையான கலகம் ஏற்படும் சூழல் நிலவி வருவதாக கூறப்படுகிறது.

பாகிஸ்தான் ராணுவம் பொதுவாகவே அந்நாட்டு அரசியலில் எல்லா வகையிலும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. கிட்டத்தட்ட 33 ஆண்டுகள் பாகிஸ்தானை ராணுவம் நேரடியாக ஆட்சி செய்துள்ளது, மீதமுள்ள 45 ஆண்டுகள் மறைமுகமாக நாட்டை ஆட்சி செய்துள்ளது. ஜெனரல் அயூப் கான், ஜெனரல் யஹ்யா கான், ஜெனரல் ஜியா-உல்-ஹக் மற்றும் ஜெனரல் பர்வேஸ் முஷாரஃப் ஆகிய நான்கு ராணுவத் தலைவர்கள் பாகிஸ்தானின் அதிபர்களாக பணியாற்றியுள்ளனர்.

யார் நாட்டை ஆட்சி செய்தாலும், பாகிஸ்தானின் வெளியுறவுக் கொள்கை, குறிப்பாக அதன் இந்தியக் கொள்கை, எப்போதும் பாகிஸ்தான் இராணுவத்தின் மூலம் மட்டுமே எடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தானில் யார் ஆட்சியில் இருந்தாலும்.. உண்மையில் அந்நாட்டில் ஆட்சியில் இருப்பது என்னவோ ராணுவம்தான் என்ற கூற்று உள்ளது. கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக பாகிஸ்தான் அரசியல் வரலாற்றில் பிரதமர்கள் மீது ஆதிக்கம் செலுத்துவது பாகிஸ்தான் ராணுவம்தான்.

Pakistan army may break completely Coup may arise as Pakistan air force getting more power as than army

பாகிஸ்தானில் ராணுவ ஜெனரலாக இருப்பவர்கள் சொல்வதே அங்கு சட்டம் என்ற நிலை நிலவி வருகிறது. ஒருவேளை ஜெனரல்கள் சொல்வதை மீறினால் அங்கு ஆட்சியே கவிழும் நிலை கூட ஏற்பட்டு இருக்கிறது. பாகிஸ்தான் வரலாற்றில் இதற்கு முன் இப்படிப்பட்ட ஆட்சி மாற்றங்கள் பல ராணுவம் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் செய்யப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் பிரதமராக 2018ல் இம்ரான் கான் தேர்வான போதே அவர் தன்னை எதிர்த்த எல்லோரையும் எளிதாக சமாளிக்க காரணம் ராணுவம் என்றே கூறப்பட்டது. அந்நாட்டு ராணுவத்தின் செல்லப்பிள்ளையாகவே இம்ரான் கான் இருந்தார். ராணுவம் சொல்வதை எல்லாம் கேட்கும் தலையாட்டி பொம்மை என்று கூட இம்ரான் கான் மீது விமர்சனங்கள் வைக்கப்பட்டன. ஆனால் அப்படிப்பட்ட இம்ரான் கானுக்கும் அந்நாட்டு ராணுவத்திற்கும் கடந்த 2022ம் வருடம் ஏற்பட்ட சில மோதல்கள் அவரின் ஆட்சிக்கே எதிராக திரும்பியது. இதனால் அவரின் ஆட்சியும் கவிழ்ந்தது.

பாகிஸ்தான் ராணுவத்தில் கலகம்

ராணுவத்தில் மிகப்பெரிய கலகம் ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. அதாவது பாகிஸ்தான் ராணுவத்தில் விமானப்படை - தரைப்படை இடையே கடுமையான கலகம் ஏற்படும் சூழல் நிலவி வருவதாக கூறப்படுகிறது. பாகிஸ்தான் ராணுவத்திற்குள் தற்போது விமானப்படையின் கை ஓங்க தொடங்கி உள்ளதாம். காலம் காலமாக அங்கே தரைப்படைதான் அதிக சக்தி வாய்ந்ததாக இருக்கும்.

அங்கே நாட்டை கட்டுப்படுத்துவதும் தரைப்படைதான். ஆனால் அது இப்போது மாற தொடங்கி உள்ளதாம். இந்தியாவுடன் நடந்த மோதலில் தரப்படைக்கு வேலையே இல்லை. விமானப்படைதான் பெரிதாக எல்லா தாக்குதல்களையும் மேற்கொண்டது. இந்தியாவும் பாகிஸ்தானின் விமானப்படையேயே குறி வைத்தது. இந்திய ஏவுகணைகளால் மூன்று விமானப்படை தளங்கள் தாக்கப்பட்டதாக பாகிஸ்தான் இராணுவமே அறிவித்தது. 3 விமானப்படை தளங்கள் இந்திய ஏவுகணைகளால் தாக்கப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்தது. நூர் கான் தளம், முரித் தளம் மற்றும் ஷோர்கோட் தளம் ஆகியவை தாக்கப்பட்டது என்று பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் அகமது ஷெரீப் சவுத்ரி அறிவிப்பு வெளியிட்டு உள்ளனர்.

இப்படி பாகிஸ்தான் விமானப்படைதான் இந்த தாக்குதலில் லைம்லைட்டில் இருந்தது. இதனால் கொஞ்சம் கொஞ்சமாக பாகிஸ்தானின் ராணுவ பவர் விமானப்படை பக்கம் செல்ல தொடங்கி உள்ளதாம். அதாவது தரைப்படை தளபதி அசிம் முனீர் விட விமானப்படைத் தளபதி ஜாகீர் அகமது பாபருக்கு அதிக பவர் வர தொடங்கி உள்ளதாம்.

ஏனென்றால் இனி பாகிஸ்தான் ராணுவம் செய்யப்போகும் ராணுவ செலவுகள், கொள்முதல் எல்லாம் பெரும்பாலும் விமானப்படைக்கே இருக்கும் என்பதால் அங்கே விமானப்படை முடிவுகள் ஓங்கி உள்ளது. இதனால் வரலாற்று ரீதியாக இத்தனை காலம் கோலோச்சி இருந்த தரைப்படை இந்தியாவின் தாக்குதல்கள் காரணமாக சரிவை நோக்கி சென்று.. இப்போது விமானப்படை அங்கே அரசியலை கட்டுப்படுத்தும் சக்தியாக உருவெக்க தொடங்கி உள்ளதாம்.

இதனால் அங்கே ஆட்சியை, அதிகாரத்தை கட்டுப்படுத்தும் வேலைகளை செய்ய விமானப்படை தொடங்கி உள்ளதாம். அதாவது இத்தனை காலம் தரைப்படை செய்ததை விமானப்படை செய்ய தொடங்கி உள்ளதாம். இதனால் தரைப்படை தளபதி அசிம் முனீர் விட விமானப்படைத் தளபதி ஜாகீர் அகமது பாபர் ஆகியோருக்கு இடையே கடுமையான மோதல் ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

இரண்டு பேருக்கும் இடையில் கருத்து வேறுபாடு உச்சம் அடைந்து உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதோடு இது பாகிஸ்தான் ராணுவத்தில் கலகம் ஏற்படும் சூழல் ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது .

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+