பாகிஸ்தான் சைபர் அட்டாக்.. பாதுகாப்பு துறை நிறுவனங்களின் ‛வெப்சைட்டுகள்’ முடக்கம்.. டேட்டா திருட்டு?
டெல்லி: நம் நாட்டுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே மோதல் என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க நம் படை வீரர்கள் தயாராகி வருகின்றனர். இந்நிலையில் தான் மத்திய பாதுகாப்பு துறை நிறுவனங்களின் இணையதளத்தை பாகிஸ்தான் ஹேக்கர்கள் ஹேக் செய்து தரவுகளை திருடி உள்ளதாக தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாதம் 22ம் தேதி பயங்கவராதிகள் தாக்குதல் நடத்திய 26 சுற்றுலா பயணிகளை கொன்றனர். இந்த கோர தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத அமைப்பான ‛தி ரெசிஸ்டண்ட் ஃப்ரண்ட்' பொறுப்பேற்றுள்ளது. இதற்கு பதிலடி கொடுக்க நம் படை வீரர்கள் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.

இதனால் பாகிஸ்தான் நடுங்கிப்போய் உள்ளது. இதற்கிடையே தான் நம் நாட்டுக்கு எதிராக பல்வேறு சதிவேலைகளை பாகிஸ்தான் தொடங்கி உள்ளது. குறிப்பாக சைபர் தாக்குதலை பாகிஸ்தான் ஹேக்கர்கள் முன்னெடுத்துள்ளனர்.
மிலிட்டர் இன்ஜினியர் சர்வீசஸ் மற்றும் மனோகர் பாரிக்கர் பெயரில் இயங்கும் பாதுகாப்பு துறையின் படிப்பு மற்றும் பகுப்பாய்வு நிறுவனம் ( Manohar Parrikar Institute of Defence Studies and Analysis) மற்றும் ஆர்மர்ட் வெஹிள் நிகம் லிமிடெட் உள்ளிட்ட பாதுகாப்பு துறை சார்ந்த அமைப்புகளின் இணையதளங்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதன்படி இன்று மத்திய பாதுகாப்பு துறையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் சில முக்கிய நிறுவனங்களில் இணையதளங்கள் ‛ஹேக்' செய்யப்பட்டுள்ளது. அதாவது மிலிட்டர் இன்ஜினியர் சர்வீசஸ் மற்றும் மனோகர் பாரிக்கர் பெயரில் இயங்கும் பாதுகாப்பு துறையின் படிப்பு மற்றும் பகுப்பாய்வு நிறுவனம் ( Manohar Parrikar Institute of Defence Studies and Analysis) மற்றும் ஆர்மர்ட் வெஹிள் நிகம் லிமிடெட் உள்ளிட்ட பாதுகாப்பு துறை சார்ந்த அமைப்புகளின் இணையதளங்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் இணையதளங்களை முடக்கவிட்டதாக பாகிஸ்தான் ஹேக்கர்கள் பதிவு செய்துள்ளனர். அதன்படி ஆர்மர்ட் வெஹிள் நிகாம் லிமிடெட்டின் இணையதள பக்கத்தில் நம் நாட்டின் டாங்கியில் பாகிஸ்தான் கொடியை ஒட்டி பதிவிட்டுள்ளனர். அதேபோல் மனோகர் பாரிக்கர் பாதுகாப்பு துறை ஆய்வு நிறுவனத்தின் இணையதள பக்கத்தில் 1,600 பயனர்களிடம் இருந்து 10 ஜிபிக்கும் மேற்பட்ட தரவுகளை பெற்றுள்ளோம் என்று பதிவு செய்துள்ளனர்.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க நம் நாடு தீவிரமாக தயாராகி வருகிறது. இதற்கிடையே தான் அவ்வப்போது பாகிஸ்தான் ஹேக்கர்கள் நம் ராணுவ இணையதளங்களை முடக்கும் வகையில் முயற்சிகளை மேற்கொண்டு வந்தனர். இந்த முயற்சிகள் அனைத்தும் தடுக்கப்பட்ட நிலையில் இன்று சில இணையதளங்களை பாகிஸ்தான் ஹேக்கர்கள் அணுகி உள்ளனர். இதில் இருந்து டேட்டாக்களை திருடி உள்ளதாக பாகிஸ்தான் ஹேக்கர்கள் கூறியிருந்தாலும் கூட அதுபற்றி நம் பாதுகாப்பு துறை நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இதுதவிர பாகிஸ்தான் ஹேக்கர்களின் நடவடிக்கைகளை தீவிரமாக நம் நாடு கண்காணிக்க தொடங்கி உள்ளதோடு, ஹேக்கர்களால் ஹேக் செய்ய முடியாத வகையில் நம் பாதுகாப்பு துறை சார்ந்த இணையதளங்களில் நடவடிக்கைகளும் தொடங்கப்பட்டுள்ளது. தற்போதைய சூழலில் இந்த பாகிஸ்தானின் சைபர் அட்டாக் பற்றி நம் நாட்டின் பாதுகாப்பு துறை சார்பில் எந்த விளக்கமும் தரப்படவில்லை. பாதுகாப்பு துறை நிபுணர்கள் குறிப்பிட்ட இணையதளங்களில் இருந்து தரவுகள் ஏதேனும் திருடப்பட்டுள்ளதா? என்பது பற்றி ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னதாக ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள ராணுவப் பள்ளி (APS), APS ராணிக்கேத், ராணுவ நல வீட்டுவசதி அமைப்பு (AWHO) உள்ளிட்டவற்றின் டேட்டோபேஸ் இணையதளங்கள் மற்றும் இந்தியா விமானப்படையின் வேவைாய்ப்பு போர்ட்டல் உள்ளிட்டவை மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தியாவில் முதல்முறை! சிறந்த பணியிட மகிழ்ச்சி விருதுகள் அறிமுகம்! ஹர்ஷ் கோயங்கா தலைமையில் மெகா டீம் -
50 ஆண்டுகளில் நடக்காத ஒன்று.. தென் மாநிலங்களுக்கு தண்டனையா! 1971 vs 2026.. அனல் பறக்கும் அரசியல்! -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு... தண்ணீர் ஊற்றி சரி செய்யும் டெலிவரி ஊழியர்! கொடுமையை பாருங்க! -
இந்தியாவுக்கு வந்து இருக்கோம்.. பயத்துடன் இருந்த பாகிஸ்தான் பெண்! கடைசியில் என்ன ஆச்சு தெரியுமா? -
பாகிஸ்தான் சட்டையை பிடிக்கும் அமீரகம்! "அந்த ₹25,000 கோடியை உடனே திருப்பி தாங்க.." எகிறும் நெருக்கடி -
நீ கைய குடு பங்கு! அமெரிக்கா முட்டி மோத.. சத்தமில்லாமல் இந்தியா பார்த்த வேலை! தோள் கொடுத்த ரஷ்யா! -
பாகிஸ்தான் நிலைமையை பாருங்க.. இதுல காஷ்மீர் வேணுமாம்! இப்படி ஆயிடுச்சே! -
அமெரிக்காவுடன் 2ம் கட்ட பேச்சுவார்த்தை.. ஈரானுக்கு பறந்த பாகிஸ்தான் டீம்! அடுத்து என்ன நடக்கும்? -
"பில் கட்டக் கூட காசு இல்லையா?" கம்பி நீட்டிய பாகிஸ்தான்.. இது எவ்வளவு பெரிய அசிங்கம் தெரியுமா -
"எல்லை மீறி போறீங்க.." டெல்லி சாலைகளில் ஓடும் டிரம்ப் ஆட்டோக்கள்.. அப்படி என்ன காரணம் தெரியுமா? -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி












Click it and Unblock the Notifications