பஞ்சமி நிலம்.. மத்திய அமைச்சர் முருகன் மீதான திமுகவின் அவதூறு வழக்குக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை
டெல்லி: சென்னையில் உள்ள முரசொலி அறக்கட்டளை அலுவலகம் அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலம் என மத்திய அமைச்சர் எல் முருகன் பேசியிருந்தார். இவருக்கு எதிராக முரசொலி அறக்கட்டளை சார்பில் தொடரப்பட்டுள்ள கிரிமினல் அவதூறு வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி அமைச்சரைவில் மத்திய இணை அமைச்சராக இருப்பவர் எல் முருகன். தமிழக முன்னாள் பாஜக தலைவரான இவர் தேசிய எஸ்சி, எஸ்டி ஆணையத்தின் துணை தலைவராகவும் பொறுப்பு வகித்துள்ளார்.

இந்நிலையில் தான் தேசிய எஸ்சி, எஸ்டி ஆணையத்தின் துணைத் தலைவராக பதவி வகித்தபோது வேலூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் முருகன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதாவது சென்னை கோடம்பாக்கத்தில் முரசொலி அறக்கட்டளை அலுவலகம் உள்ள நிலம் பஞ்சமி நிலம் என அவர் தெரிவித்தார். இதற்கு திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் அவதூறு பரப்பும் வகையில் அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைப்பதாக திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டதோடு, அவர் மீது அவதூறு வழக்கு தொடரப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து மத்திய அமைச்சர் முருகனுக்கு எதிராக முரசொலி அறக்கட்டளை சார்பில் கிரிமினல் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு என்பது சென்னையில் உள்ள எம்பி, எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் தொடரப்பட்டது. இந்த வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது.
இதற்கிடையே தனக்கு எதிரான இந்த கிரிமினல் அவதூறு வழக்கை ரத்து செய்ய வேண்டும் என முருகன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
மேலும் அவதூறு வழக்கை 3 மாதங்களில் விசாரித்து முடிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் எல் முருகன் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் மனு தொடர்பாக 6 வாரங்களில் பதிலளிக்க முரசொலி அறக்கட்டளைக்கு உத்தரவிட்டது. அதோடு மத்திய அமைச்சர் முருகன் மீதான அவதூறு வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.
-
அதிமுக வேட்பாளர் பட்டியலில் இதை கவனிச்சீங்களா! ஆதிதிராவிடர்கள் இல்லையே.. ஷாக் ரிப்போர்ட் -
தர்மத்திற்காக கொடுத்தாரா.. தவறாக கொடுத்தாரா.. பாஜகவின் 27 தொகுதிகள்... எடப்பாடி தப்புக்கணக்கு! -
மொட்டை கடுதாசி கொடுத்த விஜய்.. பொன்ராஜ் மீதான புகார் கடிதத்தை பாருங்க! இதெல்லாம் வேலைக்கே ஆகாது! -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
இன்னொரு ரவுண்டு மழை.. இந்த மாவட்டங்களுக்கு ஜில் அப்டேட்! குட் நியூஸ் சொன்ன வானிலை மையம் -
காஞ்சிபுரம் - பெரம்பலூர் உள்பட 4 மாவட்டங்களில் புதிய எஸ்பிக்கள் நியமனம்.. தேர்தல் ஆணையம் அதிரடி -
வணிக சிலிண்டர்கள் விநியோகத்தை 70% ஆக உயர்த்திய மத்திய அரசு.. யாருக்கு முன்னுரிமை? -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஈரோட்டில் வெளுத்த வெயில்.. 100 டிகிரியை தாண்டியது! வேலூருக்கு இரண்டாவது இடம் -
Periasamy Kumaran: இங்கிலாந்திற்கான இந்தியாவின் புதிய தூதராக பெரியசாமி குமரன் நியமனம்! யார் தெரியுமா இவர்?












Click it and Unblock the Notifications