டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"மண்ணும் இமயமலை எங்கள் மலையே.." பாரதியார் கவிதையை மேற்கோள்காட்டி பேசிய மோடி

Google Oneindia Tamil News

டெல்லி: கொரோனாவிற்கு பிறகு உலகின் சூழ்நிலை மாறியுள்ளது. இந்தியாவில் மத்திய அரசின் திட்டங்களால் ஏழை மக்கள் சொந்த வீடு கட்டி லட்சாதிபதியாக மாறி வருகின்றனர்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த மாதம் 31-ந் தேதி தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். சுமார் 50 நிமிடங்கள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரை நிகழ்த்தினார்.

ஜனாதிபதியின் இந்த உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடைபெற்றது. வழக்கமான அமளி துமளி இல்லாமல் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இம்முறை மத்தியில் ஆளும் பாஜக அரசை மிக கடுமையாக, ஆக்ரோஷமாக விமர்சித்தனர்.

இந்த விவாதங்களுக்கு பதிலளிக்கும் வகையில் இன்று மாலை லோக்சபாவில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார். எதிர்க்கட்சிகளின் காட்டமான விமர்சனங்களுக்கு பிரதமர் என்ன பதில் அளிப்பார் என்பது எதிர்பார்ப்பாக உள்ளது.

PM Modi to reply to debate on Motion of thanks to Presidents address in Lok Sabha-Live

Newest First Oldest First
7:16 PM, 7 Feb

எதிர்க்கட்சிகள் பணவீக்கப் பிரச்சினையை இங்கு எழுப்பியுள்ளன தங்கள் அரசாங்கம் ஆட்சியில் இருக்கும்போதே இந்த விஷயத்தை எழுப்பினால் நன்றாக இருக்கும் தொற்றுநோய்களிலும் எங்கள் அரசாங்கம் பணவீக்கத்தை சமாளிக்க முயற்சித்தது. 2014-2020ல் பணவீக்க விகிதம் 5%க்கும் குறைவாக இருந்தது - மக்களவையில் பிரதமர் மோடி கொரியப் போர் பணவீக்கத்தை ஏற்படுத்தியதாக பண்டித நேரு கூறியிருந்தார் அமெரிக்காவில் ஏற்படும் எந்த தொந்தரவும் பணவீக்கத்தை ஏற்படுத்துவதாக அவர் தெரிவித்தார் பணவீக்கத்தையும் கைவிட்டார் லோக்சபாவில் பிரதமர் மோடி பேச்சு
6:51 PM, 7 Feb

காங்கிரஸின் ப சிதம்பரம் பற்றி மோடி லோக்சபாவில் பேச்சு ப.சிதம்பரம் பொருளாதாரம் குறித்த கட்டுரைகளை நாளிதழ்களில் எழுதி வருகிறார். 2012 ஆம் ஆண்டில், தண்ணீர் பாட்டிலுக்கு 15 ரூபாய் செலவழிக்கப்பட்டது ஐஸ்கிரீமுக்கு 20 ரூபாயும் செலவழிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கவலைப்படவில்லை கோதுமை மற்றும் அரிசியின் விலைகள் 1 ரூபாய்க்கு தற்போது உயர்த்தப்பட்டது பொதுமக்களால் பொறுத்துக்கொள்ள முடியாது - பிரதமர்
6:43 PM, 7 Feb

நமது இளைஞர்கள், செல்வத்தை உருவாக்குபவர்கள் என மோடி பேச்சு தொழில்முனைவோரை பயமுறுத்தும் அணுகுமுறையில் எங்களுக்கு உடன்பாடு இல்லை 'மேக் இன் இந்தியா' பற்றிய ஆலோசனைகளை ஒருவர் பெறலாம் மேக் இன் இந்தியா தோல்வியடையும் என்று எந்த மனநிலையில் கூற முடியும்? ' மேக் இன் இந்தியா' என்று கேலி செய்பவர்கள் தாங்களே நகைச்சுவையாக மாறிவிட்டனர் - மோடி
6:41 PM, 7 Feb

தேசத்தின் பாதுகாப்பு பலமாக உள்ளதாக மோடி பேச்சு பாதுகாப்புத் துறையில் தன்னம்பிக்கையுடன் இருப்பது மிகப்பெரிய தேசிய சேவையாகும் - பிரதமர்
6:34 PM, 7 Feb

கொரோனா காலத்தில் புலம்பெயர்ந்தோரை வைத்து அரசியல் செய்தனர் புலம் பெயர்ந்த மக்களை வைத்து அரசியல் செய்ததாக காங்கிரஸைப் பிரதமர் மோடி குற்றம் சாட்டினார் எல்லாப் பிரச்சினைகளையும் அரசாங்கங்களால் மட்டுமே தீர்க்க முடியும் என்று நாங்கள் நம்பவில்லை.
6:34 PM, 7 Feb

தேசத்தின் மக்கள், தேசத்தின் இளைஞர்கள் மீது நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம். உதாரணத்திற்கு ஸ்டார்ட் அப் துறையை எடுத்துக் கொள்ளுங்கள் ஸ்டார்ட்-அப்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது, இது நமது மக்களின் பலத்தை காட்டுகிறது - பிரதமர் மோடி
6:32 PM, 7 Feb

நமது சிறு விவசாயிகளை பலப்படுத்த வேண்டும் - மோடி எங்கள் கவனம் சிறு குறு விவசாயிகளின் மீதுதான் உள்ளது என லோக்சபாவில் மோடி பேச்சு சிறு விவசாயிகளின் வலியை அறியாதவர்களுக்கு அவர்களின் பெயரில் அரசியல் செய்ய எந்த தகுதியும் இல்லை:
6:28 PM, 7 Feb

பிஎம் கதி சக்தி யோஜனா திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் சரக்குப்போக்குவரத்து எளிதாக செல்கிறது போக்குவரத்து உள் கட்டமைப்பு சரியாக ஏற்படுத்தப்பட்டால் நாட்டில் வேலை வாய்ப்பு அதிகரிக்கும் - மோடி
6:18 PM, 7 Feb

சிறு குறு தொழில் வளர்ச்சிக்காக பல நடவடிக்கை எடுத்துள்ளோம் ஒன்றரை லட்சம் சிறு குறு தொழில்கள் இந்த திட்டங்களால் வளர்ச்சியடைந்துள்ளன மக்களோடு மக்களாக இருப்பவர்களுக்கு சிறு குறு தொழிலில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி பற்றி தெரியும் பெண்களுக்கு எந்த வித உத்தரவாதமும் இன்றி வங்கிகளில் கடன் அளிக்கப்படுகிறது சாலையோர வியாபாரிகளுக்கும் வங்கிகளில் எளிதாக கடன் கிடைக்கிறது
6:15 PM, 7 Feb

நகரங்களையும் கிராமங்களையும் இணைக்கும் போக்குவரத்து வசதியை ஏற்படுத்தியுள்ளோம் சாலை வசதி, விமான போக்குவரத்து வசதி எந்த அளவிற்கு வளர்ச்சியடைந்திருக்கிறது என பார்க்க வேண்டும் நாம் வேலை வாய்ப்புக்காக பல திட்டங்களை உருவாக்கியுள்ளோம் கடந்த 7 ஆண்டுகாலமாக புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளோம் இது இந்தியாவிற்கு மிகப்பெரிய முன்னேற்றம் என மோடி பேச்சு
6:14 PM, 7 Feb

60 வருடங்கள் ஆட்சியில் இருந்தவர்கள் பல பகுதிகளில் குடிநீர் வசதிகள் கூட செய்து தரவில்லை பைல்களில் கையெழுத்து போட்டு விட்டு செல்பவர்களுக்கு இதைப்பற்றி ஒன்றும் தெரியாது நாம் 130 கோடி மக்களின் வளர்ச்சிக்காக பாடு படுகிறோம் அவர்கள் கோப்புகளில் கையெழுத்து போடுவதற்காக பாடுபடுகின்றனர்
6:13 PM, 7 Feb

20ஆம் நூற்றாண்டில் வகுக்கப்பட்ட சட்டங்கள் 21 ஆம் நூற்றாண்டிற்கு உதவாது எனவேதான் நாம் புதிய சட்டங்களை உருவாக்கி வருகிறோம் என மோடி பேச்சு
6:11 PM, 7 Feb

ஏழ்மையில் இருந்து விடுபட சிறு குறு விவசாயிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் சிறு குறு விவசாயிகளுக்கு முக்கியத்துவம் அளித்தால் கிராம பொருளாதாரம் உயரும் கிராம பொருளாதாரம் உயர்ந்தால் நாட்டின் பொருளாதாரம் உயரும் என மோடி நம்பிக்கை
6:09 PM, 7 Feb

பெருந்தொற்று காலத்தில் ஏழைகளும், விவசாயிகளும் மிகப்பெரிய பணியை செய்துள்ளனர் ரசாயன உரங்களை நாமே உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு அளித்தோம் சிறு, குறு விவசாயிகளை காப்பாற்றவும் முயற்சி செய்து வருகிறோம்
6:06 PM, 7 Feb

பெருந்தொற்று காலத்தில் நாட்டை காப்பாற்ற புதிய சீர்திருத்தங்களை உருவாக்க நினைத்தோம் நாட்டின் வளர்ச்சிக்காக புதிய திட்டங்களை உருவாக்கினோம் ஏழை எளிய மக்கள் உபயோகப்படுத்தும் வகையில் அனைத்தையும் எளிமையாக்கினோம் நம்முடைய பொருளாதார வளர்ச்சி வளர்ந்து கொண்டே உள்ளது
6:06 PM, 7 Feb

பிரதமர் மோடியின் பேச்சுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சியினர் இடையூறு செய்கின்றனர் அவையில் இருந்து யாரும் உங்களை வெளியேற்ற முடியாது என மோடி கிண்டல் சத்தம் போடாமல் தயவு செய்து அமருங்கள் என மோடி பேச்சு
6:04 PM, 7 Feb

அடுத்த 100 ஆண்டுகளுக்கு காங்கிரஸ் ஆட்சிக்கு வர முடியாது என தீர்மானித்து விட்டது
6:02 PM, 7 Feb

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை உலகமே ஆச்சரியத்தோடு பார்க்கிறது வளர்ந்த நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்ப இந்தியாவும் உயர்ந்துள்ளது நாம் விவசாயத்துறையில் அடைந்த வளர்ச்சி மிக உயர்ந்தது என மோடி பெருமிதம்
6:02 PM, 7 Feb

50 ஆண்டுகாலத்தில் இப்படி ஒரு வளர்ச்சியை நாம் அடைந்ததில்லை பசி, பட்டினி சாவுகள் ஏற்படக்கூடாது என தேவையான உணவுப்பொருட்களை அளித்தோம் விவசாய உற்பத்தியும் ஏற்றுமதியும் உச்சத்தை தொட்டுள்ளது என மோடி பெருமிதம்
5:59 PM, 7 Feb

கொரோனா காலத்தில் யோகா மக்களுக்கு உதவியது என மோடி பேச்சு இந்த அவை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சியினர் செயலுக்கு சாட்சியாக உள்ளது ஆட்சிக்கு வர வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு இல்லை என்றே நான் நினைக்கிறேன் கொரோனா காலத்தில் எதிர்கட்சியினர் தவறான கருத்துக்களை மக்களிடம் பரப்பிக்கொண்டிருந்தனர்
5:57 PM, 7 Feb

மகாத்மா காந்தியின் கனவுகள் நனவாக வேண்டும் என்று நான் விரும்புகிறேன்
5:57 PM, 7 Feb

காந்தியின் கனவுகள் நனவாக தொடர்ந்து நாம் பாடுபட்டுக்கொண்டிருக்கிறோம்
5:56 PM, 7 Feb

மகாத்மா காந்தியின் கனவுகள் நனவாக வேண்டும் என்பதை நீங்கள் விரும்பவில்லை
5:55 PM, 7 Feb

கொரோனா தொற்று மோடியின் புகழை கெடுத்து விடும் என்று பலர் மனதில் நினைத்தனர்
5:55 PM, 7 Feb

நடந்தது என்ன என்று உங்கள் அனைவருக்கும் தெரியும் என மோடி பேச்சு
5:54 PM, 7 Feb

இந்த நாட்டு மக்கள் எத்தகைய துயரை சந்தித்து உள்ளனர் என மோடி கேள்வி
5:54 PM, 7 Feb

அனைத்து கட்சியினரும் ஒருமுறை சுய பரிசோதனை செய்து கொள்ளுங்கள்
5:53 PM, 7 Feb

கொரோனா பரவலை காங்கிரஸ் கட்சி அரசியல் ஆக்கியது என மோடி குற்றச்சாட்டு
5:53 PM, 7 Feb

மோடி பேசும் போது எதிர்கட்சியினர் பேச விடாமல் கூச்சலிடுகின்றனர்
5:53 PM, 7 Feb

நான் யாருடைய பெயரையும் குறிப்பிட்டு சொல்ல வில்லை என மோடி பேச்சு
READ MORE

English summary
PM Modi Speech Today in Parliament Budget Session (நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேச்சு இன்று) LIVE: Prime Minister Narendra Modi will reply to the debate on the Motion of Thanks to the President's address in the Lok Sabha on Monday evening in the ongoing Budget Session of the Parliament.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X