லோக்சபாவில் திருமாவளவன் 'உக்கிரமாக' பேசிய போது திடீரென துண்டிக்கப்பட்ட மைக்.. விடாமல் முழக்கம்!
டெல்லி: நாடாளுமன்றத்தின் லோக்சபாவில் அரசியல் சாசனம் மீதான விவாதத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் பேசுகையில் அவரது மைக் இணைப்பு துண்டிக்கப்பட்டது. அரசியல் சாசனத்தை உருவாக்கிய அம்பேத்கர், எதிர்கால இந்தியா குறித்து வெளியிட்ட கவலைகளை திருமாவளவன் பட்டியலிட்ட போது அவரது மைக் துண்டிக்கப்பட்டது. ஆனாலும் தொடர்ந்து மைக் இல்லாமலேயே திருமாவளவன் பேசினார்.
லோக்சபாவில் விசிக தலைவர் தொல். திருமாவளவன் பேசியதாவது: அரசமைப்புச் சட்டம் ஏற்கப்பட்டு 75 ஆண்டுகளைத் தொட்டிருக்கிறோம். இதனைக் கொண்டாடும் வகையில் புரட்சியாளர் அம்பேத்கரை இந்த சபை போற்றிக் கொண்டிருக்கிறது. அம்பேத்கர் 3 ஆண்டுகாலம் அல்லும் பகலும் அயராது உழைத்து ஒரு புதிய இந்தியாவை சமத்துவ இந்தியாவைக் கட்டமைப்பதற்காக இந்த நாட்டுக்கு அருட்கொடையாக வழங்கியதுதான் இந்திய அரசமைப்புச் சட்டம்.

இது சட்டம் மட்டுமல்ல.. புதிய இந்தியாவை கட்டமைக்கிற கோட்பாடும் ஆகும். இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் முகப்புரை இதனை விளக்குகிறது. நாம் எத்தகைய இந்தியாவை எதிர்காலத்தில் கட்டமைக்கப் போகிறோம் என்பதை அரசியல் சாசனத்தின் முகப்புரையில் உறுதிப்படுத்தி இருக்கின்றனர்.
சோசலிசம், செக்குலரிசம், பன்முகத்தன்மை, கூட்டாட்சி ஆகிய இந்த 4-ம் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கூறுகள். அவை அட்டுமின்றி நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய 4-ம் புதிய இந்தியாவை கட்டமைப்பதற்கான தூண்களாகும். இவற்றை பாதுகாப்பதுதான் இன்றைய சவாலாக இருக்கிறது.
அம்பேத்கரின் பெருமைகளை இங்கு பேசுகிற போது, அவரை எதிர்த்தது- அவருக்கு துரோகம் செய்தது என சுட்டிக்காட்டியது நீயா? நானா? என்கிற வகையில்தான் இருந்தது. 75 ஆண்டுகாலத்தில் எந்த அளவுக்கு அரசியலமைப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்தி இருக்கிறோம்; வெற்றிகரமாக அவற்றை நடைமுறைப்படுத்தி புதிய இந்தியாவை கட்டி எழுப்பி இருக்கிறோம் என்பது குறித்து இங்கே உரையாடல் இல்லை என்பது வேதனை தருகிறது.
அம்பேத்கர் இந்த அரசமைப்புச் சட்டம் ஏற்கப்படுவதற்கு முதல்நாள், 1949-ம் ஆண்டு நவம்பர் 25-ந் தேதி அரசியல் நிர்ணயசபையில் ஆற்றிய உரை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. 3 ஆண்டுகாலம் அரும்பாடுபட்டு உருவாக்கிய இந்த அரசியலமைப்புச் சட்டம் குறித்த கவலையை வெளிப்படுத்தினார். 1950 ஜனவரி 26-ந் தேதி இந்த தேசம் குடியரசாகிவிடும்; அது மகிழ்ச்சி அளிக்கிறது; ஆனால் இந்த தேசத்தின் எதிர்காலத்தை எண்ணி நான் வேதனைப்படுகிறேன்; அரசியல் ஜனநாயகத்தை வென்றெடுத்துவிட்டோம்; ஆனால் சமூக ஜனநாயகம்; பொருளாதார ஜனநாயக கேள்விக்குறியாக நிற்கிறது என்றார் அம்பேத்கர். இவற்றை எல்லாம் நாம் எப்படி நடைமுறைப்படுத்தப் போகிறோம் என கவலையை வெளியிட்டவர் அம்பேத்கர்.
சுதந்திரம் இல்லாமல் சமத்துவம், சகோதரத்துவம் இங்கே நடைமுறைக்கு வராது; சமத்துவம் இல்லாமல் சுதந்திரம், சகோதரத்துவம் இங்கே வெற்றி பெறாது- ஆகவே ஒவ்வொன்றையும் தனித்தனியே பிரிக்க முடியாது; இந்த மூன்றும் வெற்றிகரமாக நடைமுறைக்கு வரும் போதுதான் இங்கே சமூக ஜனநாயகத்தை உருவாக்க முடியும் என்கிற கவலையை பதிவு செய்தவர் அம்பேத்கர். இதற்கு தடைகளாக இருப்பவற்றைத் தூக்கி எறிய வேண்டும் என்று சொன்னவர் அம்பேத்கர். இது தேசமாகவே இன்னமும் வடிவம் பெறவில்லை என்றார் அம்பேத்கர்.
எதிர்காலத்தில் வர இருப்பவர்கள் நாட்டை விட மத நம்பிக்கைகள் மேலானதா? மதநம்பிக்கைகளை விட நாடு மேலானதா? என்ற கேள்விக்கு யார் விடைசொல்லப் போகிறார்கள்? என கேள்வி எழுப்பியவர் அம்பேத்கர். ஒருவேளை நாட்டை விட மத நம்பிக்கைகள் மேலானது என நம்பினால் இந்த தேசம் மீண்டும் சுதந்திரத்தை இழக்க நேரிடும் என்றார் அம்பேத்கர். இந்த தேசத்தின் சுதந்திரத்தை மீண்டும் வென்றெடுக்க முடியாத நிலை உருவாகும் என்றார் அம்பேத்கர். 75 ஆண்டுகளுக்கு முன்னாலேயே அம்பேத்கரால் தீர்க்கதரிசனமாக உணர முடிந்திருக்கிறது.. மதநம்பிக்கை உள்ளவர்களின் கைகளில் ஆட்சி அதிகாரம் சிக்கிக் கொண்டால்... என பேசியபோது திருமாவளவனின் மைக் இணைப்பு துண்டிக்கப்பட்டு மற்றொரு எம்பி பேச அழைக்கப்பட்டார். ஆனாலும் திருமாவளவன் தொடர்ந்து பேசினார். சிறிது நேரம் மைக் இல்லாமலேயே உரத்த குரலில் தாம் சொல்ல வந்த கருத்துகளை முன்வைத்தார் திருமாவளவன்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications