டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ராஜ்யசபாவில் மத்திய அமைச்சர் கையில் இருந்த பெகாசஸ் அறிக்கையை பிடுங்கி கிழித்த திரிணாமுல் எம்.பி.!

Google Oneindia Tamil News

டெல்லி: நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. இந்த கூட்டத் தொடர், ஆகஸ்ட் 13ம் தேதி வரை நடைபெறும். மொத்தம் 19 நாட்கள் அதாவது அமர்வுகள் இந்த கூட்டத் தொடரில் இருக்கும்.

நாடாளுமன்றத்தில் ஆரோக்கியமான கலந்துரையாடல்கள் நடக்க ஒத்துழைக்குமாறு முன்னதாக, பிரதமர் மோடி அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

கொரோனா விவகாரத்தில் மத்திய அரசு கடும் பின்னடைவை சந்தித்துள்ளது, விவசாய சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்துவது, எதிர்க்கட்சியினர், பத்திரிக்கையாளர்கள் மொபைல் போன்கள் ஒட்டுக் கேட்கப்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு உள்ளிட்டவை குறித்து எதிர்க்கட்சிகள் புயலை கிளப்ப திட்டமிட்டுள்ளனர்.

Parliament LIVE Updates: Monsoon Session Begins Today as Oppn Plans to Corner Government

Newest First Oldest First
3:11 PM, 22 Jul

பெகாசஸ்: ராஜ்யசபாவில் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கையில் இருந்த அறிக்கையை பிடுங்கி கிழித்து எறிந்தார் திரிணாமுல் எம்.பி. சந்துனு சென்
11:20 AM, 22 Jul

எதிர்க்கட்சி எம்.பிக்கள் தொடர் முழக்கத்தால் லோக்சபா நடவடிக்கைகளும் பகல் 12 மணி வரை ஒத்திவைப்பு
11:19 AM, 22 Jul

நாடாளுமன்ற வளாகத்தில் விவசாய சட்டங்களுக்கு எதிராக காங். எம்.பிக்களுடன் ராகுல் காந்தி போராட்டம். எதிர்க்கட்சிகளின் தொடர் முழக்கத்தால் ராஜ்யசபா பகல் 12 மணி வரை ஒத்திவைப்பு
4:56 PM, 19 Jul

அமைச்சர் விளக்கம்: 'பெகாசஸ் உளவு திட்டம்' குறித்து லோக்சபாவில் பேசிய ஐ.டி அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், "மிகவும் பரபரப்பான கதை ஒன்று நேற்று இரவு ஒரு வலைத்தளத்தில் வெளியிடப்பட்டது. இந்த கதையைச் சுற்றி பல குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. பாராளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடருக்கு முன்பு இப்படி ஒரு செய்தி வெளியாகியுள்ளது. இது தற்செயலாக இருக்க முடியாது. " என்றார். இந்த நிலையில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும், நாளை காலை 11 மணிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
10:46 AM, 19 Jul

நாடாளுமன்ற கூட்டம்.. மழையில் குடை பிடித்தபடி பிரதமர் மோடி பேட்டி
10:43 AM, 19 Jul

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் சற்று நேரத்தில் தொடங்க உள்ளது. டெல்லியில் பலத்த மழை பெய்து வருவதால் பிரதமர் மோடி பேட்டி. மழைக்கால கூட்டத்தொடரை நடத்த அனைவரின் ஒத்துழைப்பும் தேவை. ஆக்கப்பூர்வமான விவாதத்திற்கு எதிர்கட்சியினர் ஒத்துழைப்பு தர வேண்டும்
10:43 AM, 19 Jul

தடுப்பூசி போட்டுக்கொண்டு பாகுபலி போல உருவாக வேண்டும். டெல்லியில் நாடாளுமன்றம் முன்பு பிரதமர் மோடி பேட்டி. மழைக்கால கூட்டத்தொடரில் ஆக்கப்பூர்வமான விவாதம் நடைபெற வேண்டும். மழையில் குடை பிடித்துக்கொண்டே பிரதமர் மோடி பேட்டி. அனைத்து விவகாரங்கள் குறித்தும் விவாதம் நடத்த அரசு தயாராக உள்ளது. மத்திய அரசு கூறும் விளக்கங்களை எதிர்கட்சியினர் கேட்க தயாராக இருக்க வேண்டும்
9:39 AM, 19 Jul

காங்கிரஸ் லோக்சபா உறுப்பினர் மாணிக்கம் தாகூர், எரிபொருள் விலை உயர்வு மற்றும் பணவீக்கம் தொடர்பான பிரச்சினைகள் குறித்து விவாதிக்க ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவர திட்டமிட்டு இது தொடர்பாக நோட்டீஸ் வழங்கியுள்ளார்.
9:39 AM, 19 Jul

இந்த கூட்டத் தொடரில், 17 சட்டங்கள் அறிமுகம், பரிசீலனை அல்லது நிறைவேற்றும் கட்டத்தில் உள்ளன.

English summary
Parliament LIVE Updates in Tamil: The first day of Monsoon Session in Parliament is starting today which is expected to be stormy with the Opposition planning to corner the government on the farmers’ stir, price rise and handling of the second wave of Covid-19.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X