அதானி, ராகுலால் கடும் மோதல்.. நாடாளுமன்ற இருசபைகளும் 2 நாளாக முடங்கியது.. நாளைக்கு ஒத்திவைப்பு!
ராகுல் காந்தி லண்டன் பேச்சு மற்றும் அதானி விவகாரம் தொடர்பாக ஆளும் கட்சி, எதிர்க்கட்சிகள் இடையே கடும் கருத்து மோதல் ஏற்பட்டதால் இருசபைகளும் ஒத்திவைக்கப்பட்டது.
டெல்லி: மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் லண்டன் விமர்சனத்துக்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதை நாடாளுமன்றத்தில் இன்றும் பாஜக வலியுறுத்த திட்டமிட்டுள்ளது. பாஜகவின் இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவிக்கக் கூடும் என்பதால் நாடாளுமன்ற இரு சபை நடவடிக்கைகளும் பாதிக்கப்படக் கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி இருசபைகளிலும் இன்று அதானி விவகாரம் மற்றும் ராகுல் விவகாரங்கள் தொடர்பாக ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியினர் இடையே கடும் அமளி ஏற்பட்டது. இதனால் 2வது நாளாக இன்றும் 2 சபைகள் முடங்கியதோடு நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
அண்மையில் லண்டன் சென்றிருந்த ராகுல் காந்தி, இந்திய அரசியல் நிலைமைகள் குறித்து சில கருத்துகளை முன்வைத்தார். இந்தியாவில் ஜனநாயகக் கட்டமைப்புகள் ஒடுக்கப்படுவதை சுட்டிக்காட்டினார். நாட்டின் நாடாளுமன்றம், நீதிமன்றம் உள்ளிட்டவை கட்டுப்படுத்தப்படுகின்றன என்பதையும் விமர்சனமாக முன்வைத்தார் ராகுல் காந்தி.

ராகுல் காந்தியின் இந்த வெளிநாட்டுப் பேச்சுக்கு பிரதமர் மோடி உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பாஜக தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதன் தொடர்ச்சியாக நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், பிரகலாத் ஜோஷி ஆகியோர் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வலியுறுத்தினர்.
ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்; ராகுல் காந்திக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என பாஜக எம்.பி.க்களும் வலியுறுத்தினர். இதற்கு காங்கிரஸ் எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இரு சபைகளிலும் அமளி நீடித்தது. இரு சபை நடவடிக்கைகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.
இது தொடர்பாக கருத்து தெரிவித்திருந்த காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, பிரதமர் மோடியும்தான் சீனாவுக்கு சென்ற போது இந்தியாவின் அரசியல் குறித்து விமர்சித்திருந்தார் என பதில் தந்தார். இந்த நிலையில் இன்று நாடாளுமன்றத்தில் 2-வது நாளாக இந்த விவகாரம் மீண்டும் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
அதன்படி இன்று காலை சபை நடவடிக்கைகள் தொடங்கியதும் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க பாஜக எம்பிக்கள் வலியுறுத்தினர். இதற்கு காங்கிரஸ் எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. மேலும் அதானி விவகாரத்தில் பிரதமர் மோடியை இணைத்து காங்கிரஸ் எம்பிக்கள் குற்றம்சாட்டினர். மேலும் நாடாளுமன்ற குழு விசாரணை வேண்டும் என்றனர். இதற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இருசபைகளிலும் அமளி ஏற்பட்டது. இதையடுத்து இரு சபைகளும் முடங்கின. நிலைமை சரிவராத நிலையில் இரு சபைகளும் நாளை காலை 11 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications