Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நாடாளுமன்றத்தில் சோனியா ஆவேசம்.. ரஞ்சன் கோகாய்க்கு எதிராக திரிணாமுல் காங்கிரஸ் உரிமை மீறல் நோட்டீஸ்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாடாளுமன்றத்தின் பதினோராவது நாள் நடவடிக்கையின்போது பேசிய காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு ஆங்கில தேர்வில் பெண்கள் சுதந்திரத்துக்கு எதிரான கருத்துக்கள் இடம் பெற்றதற்கு கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார்.

சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் பத்தாம் வகுப்புக்கான ஆங்கில தேர்வு நடைபெற்றது இந்த தேர்வுக்கான வினாத்தாளில் பெண்கள் சுதந்திரம் தொடர்பான கட்டுரையில் இருந்து சில கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன அந்த கேள்வியில் வீட்டில் பணியாளர்கள் குழந்தைகள் ஆகியோர் இடத்தில் ஒழுக்கம் குறைவதற்கு பெண்களின் சுதந்திரம் தான் காரணம் மனைவி கணவருக்கு கட்டுப்பட்டு நடப்பது இல்லை என்றும் இளைஞர்கள் தங்கள் விரும்பிய படி நினைப்பதால் தான் ஒழுக்கம் மற்றும் சமூகம் சார்ந்த கேடுகள் ஏற்படுகிறது உள்ளிட்ட கருத்துக்கள் இடம் பெற்றிருந்தன.

Parliament today: PM Modi should apologize for questioning women in CBSE Class X exams says Sonia Gandhi

இது நாடு முழுவதும் கடும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் பல்வேறு பெண்கள் அமைப்புகள் சிபிஎஸ்சி எதிராக போர்க்குரல் எழுப்பி வருகின்றனர் இந்நிலையில் இது குறித்த சர்ச்சை நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது. நாடாளுமன்றத்தின் பதினோராவது நாளான இன்று பூஜ்ஜிய நேரத்தின் போது கேள்வி எழுப்பிய காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவரான சோனியா காந்தி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு வினாத்தாளில் இடம்பெற்ற கேள்வி அப்பட்டமான பெண் வெறுப்பு என்றும் மோடி அரசு இதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினார். மேலும் ஆட்சேபனைக்குரிய கேள்வியை உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென்றும் கடுமையான தவறை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இந்த நிலையில் இந்திய உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சன் கோகாய் க்கு எதிராக திரிணமுல் காங்கிரஸ் கட்சி ராஜ்யசபாவில் சிறப்புரிமை தீர்மானம் கொண்டு வந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த கோகாய் 46வது தலைமை நீதிபதியாக பதவி வகித்த காலத்தில் சர்ச்சைக்குரிய விஷயங்கள் உட்பட அனைத்து விவகாரங்கள் குறித்து பேசினார்.

மேலும் 2019ம் ஆண்டில் முன்னாள் உச்ச நீதிமன்ற ஊழியர் ஒருவர் தன்னைப் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணை மேற்கொண்டது. நீதிபதி தலைமையில் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு அமைக்கப்பட்ட நிலையில் குற்றம்சாட்டப்பட்டவர் விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில் பாலியல் துன்புறுத்தல் வழக்கை விசாரித்த பெஞ்சில் தான் நீதிபதியாக இருந்திருக்க கூடாது எனவும், பார் கவுன்சில் மற்றும் நீதிமன்ற பெஞ்சில் எனது கடின உழைப்பு கெட்டுப்போனது என குறிப்பிட்டிருந்தார்.

மேலும் , நான் பேச வேண்டிய முக்கியமான விஷயங்கள் இருப்பதாக நினைக்கும் போதெல்லாம் நான் சபைக்கு செல்கிறேன். நான் ஒரு நியமன உறுப்பினர், எந்த கட்சியாலும் நான் நடத்தப்படவில்லை என தெரிவித்திருந்தார். இந்த நிலையில் சபை மாண்புக்கு எதிராக பேசியதாக கோகாய் மீது திரிணமூல் காங்கிரஸ் சார்பில் சிறப்பு உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வரப்பட்டது

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+