நாடாளுமன்றத்தில் இன்று: துப்புரவு பணியாளருக்கான 'நமஸ்தே திட்டம்'- மத்திய அமைச்சர் விளக்கம்!
டெல்லி: மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையானது வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்துடன் ஒருங்கிணைந்து, துப்புரவு தொழிலாளர்களுக்கு கண்ணியத்தை வழங்குவதற்கும், அவர்களை சமூக மற்றும் பொருளாதார ரீதியாக மேம்படுத்துவதற்கும் 'இயந்திரமயமாக்கப்பட்ட சுகாதார சுற்றுச்சூழல் அமைப்புக்கான தேசிய நடவடிக்கை (நமஸ்தே)' திட்டத்தை உருவாக்கியுள்ளது; இது நாட்டின் அனைத்து 4800+ நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிலும் செயல்படுத்தம் வகையில் 2023-24-ல் தொடங்கப்பட்டது என்று மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விகளும் மத்திய அமைச்சர்கள் அளித்த பதில்களும்:
நமஸ்தே திட்டம் குறித்து மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையானது வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்துடன் ஒருங்கிணைந்து, துப்புரவு தொழிலாளர்களுக்கு கண்ணியத்தை வழங்குவதற்கும், அவர்களை சமூக மற்றும் பொருளாதார ரீதியாக மேம்படுத்துவதற்கும் 'இயந்திரமயமாக்கப்பட்ட சுகாதார சுற்றுச்சூழல் அமைப்புக்கான தேசிய நடவடிக்கை (நமஸ்தே)' திட்டத்தை உருவாக்கியுள்ளது. இது நாட்டின் அனைத்து 4800+ நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிலும் செயல்படுத்தம் வகையில் 2023-24-ல் தொடங்கப்பட்டது.
நமஸ்தே திட்டத்தின் குறிக்கோள்கள் பின்வருமாறு:
1. துப்புரவு உள்கட்டமைப்பின் செயல்பாடுகள் மற்றும் பராமரிப்பில் முக்கிய பங்களிப்பாளர்களாக துப்புரவுத் தொழிலாளர்களை அங்கீகரிக்கும் ஒரு சாத்தியமான சூழல் அமைப்பை உருவாக்குவதன் மூலம் இந்தியாவில் துப்புரவுத் தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் கண்ணியத்தை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
2. துப்புரவுத் தொழிலாளர்களின் பாதிப்புகளைக் குறைக்க உரிமைகள் மற்றும் வாழ்வாதாரத்துக்கான உதவியை வழங்குதல் மற்றும் துப்புரவு தொடர்பான திட்டங்களுக்கு மூலதன மானியம் வழங்குவதன் மூலம் அவர்கள் சுய வேலைவாய்ப்பில் ஈடுபட உதவுதல் ஆகியவை மேற்கொள்ளப்படுகிறது.
3. கூடுதலாக, நமஸ்தே திட்டமானது துப்புரவுத் தொழிலாளர்களிடம் ஒரு நடத்தை மாற்றத்தைக் கொண்டுவரும். மேலும் பாதுகாப்பான துப்புரவு சேவைகளுக்கான தேவையை அதிகரிக்கும். ஏனெனில் சேவை தேவைப்படும் அனைவரும் கழிவுநீர் செப்டிக் தொட்டிகளை சுத்தம் செய்ய துப்புரவு பொறுப்பேற்பு பிரிவை (எஸ்.ஆர்.யூ.) அணுக வேண்டும். எந்தவொரு முறைசாரா பணியாளரும் அத்தகைய பணியை மேற்கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
கழிவுநீர் தொடர்பான அனைத்து பணிகளையும் இயந்திரமயமாக்குதல் என்பது வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தின் வரம்பிற்குள் வருகிறது. கழிவுநீர் மற்றும் செப்டிக் டேங்குகளை பராமரிப்பதற்கான பாதுகாப்பு நடைமுறைகள், அவசரகால நடவடிக்கை, இயந்திரத் தேவைகள் குறித்து அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அவ்வப்போது விரிவான ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்களை அமைச்சகம் வழங்கியுள்ளது. நகர்ப்புற தூய்மை இந்தியா இயக்கம் 2.0-ன் கீழ், 26 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு வாகனங்களை வாங்குவதற்காக மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வசதி விவகார அமைச்சகம் ரூ.371 கோடியை அனுமதித்துள்ளது. இதுவரை 2,585 வாகனங்கள் வாங்க ஒப்பளிப்பு வழங்கப்பட்டுள்ளது.
மீன்பிடித் தொழில் வளர்ச்சி குறித்து மத்திய அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் சிங் என்கிற லாலன் சிங்: நாட்டில் நீர்த்தேக்கம் - 31.50 லட்சம் ஹெக்டேர், வெள்ள சமவெளி ஈரநிலங்கள் - 5.64 லட்சம் ஹெக்டேர், குளங்கள் - 24.10 லட்சம் ஹெக்டேர், உவர்நீர் - 12.40 லட்சம் ஹெக்டேர், ஆறுகள் மற்றும் கால்வாய்கள் - 1.95 லட்சம் கி.மீ, கடற்கரை - 8118 கி.மீ என பல்வேறு மீன்வள மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்புக்கான வளங்கள் நிறைய உள்ளன. பீகாரில் குளங்கள் -112296 ஹெக்டேர், ஆக்ஸ்போ ஏரிகள் -9000 ஹெக்டேர், ஈரநிலம் -2.40 லட்சம் ஹெக்டேர், நீர்த்தேக்கம் -64470 மற்றும் ஆறுகள் -3200 கிமீ ஆகியவற்றை உள்ளடக்கிய மீன்வளத் தொழில் வளர்ச்சிக்கு ஏற்ற பரந்த மற்றும் மாறுபட்ட நீர் ஆதாரங்கள் உள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் அமைச்சகத்தின் அறிக்கையின்படி, உள்நாட்டு நீர்வழிகள் கப்பல் போக்குவரத்து நோக்கங்களுக்காக மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளன.
மீன்வளத் துறை வளர்ச்சியின் உள்ளாற்றலை முன்கூட்டியே உணர்ந்து, மத்திய அரசின் மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகம், பீகார் உட்பட நாட்டில் மீன்வளத்தின் முழுமையான வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. செயல்படுத்தப்பட்ட திட்டங்களில் பின்வருவன அடங்கும்; (i) நீலப்புரட்சிக்கான மத்திய அரசு நிதியுதவித் திட்டம்: ஒருங்கிணைந்த மீன்வள மேம்பாடு மற்றும் மேலாண்மைத் திட்டம் 2015-16 முதல் 2019-20 வரையிலான 5 ஆண்டு காலத்திற்கு ரூ.3000 கோடி மத்திய அரசின் நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும். (ii) சலுகை நிதி வழங்குவதற்காக 2018-19 முதல் 2023-24 வரையிலான 5 ஆண்டு காலத்திற்கு ரூ.7522.48 கோடி மொத்த நிதி அளவில் மீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்பு உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி, (iii) மீனவர்கள் மற்றும் மீன்வளர்ப்போருக்கு வேளாண் கடன் அட்டைகள் வழங்குதல் மற்றும் (iv) 2020-21 முதல் 2024-25 வரையிலான 5 ஆண்டு காலத்திற்கு 20,050 கோடி ரூபாய் முதலீட்டில் பிரதமரின் மீன்வளர்ப்பு மேம்பாட்டுத் திட்டம் ஆகியவை செயல்படுத்தப்படுகிறது.
பீகாரில் மீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்பு மேம்பாட்டிற்காக, மத்திய அரசின் பங்களிப்பான 158.82 கோடி உட்பட மொத்தம் ரூ.522.41 கோடி மதிப்பீட்டிலான திட்டங்களுக்கு கடந்த நான்கு ஆண்டுகளிலும், நடப்பு நிதியாண்டிலும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இது தவிர, பீகாரைச் சேர்ந்த மீனவர்கள் மற்றும் மீன் வளர்ப்போருக்கு அவர்களின் நடைமுறை மூலதனத் தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவும் வகையில் மொத்தம் 1290 எண்ணிக்கையிலான வேளாண் கடன் அட்டைகள் அனுமதிக்கப்பட்டுள்ளன.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications