இந்தியா மாநிலங்களின் ஒன்றியமா? மன்னராட்சி நாடா? குழப்பிவிட்டது பாஜக: ராகுல் காந்தி அட்டாக்
டெல்லி: இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியமா? இல்லை மன்னராட்சி நாடா? என்கிற குழப்பத்தை பாஜக உருவாக்கிவிட்டது என மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சாடியுள்ளார்.
#WATCH | "The Judiciary, the Election Commission, Pegasus, these are all instruments of destroying the voice of the union of states," says Congress MP Rahul Gandhi in Lok Sabha pic.twitter.com/BQzxXf9VM7
— ANI (@ANI) February 2, 2022
நாடாளுமன்ற லோக்சபாவில் ஜனாதிபதி உரை மீதான விவாதத்தின் போது ராகுல் காந்தி பேசியதாவது: மாநிலங்களின் குரல்களை பெகாசஸ் மென்பொருள் மூலம் ஒடுக்கியிருக்கிறது பாஜக.

பாஜகவால் குழப்பம்
நாடு முழுவதும் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி வைத்திருக்கிறது பாஜக. நீதித்துறை, தேர்தல் ஆணையம், பெகாசஸ் அத்தனையுமே மாநிலங்களின் குரல்களை ஒடுக்குகின்றன. பெகாசஸ் மூலம் நீங்கள் ஒட்டுக் கேட்கிறீர்கள்.. இது தமிழ்நாட்டு மக்கள் மீதான தாக்குதல்.. இது அஸ்ஸாம் மக்கள் மீதான தாக்குதல். கேரளா மக்கள் மீதான தாக்குதல். மேற்கு வங்க மக்கள் மீதான தாக்குதல் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

மாநிலங்கள் ஒன்றியமா? மன்னராட்சி நாடா?
இது என்ன மாநிலங்களின் ஒன்றியமா? அல்லது மன்னராட்சி நாடா? என்கிற குழப்பத்தை நாடு முழுவதும் உருவாக்கி வைத்திருக்கிறது பாஜக. ஜனநாயக கட்டமைப்புகளின் மீதான இத்தகைய தாக்குதலுக்கு மாநிலங்களிடம் இருந்து பதில்கள் வரத்தான் போகின்றன.

2 இந்தியாவாக பிரிவினை
இந்த நாட்டின் 40 கோடி மக்களின் சொத்துகள் 10 பணக்காரர்களிடம் இருக்கிறதே.. இதை செய்தது யார்? பிரதமர் நரேந்திர மோடிதான் இந்த நிலைமையை உருவாக்கினார். இந்தியாவை ஏழைகளின் இந்தியா, பணக்காரர்களின் இந்தியா என பிரித்து வைத்திருக்கிறது பாஜக.
Recommended Video

நாட்டுக்கு ஆபத்து
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்தின் 10 ஆண்டுகால ஆட்சியில் 27 கோடி மக்களை வறுமைக் கோட்டில் இருந்து மீட்டெடுத்தோம். இது உண்மையான புள்ளிவிவரம். ஆனால் பாஜகவோ 23 கோடி இந்தியர்களை வறுமையில் தள்ளிவிட்டிருக்கிறது. இந்தியா என்பது ஒரு மன்னராட்சி நாடு அல்ல. பல்வேறு கலாசாரங்கள், மொழிகளால் கட்டமைக்கப்பட்ட ஒன்றியம். ஒட்டுமொத்த இந்தியாவையும் ஒருநபர் ஆட்சி செய்யவே முடியாது. இந்தியா இப்போது மிகப் பெரும் ஆபத்தில் இருக்கிறது. நம்மை சுற்றியுள்ள நாடுகளில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறோம். நேபாளம், ஆப்கானிஸ்தான், சீனா என பல நாடுகள் நம்மை சூழ்ந்து நிற்கின்றன. சீனாவுக்கு தாங்கள் செய்வது என்ன என்பது குறித்த தெளிவான பார்வை உள்ளது. சீனாவையும் பாகிஸ்தானையும் மிக நெருக்கமாக்கி வைத்திருக்கிறது பாஜக. இது மிகவும் ஆபத்தானது. இந்திய மக்களுக்கு எதிரான மிகப் பெரிய குற்றம் இது. சீனா மிகப் பெரிய சதித்திட்டத்துடன் நிற்கிறது என திட்டவட்டமாக சொலல் முடியும். இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.












Click it and Unblock the Notifications