இது புதுஸ்ஸா இருக்கே.. ராஜஸ்தான் அரசு மீது மக்கள் ஹேப்பி.. ஆனால் முதல்வர் மீது செம கோபம்!
Recommended Video

டெல்லி: ராஜஸ்தானில் பாஜக வித்தியாசமான பிரச்சினையை சந்திக்கிறது. அந்த மாநில அரசு மீது மக்கள் பெரிய அளவில் கோபமாக இல்லை. ஆனால் முதல்வராக உள்ள வசுந்தரா ராஜே சிந்தியா மீதுதான் செம கடுப்புடன் உள்ளனராம். இதனால் எப்படி மீண்டும் ஆட்சியை தக்க வைப்பது என்பதில் பாஜக பெரும் குழப்பத்தில் உள்ளதாம்.
ராஜஸ்தானில் பாஜகவுக்கு மிகப் பெரிய அடி கிடைக்கும், ஆட்சியை இழக்கும் என்று கருத்துக் கணிப்புகள் கூறியுள்ளன. இதனால் பாஜகவினர் விரக்தியுடனேயே உள்ளனர். இந்த நிலையில் ஆட்சியை விட முதல்வர் வசுந்தரா மீதுதான் மக்கள் மிகக் கடும் ஆத்திரத்தில் இருப்பதாக வெளியாகியுள்ள செய்தி பாஜகவினரை மேலும் கவலைக்குள்ளாக்கியுள்ளது.
பாஜக அரசு செயல்படுத்தியுள்ள திட்டங்கள் மக்களிடம் போய்ச் சேர்ந்துள்ளனவாம். ஆனால் முதல்வரின் செயல்பாடுகள்தான் மக்களை மிகப் பெரும் கொந்தளிப்புக்கு கொண்டு போயுள்ளது.

அடாவடி
வசுந்தரா ராஜே என்றதுமே மக்களின் நினைவுக்கு வருவது அவரது அடாவடி போக்குதானாம். அந்த அளவுக்கு யாரையுமே மதிக்காமல் நடந்து கொண்டுள்ளார் வசுந்தரா என்கிறார்கள். ஜெய்ப்பூரை விட்டு நகருவதில்லை. மக்களிடையே போய்ப் பேசுவதில்லை. அவர் எடுத்ததே முடிவு, அவர் நினைப்பதே சரி என்ற நினைப்புடன்தான் இத்தனை காலமாக இருந்து வந்தார் என்று குற்றம் சாட்டப்படுகிறது. மேலும் அவரைச் சுற்றியுள்ள கூட்டத்தைத் தாண்டி வசுந்தராவை யாரும் நெருங்க முடியாத நிலையும் உள்ளதாம்.

தொண்டர்களுக்கு அவமரியாதை
மக்கள்தான் என்றில்லை. பாஜகவினருமே கூட வசுந்தராவை எளிதில் நெருங்க முடியாதாம். பாஜக எம்எல்ஏக்களும் கூட வசுந்தராவை அத்தனை சீக்கிரம் பார்க்க முடியாதாம். தொண்டர்கள், தலைவர்கள் என யாரையுமே அவர் மதிப்பதில்லையாம். இதைத்தான் காங்கிரஸ் ஒரு பிரச்சினையாகவே கையில் எடுத்து மக்களிடம் கொண்டு போனது, அது கிளிக் ஆகி விட்டது.

வேலையில்லாத இளைஞர்கள்
ராஜஸ்தானில் வேலையில்லாத் திண்டாட்டம் தலை விரித்தாடுகிறது. தான் ஆட்சிக்கு வந்ததும் இளைஞர்களுக்கு வேலை கொடுப்பேன் என்று வாக்குறுதி அளித்திருந்தார் வசுந்தரா. 15 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு தருவேன் என்பது அவரது உறுதிமொழி. இதன் காரணமாக வரலாறு காணாத பெரும்பான்மை பலத்துடன் (200 இடங்களில் 160 இடங்களை பாஜக வென்றது) ஆட்சியைப் பிடித்தது பாஜக. ஆனால் ஆட்சிக்கு வந்ததும் வாக்குறுதியை காற்றில் பறக்க விட்டார் வசுந்தரா.

பெரும் துயரத்தில் விவசாயிகள்
அடுத்து ராஜஸ்தானில் பெரும் பாதிப்பை சந்தித்திருப்பது விவசாயிகள்தான். மிகப் பெரிய துயரத்தில் விவசாயிகள் உள்ளனர். கடனுக்காக விவசாயிகள் தற்கொலை செய்யும் அவலத்தை முதல் முறையாக வசுந்தரா ஆட்சியில்தான் ராஜஸ்தான் பார்த்தது. 2018ம் ஆண்டு 5 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். ஆனால் கடனுக்காக அவர்கள் தற்கொலை செய்யவில்லை என்று கூறி ஒட்டுமொத்த விவசாய சமுதாயத்தினரின் கோபத்தையும் பாஜக அரசு சம்பாதித்துக் கொண்டது.

அடிப்படைக் கட்டமைப்பு
வசுந்தரா ஆட்சியில் ராஜஸ்தானுக்கு ஒரு நல்ல விஷயம் நடந்துள்ளது. அதாவது அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் மேம்பட்டுள்ளன. இதுபோல மேலும் சில திட்டங்களுக்கும் மக்கள் பாராட்டு தெரிவிக்கின்றனர். இருக்கும் பிரச்சினை என்னவென்றால் வசுந்தரா மற்றும் அவரைச் சுற்றியுள்ளோர் மீதான கடும் கோபமே. இந்தக் கோபமே வரும் தேர்தலில் காங்கிரஸுக்கு சாதகமாக வாக்குகளாக மாறப் போகிறது என்று சொல்கிறார்கள்.
-
கமலாலயம் டூ பனையூர்.. பாஜகவுக்கு அடுத்த அடி! தவெகவில் ஐக்கியமான முன்னாள் எம்எல்ஏ விஜயதரணி -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
காங்கிரசுக்கு நீங்க ஏன் உயிர் கொடுக்குறீங்க விஜய்? கடுப்பான பாஜக.. கோபத்தின் உச்சிக்கே போன அமித் ஷா -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
”ஆபரேசன் கமலாலயம்” அண்ணாமலையால் ஆட்டம் காணும் பாஜக! பேராசிரியருக்கு பெரிய லக்! அமித் ஷாவின் ப்ளான்? -
பூட்டி கிடக்கும் பனையூர் கட்சி ஆபீஸ்! தவெகவில் இணைய காத்துக் கிடக்கும் விஜயதாரணி டூ பாலகங்கா வரை! -
முரசொலி நிலம் வழக்கு: “புகார் அளித்தவர் பட்டியலினத்தவர் இல்லை”- ஐகோர்ட்டில் திமுக தரப்பு வைத்த வாதம் -
கைவிட்ட பாஜக.. மம்தாவையும் பகைத்து கொண்ட திரிணாமுல் தலைவர்கள்.. இடியாப்ப சிக்கல்! -
புதுப்பொலிவு பெறும் புதுச்சேரி.. அள்ளி கொடுத்த மத்திய அரசு! எல்.முருகன் சொன்ன குட் நியூஸ்! -
வேலைக்காகாத பாஜக மாடல்.. “கழக” பாணியைக் கையிலெடுக்கும் அண்ணாமலை! வேற லெவலாகும் வீ தி லீடர்! -
பாஜகவை விட்டு விலகுகிறேன்.. 39 ஆண்டு பயணத்திற்கு முற்றுப்புள்ளி.. காரணம் இதுதான்! நடிகர் பாண்டி ரவி ஆதங்கம் -
“வெறும் காகிதத்தில் மட்டுமே 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதா?”.. முதல்வர் விஜய்க்கு பாஜக கேள்வி!












Click it and Unblock the Notifications