டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உச்சம் தொட்ட பெட்ரோல் விலை...7 மாநிலங்களில் சதமடித்தது - மும்பையில் 1 லிட்டர் ரூ. 103

பெட்ரோல் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இன்று மும்பையில் ஒரு லிட்டர் 103 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 7 மாநிலங்களில் பெட்ரோல் விலை சதமடித்துள்ளது.

Google Oneindia Tamil News

டெல்லி: நாட்டின் பல பகுதிகளில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை புதிய உச்சத்தைத் தொட்டு உள்ளது. மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, உள்ளிட்ட 7 மாநிலங்களில் பெட்ரோல் ஒரு லிட்டர் 100 ரூபாய்க்கு மேல் விற்பனையாகிறது.

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை தினசரியும் நிர்ணயம் செய்யப்படுகிறது. கடந்த மே மாதத்தில் இருந்து 25 முறைக்கு மேல் உயர்த்தப்பட்டுள்ளது பெட்ரோல், டீசல் விலை. இந்த விலை உயர்வு சாமானிய மக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

சர்வதேச சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 75 டாலர் அளவீட்டில் இருந்து 72.51 டாலராகக் குறைந்துள்ளது. இதேபோல் அமெரிக்காவின் WTI கச்சா எண்ணெய் விலை 70.51 டாலர் வரையில் சரிந்துள்ளது. ஆனாலும் இந்தியாவில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது.

தமிழகத்தில் சதமடிக்கப்போகும் பெட்ரோல் விலை - டீசல் விலை இன்று எவ்வளவு தெரியுமா தமிழகத்தில் சதமடிக்கப்போகும் பெட்ரோல் விலை - டீசல் விலை இன்று எவ்வளவு தெரியுமா

பெட்ரோல், டீசல் விலை உயர்வு

பெட்ரோல், டீசல் விலை உயர்வு

இன்றைய தினம் இந்தியாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 26 முதல் 27 பைசா வரையிலும், ஒரு லிட்டர் டீசல் விலை 28-30 பைசா வரையிலும் உயர்ந்துள்ளது. இதன் மூலம் சாமானிய மக்கள் கவலையடைந்துள்ளனர். டீசல் விலை உயர்வினால் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது.

மும்பையில் ரூ. 103.08

மும்பையில் ரூ. 103.08

பெட்ரோல் விலை பல மாநிலங்களில் சதமடித்துள்ளது. மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 103.08 ரூபாயாகவும், கர்நாடகா தலைநகர் பெங்களூரில் ஒரு லிட்டர் பெட்ரோல் 100.17 ரூபாயாகவும் விற்பனையாகிறது. ஹைதராபாத் நகரத்தில் பெட்ரோல் ஒரு லிட்டர் 100.74 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

சதமடிக்கும் பெட்ரோல்

சதமடிக்கும் பெட்ரோல்

சென்னை உள்ளிட்ட பல முக்கிய நகரங்களில் இன்றைய பெட்ரோல் விலை நிலவரத்தை பார்த்தால், சென்னையில் 98 ரூபாய் 14 பைசாவாக விற்பனையாகிறது. தலைநகர் டெல்லியில் 96.93 ரூபாயாகவும் கொல்கத்தாவில் 96.84 ரூபாயாகவும் விற்பனையாகிறது. கோழிக்கோடு நகரத்தில் 97.34 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

முக்கிய நகரங்களில் டீசல் விலை

முக்கிய நகரங்களில் டீசல் விலை

நாட்டின் முக்கிய நகரங்களில் இன்றைய டீசல் விலை நிலவரத்தைப் பார்த்தால் மும்பையில் ஒரு லிட்டர் 95.14 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தலைநகர் டெல்லியில் ஒரு லிட்டர் 87.69 ரூபாயாகவும் கொல்கத்தாவில் 90.54 ரூபாய் ஆகவும் சென்னையில் 92.31 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது. கர்நாடகா தலைநகர் பெங்களூருவில் ஒரு லிட்டர் டீசல் 92.97 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. ஹைதராபாத்தில் 95.59 ரூபாயாகவும் கோழிக்கோட்டில் ஒரு லிட்டர் 92.73ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

English summary
Petrol and diesel prices have touched new highs in many parts of the country. Petrol sells for over Rs 100 a liter in seven states, including Maharashtra, Karnataka and Andhra Pradesh.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X