டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திடீரென சரிந்த "சீட்டா..!" குழம்பிப்போன விமானி.. அருணாச்சல பிரதேச ஹெலிகாப்டர் விபத்தில் பைலட் பலி

Google Oneindia Tamil News

டெல்லி: அருணாச்சல பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள ஷாக் சம்பவம் ராணுவத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்திய ராணுவத்தை நவீனப்படுத்தும் நடவடிக்கையை அரசு தொடர்ந்து எடுத்து வருகிறது. இதற்காகப் பல புதிய ஆயுதங்களை அரசு தொடர்ந்து கொள்முதல் செய்து வருகிறது.

இருந்த போதிலும், சில எதிர்பாராத சூழ்நிலைகளில் விபத்து ஏற்படுவது தொடர்ந்து வருகிறது. அப்படியொரு சம்பவம் தான் அருணாச்சல பிரதேசத்தில் நடந்து உள்ளது.

 மிரட்டும் எல்சி ஹெலிகாப்டர்.. மணிக்கு 268 கி.மீ வேகம்.. மாஸ் அம்சங்களுடன் களமிறங்கிய வான் அரக்கன் மிரட்டும் எல்சி ஹெலிகாப்டர்.. மணிக்கு 268 கி.மீ வேகம்.. மாஸ் அம்சங்களுடன் களமிறங்கிய வான் அரக்கன்

 ஹெலிகாப்டர் விபத்து

ஹெலிகாப்டர் விபத்து

அருணாச்சல பிரதேசத்தில் இன்று காலை ராணுவத்தின் சீட்டா ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இதில் பைலட் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மோசமாகக் காயமடைந்த மற்றொரு வீரர் தற்போது தீவிர சிகிச்சை பெற்று வருவதாக இந்திய ராணுவம் தெரிவித்து உள்ளது. இன்று காலை 10 மணி அளவில் தவாங் பகுதி அருகே ராணுவ விமான ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது.

உயிரிழப்பு

உயிரிழப்பு

இந்த சீட்டா ரக ஹெலிகாப்டரில் ஒரே நேரத்தில் இரண்டு பேர் பயணிக்க முடியும். விபத்து குறித்த தகவல் கிடைத்த உடன் சம்பவ இடத்திற்கு விரைந்த சென்ற ராணுவத்தினர், ஹெலிகாப்டரில் சிக்கி இருந்த இரு விமானிகளையும் மீட்டு அருகே இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இருப்பினும் லெப்டினன்ட் கர்னல் சவுரப் யாதவ் பலத்த காயமடைந்த இருந்ததால் சிகிச்சையின் போது அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

உத்தரவு

உத்தரவு

துணை விமானிக்கு இப்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுவரை விபத்திற்கான காரணங்கள் உறுதியாகத் தெரியவில்லை. இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளதாகவும் ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும் ராணுவம் உத்தரவிட்டு உள்ளது.

 விபத்துகள்

விபத்துகள்

முன்னதாக இந்த ஆண்டு மார்ச் மாதம் தான் ஜம்மு காஷ்மீரில் எல்லை அருகே ராணுவத்தின் மற்றொரு சீட்டா ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. அதிலும் இதேபோல விமானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். துணை விமானி பலத்த காயமடைந்தார். அதேபோல கடந்த ஆண்டு இறுதியில். தமிழகத்தில் விமானப்படையின் மிக் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதில் முன்னாள் முப்படை தளபதி பிபின் ராவத் உட்பட 12 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
Cheetah Helicopter Crash crashed in Arunachal Pradesh one death: Arunachal Pradesh Pilot Killed In Army Cheetah Helicopter Crash.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X