எமர்ஜென்சியின்போது கருணாநிதி அரசை டிஸ்மிஸ் செய்தவர்கள் ஜனநாயகம் பற்றி பேசுகிறார்கள்.. பிரதமர் ஆவேசம்
டெல்லி: இன்று மாநிலங்களவையில், குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்குப் பதில் அளித்த பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் கட்சியை மிகக் கடுமையாகச் சாடி பேசினார்.
கடந்த ஜன.31ஆம் தேதி குடியரசுத் தலைவர் உரையுடன் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. இதையடுத்து குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பலரும் உரையாற்றினர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பேசிய ராகுல் காந்தி, மத்திய அரசு மாநில உரிமைகளைப் பறிப்பதாகவும் ஜனநாயகத்திற்கு மதிப்பதில்லை என்றும் சாடியிருந்தார்.

பிரதமர் மோடி
இந்தச் சூழலில் ராஜ்யசபாவில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்குப் பிரதமர் நரேந்திர மோடி பதில் அளித்தார். நேற்றைய தினம் மக்களவையில் பிரதமர் மோடி மக்களவையில் உரையாற்றிய நிலையில், பிரதமர் மோடி இன்று மாநிலங்களவையில் உரையாற்றுகிறார். காங்கிரஸ் வாரிசு அரசியல் செய்வதாகச் சாடிய பிரதமர் மோடி, அது நாட்டிற்கு பேரபாயம் என்றும் விமர்சித்தார்.

வேக்சின்
மாநிலங்களவையில் பேசிய பிரதமர் மோடி, "இந்தியாவை எதிர்மறையாகச் சித்தரிப்பதில் எதிர்க்கட்சி மும்முரமாக உள்ளது. கொரோனா பாதிப்பு தொடர்பான கூட்டங்களை எதிர்க்கட்சியினர் புறக்கணித்தனர். கொரோனா காலத்தில் நான் முதல்வர்களுடன் 23 முறை ஆலோசனை நடத்தினேன். எம்பி ஒருவர் வேக்சின் வீண் செலவு எனக் குறிப்பிட்டார். இந்தியாவின் தடுப்பூசி சாதனை குறித்து எதிர்க்கட்சிகள் பெருமிதம் கொள்ளவில்லை. இந்தியாவின் பாரம்பரிய மருந்துகளுக்கு இப்போது வெளிநாடுகளில் அங்கீகாரம் கிடைத்து வருகிறது. ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் மட்டும் 80,000 சுகாதார மையங்கள் கட்டப்பட்டுள்ளன.

வாரிசு அரசியல்
1975ல் ஜனநாயகத்தைக் காலில் போட்டு மிதித்தவர்கள் எங்களுக்கு ஜனநாயகம் குறித்து பாடம் எடுக்கத் தேவையில்லை. நமது ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் வாரிசு. ஒரு அரசியல் கட்சியில் ஒரு குடும்பம் மட்டும் ஆதிக்கம் செலுத்தினால், அரசியல் திறமை பாதிக்கப்படும். வாரிசு அரசியலைத் தாண்டி காங்கிரஸ் எதையும் சிந்திப்பதில்லை. இந்தியா தான் இந்திரா.. இந்திரா தான் இந்தியா என்ற மனநிலையிலேயே இன்னும் பலர் உள்ளனர். பல மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி இப்போது இல்லை"

காங்கிரஸ் மீது அட்டாக்
காந்தியின் விருப்பப்படி காங்கிரஸ் இல்லாமல் இருந்திருந்தால், இங்கு எப்போதும் ஜனநாயகம் இருந்திருக்கும். இந்தியா சுதேசி பாதையைத் தேர்ந்தெடுத்திருக்கும். காங்கிரஸ் இல்லாமல் இருந்திருந்தால் இந்தியாவில் அவசரநிலை, ஊழல், சீக்கிய இனப்படுகொலை, காஷ்மீரி பண்டிட்களின் வெளியேற்றம் நடந்திருக்காது. மகள்கள் பாதுகாப்பாக இருந்திருப்பார்கள், மக்களுக்கு அடிப்படை வசதிகள் கிடைத்திருக்கும். இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம். அனைவருக்கும் வெற்றியும் தோல்வியும் இருக்கும். ஆனால் உங்கள் விரக்தியை மக்கள் மீது திணிக்காதீர்கள்" என்று சாடினார்.

வெளிநடப்பு
இதற்குக் காங்கிரஸ் எம்பிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், பிரதமர் மோடியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், காங்கிரஸ் எம்பிகள் வெளிநடப்பு செய்தனர். தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, "இங்குத் தேசிய முன்னேற்றத்திற்கும் மாநில விருப்பங்களுக்கும் இடையே இங்கு எந்தவொரு முரண்பாடுகளும் இல்லை இந்தியாவுக்கு அடித்தளம் அமைத்ததே காங்கிரஸ் என்பது போலச் சிலர் கூறுகின்றனர். தேசத்திற்கு ஆபத்தான சிந்தனை இது. இந்தியா 1947 இல் தான் பிறந்தது என்று சிலர் நம்புகிறார்கள். இந்த சிந்தனையால் தேவையற்ற பிரச்சினைகள் வருகிறது.

கூட்டாட்சித் தத்துவம்
கூட்டாட்சித் தத்துவம் குறித்து சிலர் பேசுகிறார்கள். ஆனால், கடந்த காலங்களில் அற்பமான காரணங்களுக்காக முதல்வர்கள் நீக்கப்பட்டதை மறந்துவிடுகிறார்கள். பிரதமரின் மகனுக்கு விமான நிலையத்தில் செய்யப்பட்ட ஏற்பாடுகள் பிடிக்கவில்லை என்று ஆந்திர முதல்வர் நீக்கப்பட்டார். கர்நாடகாவின் வீரேந்திர பாட்டீல் உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது நீக்கப்பட்டார். காங்கிரஸ் ஆட்சியில் 100க்கும் மேற்பட்ட முறை குடியரசுத் தலைவர் ஆட்சி கொண்டு வரப்பட்டு, மாநில அரசுகள் நீக்கப்பட்டன.

கருணாநிதி, எம்ஜிஆர் ஆட்சி
கேரளாவில் கம்யூனிஸ்ட் அரசு டிஸ்மிஸ் செய்யப்பட்டது. எமர்ஜென்சி சமயத்தில் தமிழ்நாட்டில் கருணாநிதி அரசு டிஸ்மிஸ் செய்யப்பட்டது. 1980ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் எம்ஜிஆர் அரசு டிஸ்மிஸ் செய்யப்பட்டது. இப்படி பஞ்சாபில் பிரகாஷ் சிங் பாதல் அரசு, ஆந்திராவில் என்டிஆர் அரசு, எனச் சொல்லிக் கொண்டே போகலாம். அவ்வளவு ஏன் காங்கிரஸ் தங்கள் தலைவர்களைக் கூட விட்டுவைக்கவில்லை. இவர்கள் தான் இப்போது மாநில உரிமைகள் குறித்துப் பேசுகிறார்கள்" என்று கடுமையாகத் தாக்கி பேசினார்.
-
அச்சத்தை கிளப்பிய வளைகுடா போர்! எரிபொருள் விநியோகம் குறித்து.. நாளை முதலமைச்சர்களுடன் மோடி ஆலோசனை! -
இந்தியாவில் 'வேலைவாய்ப்பு நெருக்கடி'.. கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் அறிய வேண்டிய கசப்பான உண்மை -
அதிகாலையில் வந்த மெயில்.. மீண்டும் வேலையை காட்டிய மெட்டா! ஊழியர்கள் கண்ணீர்! -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது












Click it and Unblock the Notifications