ஜி20 உச்சி மாநாடு: இத்தாலி பிரதமருடன் பிரதமர் மோடி சந்திப்பு.. ஆலோசிக்கப்பட்டது என்ன?
டெல்லி: டெல்லியில் நடைபெற்று வரும் ஜி20 உச்சி மாநாட்டுக்கு இடையே இத்தாலி பிரதமர் ஜியார்ஜியோ மெலோனி பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா, ரஷ்யா, அமெரிக்கா, சீனா உள்பட 20 நாடுகள் இணைந்து ஜி20 கூட்டமைப்பை உருவாக்கி உள்ளது. இந்த கூட்டமைப்பின் உச்சி மாநாடு ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் நடப்பு ஆண்டில் இந்த மாநாடு இந்தியாவில் நடைபெறுகிறது. இந்தியா தலைமை ஏற்று இந்த மாநாடை நடத்துகிறது. இதன் காரணமாக கடந்த ஓராண்டாக இந்தியாவில் பல்வேறு இடங்களில் ஜி20 நாடுகளின் பிரதிநிதிகளின் கூட்டம் என்பது நடந்து வந்தது.

இதேபோல் ஜி20 உச்சி மாநாட்டை டெல்லியில் மிக பிரமாண்டமாக நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்தது. டெல்லியில் புதிதாக கட்டப்பட்ட பாரத் மண்டபத்தில் இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. அதன்படி திட்டமிட்டப்படி ஜி20 அமைப்பின் 2 நாள் உச்சி மாநாடு இன்று தொடங்கியது. அமெரிக்க அதிரபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் உள்பட ஏராளமான தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொண்டனர்.
இந்த மாநாட்டுக்கு இத்தாலி பிரதமர் ஜார்ஜியோ மெலோனியும் வருகை தந்தார். இந்த நிலையில் ஜி 20 உச்சி மாநாட்டுக்கு இடையே இத்தாலி பிரதமர் ஜார்ஜியோ மெலோனி பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். இந்த இந்த சந்திப்பின் போது பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்! -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. வருது சுங்கக் கட்டண சலுகை.. யாருக்கு பொருந்தும்? -
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள்! 6 மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்!












Click it and Unblock the Notifications