வருது வருது தேர்தல் வருது.. வெளிநாட்டு பயணங்களைத் தள்ளிப் போடுகிறார் பிரதமர் மோடி
Recommended Video

டெல்லி: லோக்சபா தேர்தல் நெருங்கி விட்டதால் அது முடியும் வரை பிரதமர் நரேந்திர மோடி வெளிநாடுகளுக்குச் செல்ல மாட்டார் என்று கூறப்படுகிறது.
பிரதமர் அலுவலக இணையதளத்தில் இடம் பெற்றுள்ள நிகழ்ச்சி நிரலைப் பார்த்தால் அடுத்த சில மாதங்களுக்கு பிரதமரிடம் வெளிநாட்டுப் பயணத் திட்டம் ஏதும் இல்லை என்று தெரிய வருகிறது. கடந்த 2014 ஜூன் மாதம் முதல் இதுவரை மொத்தம் 48 முறை வெளிநாடுகளுக்குப் போய் வந்துள்ளார் பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தல் வரவுள்ளது. தமிழகத்திற்கும் சட்டசபைத் தேர்தல் வரலாம் என்றும் பேச்சு அடிபடுகிறது. இந்த நிலையில் தேர்தல் முடியும் வரை பிரதமரிடம் வெளிநாட்டுப் பயணத் திட்டம் ஏதும் இல்லை என்று கூறப்படுகிறது.

குறைந்தது 4 மாதம்
அடுத்த ஆண்டு தொடக்கத்தில் குறைந்தது நான்கு மாதங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வெளிநாட்டுப் பக்கம் திரும்பிக் கூட பார்க்க மாட்டார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் நெருங்கி விட்டதால் உள்ளூர்ப் பிரச்சினைகள் பக்கம் அவர் திரும்புவார். இல்லாவிட்டால் தேர்தலில் இது ஒரு பெரும் பிரச்சினையாக கிளம்பி விடும் என பாஜக அஞ்சுகிறது.

பெரிய அளவில் எதுவும் இல்லை
அடுத்த சில மாதங்களுக்கு பிரதமர் போயே ஆக வேண்டிய அளவுக்கு சர்வதேச நிகழ்ச்சிகள் எதுவும் இல்லை என்பது இன்னொரு காரணம். கடந்த ஆண்டு பிரதமர் மோடி மொத்தம் 14 வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.

பிரசார நட்சத்திரம்
பாஜகவைப் பொறுத்தவரை அமித் ஷாவைக் காட்டியோ அல்லது வேறு யாரையும் காட்டியோ ஓட்டு கேட்க முடியாது. பிரதமர் மோடிதான் இன்னும் பாஜகவின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்கிறார். எனவே அவர் இருந்தால்தான் பாஜகவின் பிரசாரம் பலம் அடையும். இதுவும் வெளிநாடுகளுக்குப் போகாமல் தள்ளிப் போட முக்கியக் காரணம்.

பெரும் சவால்
பாஜக தற்போது பெரும் சவாலான சூழலில் உள்ளது. ஐந்து மாநிலத் தேர்தல் தோல்வி, மக்களிடையே பாஜக குறித்தான கடும் கோபத்தையும், அதிருப்தியையும் வெளிப்படுத்தி விட்டது. இதனால் இதிலிருந்து மீண்டு வரும் வழியைத் தேடிக் கொண்டுள்ளது பாஜக. மறுபக்கம் கிட்டத்தட்ட எல்லா மாநிலத்திலும் பாஜகவுக்கு மக்கள் மத்தியில் ஏதாவது ஒரு வகையில் கெட்ட பெயர் அதிகரித்துள்ளது. அதையும் சரி செய்தாக வேண்டிய நிலையில் உள்ளது.

வாரணாசியில் முக்கியக் கூட்டம்
இதனால்தான் மோடியை வெளிநாடுகளுக்கு அனுப்புவதை தற்போதைக்கு நிறுத்தி வைத்திருப்பதாக கூறப்படுகிறது. மோடியின் வாரணாசி தொகுதியில் ஜனவரி 21 முதல் 23ம் தேதி வரை வெளிநாட்டு பாஜக தினக் கொண்டாட்டம் நடைபெறவுள்ளது. அதில் மோடி பங்கேற்கவுள்ளார்.

கடைசியாக சென்றது
பிரதமர் மோடி கடைசியாக கடந்த நவம்பர் மாதம் சிங்கப்பூர், மாலத்தீவு, அர்ஜென்டினாவுக்குப் போயிருந்தார். அதற்கு முன்பு அக்டோபர் மாதம் ஜப்பான் போயிருந்தார். இனி அடுத்து பொதுத் தேர்தல் முடிந்த பிறகே மோடி வெளிநாடு செல்லக் கூடும் என்று தெரிகிறது.. அதுவும் தேர்தல் முடிவைப் பொறுத்தே அமையும்.
-
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications