சரத்பவாரை பார்த்ததும் மோடி செய்த செயல்.. கட்சி பாகுபாடு இன்றி பாராட்டு பெறும் வீடியோ! என்ன நடந்தது?
டெல்லி: டெல்லியில் நேற்று அகில பாரதிய மராத்தி சாகித்ய சம்மேளனம் நடந்தது. இதில் தேசியவாத காங்கிரஸ் கட்சி சரத்பவார் அணியின் தலைவர் சரத்பவார், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் பங்கேற்றனர். மேடையில் சரத்பவார் வந்தவுடன் பிரதமர் மோடி செய்த செயல் அனைவரின் கவனத்தையும் பெற்றதோடு கைத்தட்டல்களை குவித்தது. தற்போது அந்த வீடியோ வெளியாகி அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது. அப்படி என்ன நடந்தது? வாங்க பார்க்கலாம்.
டெல்லியில் நேற்று அகில பாரதிய மராத்தி சாகித்ய சம்மேளனத்தின் தொடக்க விழா நடந்தது. இந்த விழாவை மகாராஷ்டிரா மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் மகாராஷ்டிரா மாநில அரசியலில் மூத்த தலைவராக உள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் பங்கேற்றனர். பிரதமர் மோடி சிறப்புரை ஆற்றினார். இந்த விழாவில் மேடையில் பிரதமர் மோடியின் அருகே சரத்பவாருக்கு இருக்கை என்பது வழங்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் தான் தற்போது இணையதளங்களில் வீடியோ ஒன்று வெளியாகி வேகமாக பரவி வருகிறது. அதாவது விழாவில் பிரதமர் மோடி, சரத்பவாரிடம் மிகவும் அன்போடும், கணிவோடும் நடந்து கொண்ட வீடியோ தான் பரவி வருகிறது. அதாவது மேடையில் பிரதமர் மோடி தனது இருக்கையின் அருகே நிற்கிறார். அப்போது சரத்பவார் தனது இருக்கையில் அமர வருகிறார்.
இதை பார்த்த பிரதமர் மோடி சரத்பவார் இருக்கையில் அமர உதவி செய்தார். சரத்பவாருக்காக அவரது இருக்கையை லேசாக அட்ஜெஸ்ட் செய்து கொடுக்கிறார். அதன்பிறகு சரத்பவார் இருக்கையில் அமரவே, மோடி டேபிளில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து கிளாசில் சரத்பவாருக்காக ஊற்றி கொடுக்கிறார்.
#WATCH | Delhi: Prime Minister Narendra Modi and NCP chief Sharad Pawar at the inauguration of the 98th Akhil Bharatiya Marathi Sahitya Sammelan.
— ANI (@ANI) February 21, 2025
(Source: DD News) pic.twitter.com/W2TJpqyeqv
இதனை அந்த விழாவில் இருந்த அனைவரும் பார்க்கவே பிரதமர் மோடியின் செயலை பாராட்டும் வகையில் கைக்தட்டுகின்றனர். இதனால் அரங்கமே அதிர்கிறது. இந்த வீடியோ இணையதளங்களில் பரவி வரும் சூழலில் பலரும் பிரதமர் மோடியை பாராட்டி வருகின்றனர். ஏனென்றால் அரசியலில் பிரதமர் மோடி மற்றும் சரத்பவார் ஆகியோர் எதிரெதிர் துருவங்களாக உள்ளனர்.
பாஜக மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் கொள்கை என்பது வெவ்வேறானவை. அதோடு மகாராஷ்டிராவை பொறுத்தவரை பாஜக கூட்டணியில் சரத்பவாரின் கட்சி இல்லை. சமீபத்தில் சரத்பவாரின் கட்சி இரண்டாக உடைந்தது. அப்போது சரத்பவாரின் உறவினர் அஜித் பவார் பாஜக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தார். தேசியவாத காங்கிரஸ் கட்சியை அவரே கைப்பற்றினார்.
அதன்பிறகு சரத்பவார் கட்சி தேசியவாத காங்கிரஸ் சரத்பவார் அணி என்று செயல்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு நடந்து முடிந்த சட்டசபை தேர்தலின்போதும் மகாராஷ்டிராவில் ஆட்சியை பிடித்தபோது பாஜக கூட்டணியில் அஜித் பவார் இடம்பெற்றிருந்தார். தற்போது அவர் மகாராஷ்டிரா துணை முதல்வராக செயல்பட்டு வருகிறார். சரத்பவார் கட்சி காங்கிரஸ் மற்றும் உத்தவ் சிவசேனா அணியுடன் சேர்ந்து எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துள்ளது.
இருப்பினும் மோடி - சரத்பவார் இடையே நல்ல நட்பு என்பது உள்ளது. கடந்த ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் சரத்பவார் கட்சி ‛இந்தியா' கூட்டணியில் இடம்பெற்றிருந்தது. அதன்பிறகு மத்தியில் பாஜக கூட்டணி ஆட்சி அமைந்த நிலையில் பிரதமராக 3வது முறையாக மோடி பதவியேற்றார். அந்த விழாவிலும் சரத்பவார் பங்கேற்றார். இதன்மூலம் அரசியலில் எதிரெதிர் துருவங்களாக இருந்தாலும் கூட மோடி - சரத்பவார் இடையே நல்ல உறவு என்பது உள்ளது. அதை தான் நேற்றைய சம்பவமும் வெளிப்படுத்தி உள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
-
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
ரம்ஜான் நாளில் களத்தில் இறங்கிய பிரதமர் மோடி.. மேற்காசியாவில் திரும்பும் அமைதி! உற்றுநோக்கும் உலகம்! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம்












Click it and Unblock the Notifications