புதிய அமைச்சரவை..42% பேர் மீது கிரிமினல் கேஸ்,90% கோடீஸ்வரர்கள்..இவர் ஒருவரது சொத்து மட்டும் 380கோடி
டெல்லி: பிரதமர் மோடி தலைமையிலான புதிய அமைச்சரவை சில நாட்களுக்கு முன் விரிவாக்கம் செய்யப்பட்ட நிலையில், புதிய அமைச்சரவையில் உள்ள 42% பேர் மீது கிரிமனல் வழக்குகளும், 90% பேர் கோடீசுவரர்கள் என்றும் ஜனநாயகத்திற்கான சீர்திருத்த அமைப்பு (ADR) தெரிவித்துள்ளது.
பிரதமர் மோடி இரண்டாவது முறையாகக் கடந்த 2018ஆம் ஆண்டு ஆட்சியைப் பிடித்தது முதல் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவரது அமைச்சரவை எவ்வித மாற்றமும் இன்றி தொடர்ந்ததது.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. சுமார் 10க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் பதவி விலகினர்.

புதிய அமைச்சரவை
மேலும், 43 பேர் புதிதாக அமைச்சர்களாகப் பதவியேற்றனர். புதிய அமைச்சரவையில் மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களின் பிரதிநிதித்துவம் அதிகமாக இருந்தது. தமிழ்நாட்டில் இருந்து எல் முருகன் இணை அமைச்சராகப் பொறுப்பேற்றார். ஏற்கனவே இணை அமைச்சராக இருந்த சிலர் கேபினெட் அமைச்சராகப் பதவி உயர்வைப் பெற்றனர். தற்போது பிரதமர் மோடியின் அமைச்சரவையில் மொத்தம் 78 அமைச்சர்கள் உள்ளனர்.

42% கிரிமினல் வழக்குகள்
இந்நிலையில், புதிய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள 33 அமைச்சர்கள், அதாவது 42% பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளதாக ஜனநாயகத்திற்கான சீர்திருத்த அமைப்பு (ADR) தெரிவித்துள்ளது. அவர்களில் 24 அமைச்சர்கள், அதாவது 31% பேர் மீது கொலை மற்றும் கொலை முயற்சி, கடத்தல் போன்ற தீவிரமான குற்ற வழக்குகள் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

கோடீஸ்வர அமைச்சர்கள்
புதிய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள 90%, அதாவது 70 பேர் கோடீஸ்வரர்கள் ஆகும். குறிப்பாக நான்கு அமைச்சர்கள் - அமைச்சர்கள் ஜோதிராதித்ய சிந்தியா (ரூ 379 கோடி), பியூஷ் கோயல் (ரூ 95 கோடி), நாராயண் ராணே (ரூ 87 கோடி, ராஜீவ் சந்திரசேகர் (ரூ. 64 கோடி) ஆகியோர் 50 கோடி ரூபாய்க்கும் அதிகமாகச் சொத்துகளை வைத்துள்ளனர்.

குறைவான சொத்துகளைக் கொண்ட அமைச்சர்கள்
பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள அமைச்சர்களின் சராசரி சொத்து மதிப்பாக 16.24 கோடி ரூபாய் உள்ளது. அவர்களில் திரிபுராவைச் சேர்ந்த பிரதிமா பூமிக் (ரூ 6 லட்சம்), மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஜான் பர்லா (ரூ 14 லட்சம்), ராஜஸ்தானைச் சேர்ந்த கைலாஷ் சௌத்ரி (ரூ 24 லட்சம்), ஒடிசாவைச் சேர்ந்த பிஷ்வேஸ்வர் துடு (ரூ 27 லட்சம்), மகாராஷ்டிராவின் வி முரளீதரன் (ரூ.27 லட்சத்துக்கு மேல்) ஆகியோர் குறைவான சொத்துகளை உடைய அமைச்சர்களாக உள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications