Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கார்கே சொன்ன அந்த வார்த்தை.. கையெடுத்து கும்பிட்ட சபாநாயகர்.. குலுங்கி குலுங்கி சிரித்த பிரதமர் மோடி

மல்லிகார்ஜுன கார்கேவின் நாடாளுமன்ற பேச்சு அவையில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நேற்று பேசினார். அப்போது அவர் சொன்ன ஒரு கருத்து அவையில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த வாரம் குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கியது. கடந்த பிப். 1ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

இப்போது குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடந்து வருகிறது. காங்கிரஸ், திமுக உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சி எம்பிக்கள் இதில் மத்திய அரசைச் சாடினர்.

ராஜ்யசபா

ராஜ்யசபா

இதற்கிடையே ராஜ்யசபாவில் எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே நேற்று பேசும் போது பல விவகாரங்களில் மத்திய அரசை சாடினார். மேலும், அதானி குழுமம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக் குழு மூலம் விசாரிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். அதானி குழுமம் பங்கு மோசடியில் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்க நிறுவனம் குற்றஞ்சாட்டியுள்ள நிலையில், மத்திய அரசு இந்த விவகாரத்தில் அமைதியாக இருப்பது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். அப்போது ஆளும் மற்றும் எதிர்க்கட்சி எம்பிகள் இடையே காரசார விவாதமும் ஏற்பட்டது.

 கார்கே பேச்சு

கார்கே பேச்சு

பணமதிப்பிழப்பு விவகாரம், ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்படும் உள்ளிட்ட வாக்குறுதிகளைப் பிரதமர் மோடி நிறைவேற்றத் தவறியதாகச் சாடிய கார்கே, பொதுத்துறை நிறுவனங்களுக்கு அதிகாரம் அளிக்காதது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார். மேலும், அதானி விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி மௌனம் சாதிக்கவே விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.. கார்கே மேலும் கூறுகையில், "நீங்கள் ஏன் அமைதியாக இருக்கிறீர்கள் என்று பிரதமரிடம் கேட்க விரும்புகிறேன். எப்போதும் நீங்கள் தானே மற்றவர்களை அச்சுறுத்துவீர்கள்.. ஏன் நீங்கள் தொழில்துறையினரை அச்சுறுத்தவில்லை" என்று கேட்டார்.

 அதானி விவகாரம்

அதானி விவகாரம்

அதானி குழுமத்திற்கு மத்திய அரசு சலுகைகளை வழங்குவதாகத் தெரிவித்த அவர், இதன் காரணமாகவே அதானி குழுமத்தின் சொத்து மதிப்பு கிடுகிடுவென உயர்ந்ததாகவும் அவர் தெரிவித்தார். ஹிண்டன்பர்க் அறிக்கையைக் குறிப்பிட்ட கார்கே, அதானி சொத்து மதிப்பு 2014 முதல் 2022 வரை வேகமாக அதிகரித்ததாகவும், குறிப்பாகக் கடைசி இரண்டு ஆண்டுகளில் பல மடங்கு வேகமாக அதிகரித்ததாகவும் தெரிவித்தார். மேலும், அதானி குழுமத்திற்கு அரசு சலுகை காட்டுவதாகவும் அவர் தெரிவித்தார். கார்கே பேச்சுக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உட்பட மூத்த பாஜக தலைவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

 ஜக்தீப் தன்கர்

ஜக்தீப் தன்கர்

அப்போது குறுக்கிட்ட ராஜ்யசபா தலைவர் ஜக்தீப் தன்கர், "நீங்கள் எதிர்க்கட்சி தலைவர் பதவியில் உள்ளீர்கள்.. நீங்கள் கண்ணியமாகப் பேசுவீர்கள் என்று நான் எதிர்பார்த்தேன்.. நாடாளுமன்றத்தில் ஒருவர் தனக்குத் தோன்றிய அனைத்தையும் பேச முடியாது.. தேசத்தின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் பேசக் கூடாது.. இங்கிருந்து நாம் தேச நலனுக்கு முக்கியத்துவம் கொடுத்தே பேச வேண்டும்" என்றும் அவர் தெரிவித்தார். மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல் ஆகியோரும் கார்கே பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

எதிர்ப்பு

எதிர்ப்பு

இதையடுத்து தொடர்ந்து பேசிய கார்கே, 2002 குஜராத் கலவரத்திற்குப் பிறகு முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் ராஜ் தர்மம் கருத்தைக் குறிப்பிட்டு, தற்போது ஆளும் மத்திய அரசு இரு வேறு பிரிவுகளுக்கு இடையே வெறுப்பு வாதத்தை வளர்ப்பதாகத் தெரிவித்தார். வாஜ்பாய் கூறிய கருத்தை கார்கே தவறாகக் குறிப்பிடுவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எதிர்ப்பு தெரிவித்தார். இப்படி கார்கே பேச்சால் அவையே காரசாரமானதாக மாறியது.

 காரசார வாதம்

காரசார வாதம்

அப்போது பியூஷ் கோயல் ஒரு குழுமத்தின் சொத்து மதிப்பு உயர்ந்தது குறித்து கேள்வி கேட்கும் கார்கே, நாடாளுமன்ற விசாரணை கேட்கிறார். தனிநபரான விலையுயர்ந்த சால்வை அணிந்துள்ளார். அது குறித்தும் விசாரணை நடத்த வேண்டும் என்று கேள்வி எழுப்பினார். இதற்குக் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதேநேரம் இந்த விவாதத்தின் போது சில ஜாலி சம்பவங்களும் நடந்தது.

 பிரதமர் மோடி

பிரதமர் மோடி

பிரதமர் எப்போதும் தேர்தல் மூடிலேயே இருப்பதாக கார்கே தெரிவித்தார்.. தனது சொந்த தொகுதியான குல்பர்காவில் பிரதமர் மோடி இரு முறை உரையாற்றியதாக கார்கே சொல்லப் பிரதமர் மோடி சிரித்துவிட்டார். அதேபோல அவை தலைவர் தங்கரும் சிரித்தார். மேலும், மற்றொரு சமயம், அவை தலைவர் ஜக்தீப் தன்கரை சுட்டிக்காட்டிய ​​ கார்கே, சட்டப் பயிற்சியை முடித்த தன்கர் பணியைத் தொடங்கிய போது முதலில் தனக்கு வந்த வருமானத்தை கையால் எண்ணியிருப்பார் என்றும் அதன் பிறகு தொழிலில் முன்னேறிய பிறகு பணத்தை எண்ணும் இயந்திரத்தை வாங்கியிருப்பார் என்றும் அவர் தெரிவித்தார்.

 பிரதமர் மோடி

பிரதமர் மோடி

இதைக் கேட்டவுடன் அவை தலைவர் தன்கர் ஒரு நிமிடம் ஸடன் ஆகிவிட்டார் ஸ்டன் ஆகிவிட்டார். உடனே கையெடுத்துக் கும்பிட்ட அவர், அப்படியெல்லாம் நான் எதையும் சொல்லியதே இல்லை என்று குறிப்பிட்டார். மேலும், போகிற போக்கைப் பார்த்தால் தன் மீதும் எதிர்க்கட்சி தலைவர் நாடாளுமன்ற விசாரணைக் குழுவைக் கேட்பார் போல.. என்றும் அவர் தெரிவித்தார். இது அவையில் சிரிப்பலையை ஏற்படுத்தியது. தன்கர் இப்படி சொன்னவுடன் பிரதமர் மோடியும் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தார். இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+