பயங்கரவாத எதிர்ப்பு.. நேராக முழங்கிய பிரதமர் மோடி! விழித்த பாகிஸ்தான் பிரதமர்! திரும்பிய புதின், ஜி
டெல்லி: எஸ்சிஓ எனும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு பிரதமர் மோடி தலைமையில் இன்று தொடங்கி நடந்தது. அப்போது பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் முன்னிலையில் பயங்கரவாதத்துக்கு எதிராக பிரதமர் மோடி முழங்கியதை சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் வியந்து பார்த்தனர்.
உலகில் மிகப்பெரிய கூட்டமைப்பாக ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உள்ளது. இதில் ரஷ்யா, சீனா, கிர்கிஸ்தான், கஜகஜஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் உள்ளன. இந்நிலையில் தான் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு முதல் முதலாக இந்தியா தலைமை தாங்கி நடக்கிறது.

காணொளி காட்சி மூலம் தொடங்கிய இந்த மாநாட்டுக்கு பிரதமர் மோடி தலைமை தாங்கினார். மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் விளாமிர் புதின், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் உள்பட பிற நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்தியாவில் இந்த மாநாடு SECURE என்ற கருப்பொருளை அடிப்படையாக கொண்டு நடந்தது. அதாவது பாதுகாப்பு (S for Security), பொருளாதார வளர்ச்சி (E for Economic Development), தொடர்பு (C for Connectivity), ஒற்றுமை ( U for Unity) இறையா்ணமை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை மதித்தல் ( R for Respect for sovereignty and territorial integrity) சுற்றுச்சூழல் பாதுகாத்தல் (E for Environmental protection) உள்ளிட்டவை தான் இந்த மாநாட்டின் கருப்பொருளாக உள்ளன.
அதன்படி இன்று ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு இன்று துவங்கியது. இதில் பிரதமர் மோடி பேசினார். அப்போது அவர் கூறியதாவது: பயங்கரவாதத்தில் இரட்டை வேடம் போடக்கூடாது. பயங்கரவாதத்துக்கு அடைக்கலம் கொடுக்கும் நாடுகளை கண்டிக்க ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு தயங்க கூடாது.
பிராந்தியங்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த நாடுகளுக்கும் பயங்கரவாதம் என்பது பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. மேலும் அமைதியை முற்றிலுமாக சீர்க்குலைக்கிறது. பயங்கரவாதத்துக்கு எதிராக நாம் போராட வேண்டும். எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை சில நாடுகள் கொள்கையாக கொண்டுள்ளன. பயங்கரவாதிகளுக்கு கிடைக்கும் நிதியை தடுக்க உலக நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை விரிவுப்படுத்த வேண்டும்.
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டின்போது நிலவும் மொழி தடையை அகற்ற இந்தியாவின் ஏஐ அடிப்படையிலான தொழில்நுட்பத்தை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். இது டிஜிட்டல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கான உதாரணமாகும். இதன்மூலம் ஐநா உள்பட பிற உலகளாவிய அமைப்புகளின் பரிணாம வளர்ச்சிக்கு ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உதாரணமாக இருக்கும். இந்த குழுவில் ஈரான் புதிதாக இணைவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்'' என்றார்.












Click it and Unblock the Notifications