கொரோனாவால் கடும் பாதிப்பு- வலிநிறைந்த 2020-ம் ஆண்டு: அமெரிக்கா-இந்தியா உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி
டெல்லி: 2020-ம் ஆண்டு வலி நிறைந்த ஆண்டாக மாறும் என யாரேனும் நினைத்திருப்போமா? உலக நாடுகள் அனைத்தையும் கொரோனா மிக கடுமையாக பாதித்திருக்கிறது என்று அமெரிக்கா- இந்தியா உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி தெரிவித்தார்.
USISPF என்பது இந்தியா, அமெரிக்கா இடையேயான நல்லுறவுக்கான அமைப்பு. இதன் மாநாடு ஆகஸ்ட் 31-ந் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

இந்த மாநாடானது புதிய சவால்களை எதிர்கொள்ளும் இந்தியா- அமெரிக்கா என்பதை மையமாக கொண்டது. இதில் இந்திய பசிபிக் பிராந்திய சிக்கல்கள், அன்னிய நேரடி முதலீடுகளை இந்தியா ஈர்த்தல் உள்ளிட்ட தலைப்புகளில் கருத்துகள் முன்வைக்கப்பட்டன.
USISPF-ன் 3-வது தலைமைத்துவ உச்சி மாநாட்டில் தற்போது பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். இதில், இந்தியாவில் கொரோனா பாதிப்பால் குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 2020-ம் ஆன்ட் வலிநிறைந்ததாக இருக்கிறது. கொரோனாவின் தாக்கம் உலகம் முழுவதும் இருக்கிறது என்றார்.
மேலும் 130 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் கொரோனா மரணங்கள் குறைவாக உள்ளன. கொரோனா என்பது பல பாதிப்புகளை ஏற்படுத்தி இருக்கலாம்; 130 கோடி இந்தியர்களின் லட்சியங்களை பாதிக்காது.
கொரோனா லாக்டவுன் காலத்தில் ஏழைகள் பாதிக்கப்படக் கூடாது என்பதில் இந்தியா உறுதியாக இருந்தது. அன்னிய முதலீடுகளை ஈர்க்கக் கூடிய நாடுகளில் இந்தியா முதன்மை இடத்தில் இருக்கிறது. கொரோனா லாக்டவுன் காலத்தில் 80 கோடி இந்தியர்களுக்கு உதவும் திட்டத்தை செயல்படுத்தினோம்
இந்தியாவில் முதலீடு செய்ய பிறநாடுகளின் முதலீட்டாளர்கள் முன்வர வேண்டும். 2020-ம் ஆண்டில் இந்தியா 20 பில்லியன் டாலர் அன்னிய முதலீட்டை ஈர்த்துள்ளது என்றும் பிரதமர் மோடி கூறினார்.
-
"நாளைக்கு வரோம்.. களத்தை அதிர வைக்கிறோம்!" டெல்லியை மிரள வைக்க கிளம்பிய கரப்பான் பூச்சி கட்சி! -
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
குவைத் ஏர்போர்ட் தாக்குதல்.. அமெரிக்காவின் தவறு! ஈரான் பரபர குற்றச்சாட்டு.. மறுக்கும் டிரம்ப்! -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
டிரம்ப் உடைத்த சர்ப்ரைஸ்.. "மோடி என் நண்பன்".. விரைவில் இந்தியா அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
கொத்தடிமை முறையை ஒழிக்க இந்தியா தவறிவிட்டதாம்.. கூடுதல் வரிக்கு காரணம் சொல்லும் டிரம்ப்! -
நெதன்யாகுவை திட்டியது உண்மைதான்.. லெபனான் விவகாரத்தில் நடந்தது என்ன? ஓபனாக பேசிய டிரம்ப்!












Click it and Unblock the Notifications