டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ரூ.861 கோடியில் புதிய நாடாளுமன்றம்... பிரதமர் அடுத்த வாரம் அடிக்கல் நாட்டுகிறார்!

Google Oneindia Tamil News

புதுடெல்லி: நாடாளுமன்ற புதிய கட்டிடத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி அடுத்த வாரம் அடிக்கல் நாட்ட உள்ளார் என மக்களவைத் தலைவர் ஓம் பிரகாஷ் பிர்லா கூறி உள்ளார்.

புதிய நாடாளுமன்ற கட்டிடம் ரூ.861.9 கோடி செலவில் 64,500 சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்ட உள்ளது. ஒவ்வொரு எம்பிகளுக்கும் தனித்தனி அலுவலகம் என பல்வேறு வசதிகள் நாடாளுமன்ற கட்டிடத்தில் இடம் பெற்று இருக்கும் என கூறப்படுகிறது.

PM modi will lay the foundation for the new parliament building next week

தற்போது உள்ள நாடாளுமன்ற கட்டிடத்துக்கு பதில் ஒன்றிணைந்த புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்ட மத்திய அரசு முடிவு செய்தது. 'சென்ட்ரல் விஸ்டா' திட்டத்தின் அடிப்படையில் புதிய நாடாளுமன்ற கட்டிடம், மத்திய தலைமைச் செயலகம் கட்டப்பட உள்ளன. தற்போதைய கட்டிடத்தின் அருகே புதிய நாடாளுமன்ற கட்டிடம் முக்கோண வடிவில் அமைக்கப்படும். இந்த கட்டிடம் ஓராண்டில் கட்டி முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.புதிய கட்டிடம் ரூ.861.9 கோடி செலவில் அமைக்கபடுகிறது. இதன் பரப்பளவு உத்தேசமாக 64,500 சதுர மீட்டராக இருக்கும் என தெரிகிறது. டாடா புராஜக்ட்ஸ் நிறுவனம் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள உள்ளது.

PM modi will lay the foundation for the new parliament building next week

இந்த நிலையில், மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா செய்தியாளர்களிடம் கூறுகையில் 'புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கான அடிக்கல் நாட்டு விழா வரும் 10-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டுவார்" என்றார்.
இந்த மாதத்தில் புதிய நாடாளுமன்ற கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும்,

PM modi will lay the foundation for the new parliament building next week

தற்போதைய நாடாளுமன்ற கட்டிடத்தில் மக்களவை 543 உறுப்பினர்கள் அமரும் வகையில் கொண்டது. ஆனால் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் 888 உறுப்பினர்களுக்கு அமரக்கூடிய திறன் இருக்கும், மாநிலங்களவை அறையில் தற்போதைய கட்டிடத்தில் 245 உறுப்பினர்கள் அமரும் நிலையில், புதிய கட்டிடத்தில் 384 பேருக்கு இடமளிக்க முடியும். மக்களவை அறைக்கான அதிகபட்ச கொள்ளளவு 1272 இடங்களாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், ஒரு மாபெரும் அரங்கு, உறுப்பினர்களுக்கான வளாகம், நூலகம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இடம் பெற உள்ளன. அனைத்து எம்.பி.களுக்கும் தனித்தனி அலுவலகங்கள் கட்டப்பட உள்ளது.

English summary
Lok Sabha Speaker Om Prakash Birla has said that Prime Minister Narendra Modi will lay the foundation stone for the new parliament building next w
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X