ஐநா தலைமையகத்தில் சர்வதேச யோகா தின கொண்டாட்டம்! தலைமை வகிக்கப்போவது பிரதமர் நரேந்திர மோடி!
டெல்லி: ஜூன் 21ம் தேதி ஐநா தலைமையகத்தில் நடைபெற உள்ள சர்வதேச யோகா தின கொண்டாட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், இந்நிகழ்ச்சியில் அவர் பங்கேற்க உள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 21ஆம் தேதியன்று சர்வதேச யோகா தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இது கடந்த 2014ஆம் ஆண்டு பாஜக ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் பின்பற்றப்பட்டு வருகிறது. ஜூன் மாதம் 21ஆம் தேதியை சர்வதேச யோகா தினமாக கடைப்பிடிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி ஐநா சபையில் கோரிக்கை வைத்திருந்தார். 2014ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வைக்கப்பட்ட கோரிக்கையானது அதே ஆண்டில் டிசம்பர் மாதம் 11ம் தேதியன்று ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இதற்காக 175 உறுப்பு நாடுகள் ஓப்புதல் அளித்தன. பொதுவாக கோடை காலத்தின் மிக முக்கிய நாளாக ஜூன் மாதத்தின் 21ம் தேதி பார்க்கப்படுகிறது. ஏனெனில் இந்த நாள்தான் ஆண்டின் நீண்ட நாளாக இருக்கிறது. எனவே இதனை சர்வதேச யோகா தினமாக கொண்டாட வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியிருந்தார்.
ஐநா இக்கோரிக்கையை ஏற்றதையடுத்து ஒவ்வொரு ஆண்டும் இதே நாளில் சர்வதேச யோகா தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு ஐநா தலைமையகத்தில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. இதனை சிறப்பிக்கும் வகையில், பிரதமர் நரேந்திர மோடிக்கு ஐநா பொதுச் சபைத் தலைவர் சிசாபா கோரோசி டிவிட்டரில் அழைப்பு விடுத்திருந்தார்.

இதற்கு பதிலளித்த பிரதமர் மோடி, "ஐநா தலைமையகத்தில் சர்வதேச யோகா தின கொண்டாட்டத்தில் உங்களை சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன். உங்களின் பங்களிப்பு இந்நிகழ்ச்சியை மேலும் சிறப்படைய செய்யும். யோகா உடல் ஆரோகியத்தை மட்டுமல்லாது இந்த உலகையும் ஒன்றிணைக்கிறது. இந்நிகழ்ச்சி மூலம் இது மேலும் பிரபலமடைய கூடும்" என்று கூறியுள்ளார்.
மேலும், பல்வேறு யோகா வீடியோக்களையும் பிரதமர் மோடி டிவிட்டரில் பகிர்ந்து, "யோகாவானது வலிமையையும், நெகிழ்வு தன்மையையும், அமைதியையும் வளர்க்கிறது. உடல் மற்றும் மனதிற்கு இது நல்ல பலனை தருகிறது. எனவே யோகாவை நமது வாழ்வின் ஓர் அங்கமாக்குவோம்" என்றும் கூறியுள்ளார்.
சர்வதேச யோகா தினத்தன்று ஐநா தலைமையகத்தில் நடைபெறும் யோகா கொண்டாட்டங்களுக்ககு பிரதமர் மோடி தலைமை வகிப்பார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications