மன் கி பாத் வானொலி நிகழ்ச்சியிலும் சந்திரபாபு நாயுடுவை விட்டுத் தராத மோடி! என்ன சொன்னார் தெரியுமா?
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தமது மன் கி பாத் வானொலி நிகழ்ச்சியிலும் தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும் ஆந்திரா முதல்வருமான சந்திரபாபு நாயுடுவை பெருமிதத்துடன் குறிப்பிட்டுப் பேசினார். மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி புதிய அரசு அமைப்பதற்கு சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி முதன்மை காரணம் என்பதால் மன் கி பாத் வானொலி நிகழ்ச்சியிலும் பிரதமர் மோடி குறிப்பிட்டு பேசியதாக தெரிகிறது.
இன்றைய மன் கி பாத் வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: பாரதத்தின் பல பொருட்களுக்கு உலகெங்கிலும் தேவை அதிகம் இருக்கிறது, நாம் நமது நாட்டின் உள்ளூர்ப் பொருட்கள் உலக அளவில் பரவலாக்கப்படுவதைக் காணும் போது, நெஞ்சம் கர்வத்தில் விம்முவது இயல்பான விஷயம் தானே!! இப்படிப்பட்ட ஒரு பொருள் தான் அரக்கு காப்பி. அரக்கு காப்பி, ஆந்திரப் பிரதேசத்தின் அல்லூரி சீதா ராம ராஜு மாவட்டத்தில் அதிக அளவில் பயிரிடப்பட்டு வருகிறது.

இதன் செறிவான சுவையும் மணமும் உலகப் புகழ் வாய்ந்தவை. அரக்கு காப்பியின் சாகுபடியோடு சுமார் ஒண்ணரை இலட்சம் பழங்குடியினக் குடும்பங்கள் தொடர்புடையனவாக இருக்கின்றன. அரக்கு காப்பியை புதிய உயரங்களுக்குக் கொண்டு செல்வதில் கிரிஜன் கூட்டுறவுக்கு மிகப்பெரிய பங்களிப்பு இருக்கிறது. இங்கிருக்கும் விவசாய சகோதர சகோதரிகளோடு இணைந்து இது செயல்பட்டு, அரக்கு காப்பியைப் பயிர் செய்ய அவர்களை ஊக்கப்படுத்தியது. இதன் காரணமாக இங்கிருக்கும் விவசாயிகளின் வருவாய் அதிகம் பெருகியது. இதனால் ஆதாயம் இங்கிருக்கும் கோண்டா டோரா பழங்குடியினச் சமூகத்துக்கும் கிடைத்திருக்கிறது. வருமானத்தோடு கூடவே அவர்களுக்கு வாழ்க்கையில் ஒரு கௌரவமும் கிடைத்திருக்கிறது.
நானும் சந்திரபாபு நாயுடுவும்: ஒருமுறை விசாகப்பட்டினத்தில் ஆந்திரப் பிரதேசத்தின் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அவர்களோடு இந்தக் காப்பியைப் பருகும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்ததை நான் இப்போது நினைவு கூருகிறேன். இதன் சுவையைப் பற்றி நான் என்ன சொல்ல, ஆஹா அற்புதம்!! மிகவும் அருமையான காப்பி!! அரக்கு காப்பிக்கு உலகளாவிய பல விருதுகள் கிடைத்திருக்கின்றன. டெல்லியில் நடந்த ஜி 20 உச்சிமாநாட்டிலும் கூட காப்பி எங்கும் மணம் பரப்பிக் கொண்டிருந்தது. உங்களுக்கு எப்போது சந்தர்ப்பம் வாய்க்கிறதோ, அப்போது நீங்களும் கூட அரக்கு காப்பியை சுவைத்து மகிழுங்களேன்!!
ஜம்மு காஷ்மீர்: நண்பர்களே, உள்ளூர்ப் பொருட்களை உலகளாவிய அளவுக்குக் கொண்டு சேர்ப்பதில் நம்முடைய ஜம்மு கஷ்மீரைச் சேர்ந்தவர்கள் ஒன்றும் பின் தங்கிப் போனவர்கள் அல்ல. கடந்த மாதங்களில் ஜம்மு கஷ்மீர் சாதித்துக் காட்டியிருப்பவை, நாடெங்கும் இருக்கும் மக்களுக்கும் கூட ஒரு எடுத்துக்காட்டு. இங்கே, புல்வாமாவிலிருந்து அவரைக்காயின் முதல் தொகுதி லண்டனுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கஷ்மீரில் விளையும் அரியவகைக் காய்கறிகளை ஏன் நாம் உலகிற்கு அறிமுகம் செய்யக்கூடாது என்ற எண்ணம் சிலர் மனங்களில் உதித்தது. அப்புறமென்ன!! சகூரா கிராமத்தைச் சேர்ந்த அப்துல் ராஷீத் மீர் அவர்கள் இதற்காக முதன்முதலில் முன்வந்தார். இவர் கிராமத்தின் பிற விவசாயிகளின் நிலங்களை ஒருங்கிணைத்து, அவரைப்பயிரை விளைவிக்கும் பணியைத் தொடக்கினார், சில காலத்திற்குள்ளாகவே அவரைக்காய் கஷ்மீரிலிருந்து லண்டனைச் சென்றடைந்தது. இந்த வெற்றி, ஜம்மு கஷ்மீரின் மக்களுக்கு வளங்களை அளிக்கும் புதிய கதவுகளைத் திறந்து விட்டிருக்கிறது. நம்முடைய நாட்டிலே இப்படிப்பட்ட தனித்துவமான பொருட்களுக்குக் குறைவேதும் இல்லை. நீங்கள் இப்படிப்பட்ட பொருட்களை #myproductsmypride என்பதில் கண்டிப்பாகப் பகிருங்கள். நான் இந்த விஷயம் தொடர்பாக வரவிருக்கும் மனதின் குரல் நிகழ்ச்சிகளிலும் விவாதிக்க இருக்கிறேன். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
-
2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார் முதல்வர் விஜய்.. இன்று மோடியுடன் சந்திப்பு.. பக்காவாக ரெடியான மனு! -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications