டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

குடும்ப அரசியலால் ஊழல்.. யாராக இருந்தாலும் தண்டனையிலிருந்து தப்ப முடியாது- பிரதமர் கடும் தாக்கு

Google Oneindia Tamil News

டெல்லி: குடும்ப நலன் போன்றவற்றால் பல திறமையானவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

Recommended Video

    எல்லா துறையிலும் பெண்கள் தான் முதலிடத்தில் உள்ளனர் - PM Modi *India

    நாட்டின் சுதந்திர தினத்தையொட்டி டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அவர் தனது உரையில் இந்திய வரலாற்றில் அடுத்த 25 ஆண்டுகள் முக்கியம்.

    பெரிய இலக்குகளை நிர்ணயிப்பது மட்டுமே இந்தியாவின் வளர்ச்சிக்கு உதவும். அடிமைத்தனத்தை முழுவதுமாக வேரறுக்க வேண்டும். நாட்டின் ஒற்றுமையை நிலைநாட்ட வேண்டும். 2047-ம் ஆண்டுக்குள் சுதந்திர போராட்ட தியாகிகளின் கனவுகளை நிறைவேற்ற வேண்டும்.

    புதிய பாதையில் இந்தியா காலடி வைக்கும் நாள் இது! வீடுகளில் தேசிய கொடியேற்றியது பெருமை- மோடி பேச்சு புதிய பாதையில் இந்தியா காலடி வைக்கும் நாள் இது! வீடுகளில் தேசிய கொடியேற்றியது பெருமை- மோடி பேச்சு

    பாரம்பரியம்

    பாரம்பரியம்

    நமது பாரம்பரியத்தின் மீது கர்வம் கொள்ள வேண்டும். பெருமைப்பட வேண்டும். நாட்டின் பாரம்பரியத்தை பாதுகாக்க வேண்டும். சுதந்திரம் பெற்று 100 ஆண்டுகளில் முக்கிய குறிக்கோள்களை அடைந்திருக்க வேண்டும். ஒருங்கிணைந்த உணர்வுதான் இந்தியாவின் பலம். புதிய இந்தியாவிற்கு இதுதான் பலம். இந்தியாவின் வளர்ச்சிக்கு அனைத்து குடிமகன்களும் பங்காற்ற வேண்டும். என்னுடன் சேர்ந்து அனைவரும் உறுதியேற்றுக் கொள்ளுங்கள்.

    குறிக்கோள்கள்

    குறிக்கோள்கள்

    நமது குறிக்கோள்கள், எண்ணங்கள் பெரியதாக இருக்க வேண்டும். அனைவருக்கும் குடிநீர், மின்சாரம் அளிக்கும் திட்டங்கள் வென்றுள்ளன. இந்தியா வளர்ச்சி பெற்ற நாடாக உருவாக வேண்டும். கனவுகளை நனவாக்கக் கூடிய காலம் இது. இந்தியாவில் உள்ள பல மொழிகள் நம் நாட்டின் பெருமை, இந்தியாவில் அடிமைத்தனத்தின் எந்த ஒரு அடையாளத்தையும் துடைத்தெறிய வேண்டும். அனைவருக்கும் நல்லாட்சி அனைவருக்கும் வளர்ச்சி என்பதே நம் இலக்கு ஆகும்.

    புவி வெப்பமயம்

    புவி வெப்பமயம்

    புவி வெப்பமாவதை தடுக்க முன்னோர்கள் வழிகாட்டியுள்ளார்கள். மொழித் தடையால் சில நேரங்களில் திறமை வெளிப்படுவதில்லை. நமது பாரம்பரியம் கலாச்சாரம் குறித்து பெருமைப்பட வேண்டும். பாலின சமநிலை காக்கப்படுவது நமது முக்கிய இலக்கு. பெண்களை அவமரியாதை செய்வதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது. தண்ணீர் அளிப்பது அரசின் கடமை, அதை வீணாக்காமல் இருப்பது மக்களின் கடமை.

    குடிமகன்

    குடிமகன்

    ஒவ்வொரு குடிமகனும் சுயசார்பு உள்ளவராக மாறியுள்ளோம். சுயசார்பால் 300 பொருட்களின் இறக்குமதியை தவிர்த்துள்ளோம். பொருட்களின் உற்பத்தி மையமாக மாறி வருகிறது இந்தியா. நமது சுயசார்பு மின்சார துறையிலும் சிறப்பாக உள்ளது. அனைத்து துறைகளிலும் சுயசார்பு தேவை. சிறு விவசாயிகள், சிறு வணிகர்களுக்கு உதவிகளை அதிகரிக்க வேண்டும். ரசாயனங்கள் இல்லாத உரங்கள் மூலம் வேளாண் துறையை வளர்ச்சி அடைய செய்ய வேண்டும்.

    புதிய கண்டுபிடிப்புகள்

    புதிய கண்டுபிடிப்புகள்

    புதிய கண்டுபிடிப்புகள் மூலம் நாட்டை வலிமைப்படுத்த வேண்டும். அனைத்து கிராமங்களிலும் இணையதளம் சேர 5 ஜி உதவும்- பிரதமர். ஐடி, ஸ்டார்ட் அப் துறைகளில் இந்தியா சிறந்து விளங்குகிறது. மக்களின் ஆசிர்வாதத்தால் ஊழலுக்கு எதிராக போராட முடிகிறது. இந்த நேரத்தில் ஊழல் மற்றும் குடும்ப நலனுக்காக செயல்படுதல் ஆகிய இரண்டு விஷயங்களை குறித்து பேச விரும்புகிறேன். ஒரு பக்கம் வீடே இல்லாத மக்கள் இன்னொரு பக்கம் தங்கள் திருடிய பொருளை எங்கே வைப்பது என்று தெரியாத மக்கள். ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க இந்திய நாட்டு மக்கள் எனக்கு ஆசிர்வாதங்களை வழங்க வேண்டும். அப்பொழுதுதான் இந்த போரில் என்னால் வெற்றி பெற முடியும். ஊழல் செய்தவர்கள் எத்தனை பெரிய நபர்களாக இருந்தாலும் அவர்கள் தப்பிக்க முடியாது.

    கொள்ளை அடித்தவர்கள்

    கொள்ளை அடித்தவர்கள்

    நாட்டை கொள்ளை அடித்தவர்கள் நிச்சயம் அதற்கான விலையை கொடுத்தே ஆக வேண்டும். பல இடங்களில் ஊழல் வழக்குகளில் தண்டனை பெற்று சிறையில் இருந்து வெளி வந்ததற்கு பிறகு சிலர் தலைமை பொறுப்புகளுக்கு வருவதை பார்க்கிறோம். குடும்ப நலத்தால் அரசியல் மட்டும் பாதிக்கவில்லை, அனைத்து துறைகளும்தான். குடும்ப நலம் என்ற மோசமான விஷயத்தால் நாட்டின் திறமையானவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். குடும்ப நலம், குடும்ப அரசியல் ஆகியவை நாட்டின் நலனுக்கு பாதிப்பை கொடுக்கிறது என்றார் பிரதமர் மோடி. ஒவ்வொரு முறையும் தனது பேச்சில் குடும்ப அரசியல், வாரிசு அரசியல் குறித்து பிரதமர் மோடி பேசுவது குறிப்பிடத்தக்கது.

    English summary
    PM Narendra Modi says about Corruption and heir politics in his Independence day speech.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X