டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பூலித்தேவன் பிறந்த தினம்.. ”ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போரிட்டவர்” பிரதமர் மோடி தமிழில் ட்வீட்!

Google Oneindia Tamil News

டெல்லி: சுதந்திரப் போராட்ட வீரா் பூலித்தேவன் பிறந்த தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி தமிழில் ட்வீட் செய்து புகழ்ந்துள்ளார்.

ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டு கிடந்த இந்தியாவுக்கு சுதந்திரம் பெற்றுத் தர நாடு முழுவதும் எத்தனையோ இளைஞர்கள் துணிந்து போராடி தங்கள் உயிரை மாய்த்துகொண்டனர்.

இவர்களில் வெகு சிலரைப் பற்றி மட்டுமே நாம் அறிந்திருக்கிறோம். இவர்களில் முதன்மையானவர் தமிழ்நாட்டில் பிறந்து ஆங்கிலேயரை எதிர்த்து போரிட்ட பூலித்தேவன். ஆங்கிலேயரை எதிர்த்து 1755 முதல் 1767 வரை போரிட்டு 12 ஆண்டுகளில் 15 முறை வெற்றி பெற்றவர்.

இலை இருக்கும் வரை தான் மரியாதை.. 4 பேர்.. 'முடிவெடுங்க’- எடப்பாடிக்கு முக்கிய புள்ளி கொடுத்த ஆலோசனை! இலை இருக்கும் வரை தான் மரியாதை.. 4 பேர்.. 'முடிவெடுங்க’- எடப்பாடிக்கு முக்கிய புள்ளி கொடுத்த ஆலோசனை!

புலித்தேவர் யார்?

புலித்தேவர் யார்?

இறுதியாக இவர் 1767ஆம் ஆண்டு இறந்து விட்டதாக சொல்லப்பட்டாலும், அது உண்மையில்லை. 1767ம் ஆண்டு நடைபெற்ற போரில் தோற்ற பூலித்தேவனை கைது செய்த ஆங்கிலேயர்கள், அவரை சிறைக்கு கொண்டு செல்லும் வழியில், சங்கரன் கோவிலில் சாமி கும்பிடச்சென்றவர் அந்த கோவிலிலேயே மறைந்து விட்டார். இது பற்றிய கல்வெட்டு அந்த கோவிலில் இன்றைக்கும் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

307வது பிறந்தநாள்

307வது பிறந்தநாள்


இந்த நிலையில் சுதந்திர போராட்ட வீரர் பூலித்தேவன் 307வது பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே நெற்கட்டும் செவலில் அமைக்கப்பட்டுள்ள நினைவு மாளிகையில் உள்ள பூலித்தேவனின் வெண்கல சிலைக்கு தமிழக அரசு சார்பிலும், பல்வேறு அரசியல் கட்சிகள், இயக்கங்கள் சார்பிலும் மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.

உச்சக்கட்ட பாதுகாப்பில் தென்காசி

உச்சக்கட்ட பாதுகாப்பில் தென்காசி

இதனால் தென்காசி மாவட்டம் முழுவதும் சுமார் 15க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தீவிர வாகன சோதனை செய்த பின் அனுமதிக்கப்படுகின்றனர். இதுமட்டுமல்லாமல் பிறந்தநாள் விழாவுக்காக சுமார் 1200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பிரதமர் மோடி ட்வீட்

பிரதமர் மோடி ட்வீட்

இந்த நிலையில் விடுதலைப் போராட்ட வீரா் பூலித்தேவன் பிறந்த தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி தமிழில் ட்வீட் செய்துள்ளார். அதில், மாவீரன் பூலித்தேவருக்கு அவரது பிறந்த நாளில் வணக்கங்களை செலுத்துகிறேன். அவரது வீரமும் உறுதிப்பாடும் எண்ணற்றோருக்கு ஊக்கமளித்து வருகிறது. முன்னணியில் நின்று அந்நிய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போரிட்டவர். மக்களுக்காக எப்போதும் தளராது பாடுபட்டவர் என்று புகழ்ந்து பதிவிட்டுள்ளார்.

English summary
( பூலித்தேவன் பிறந்த தினம் - பிரதமர் மோடி தமிழில் ட்வீட் செய்து புகழாரம் ) PM Narendra Modi tweeted in Tamil on the occasion of freedom fighter Puli Thevan birthday. He tweets, Puli Thevan Courage and determination have inspired countless. He stood at the forefront and fought against foreign imperialism.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X