மோடியின் ஹெலிகாப்டர் பயணம் திடீர் மாற்றம்.. காரில் சென்றபோது சிக்கல்.. பஞ்சாப்பில் என்னதான் நடந்தது?
பிரதமர் மோடியின் 2 மணி பயண நிகழ்ச்சியில் என்னதான் நடந்தது
டெல்லி: பிரதமர் மோடி பஞ்சாப் மாநிலத்துக்கு சென்றபோது அங்கு அவர் சென்ற பாதையை போராட்டக்காரர்கள் வழிமறித்து சாலை மறியல் செய்ததால் பதற்றம் ஏற்பட்டது... இதையடுத்து பல்வேறு விஷயங்கள் அடுத்தடுத்து நடந்து நாட்டையே பரபரப்பாக்கிவிட்டன.. உண்மையிலேயே பிரதமரின் பயணத்தில் அந்த 2 மணி நேரம் என்னதான் நடந்தது?
Recommended Video

பஞ்சாபில் அந்த 2 மணி நேரம் என்னதான் நடந்தது?
பிரதமர் நரேந்திர மோடி, நேற்று காலை பஞ்சாபின் ஹுசைனிவாலாவில் உள்ள தேசிய தியாகிகள் நினைவிடத்திற்கு ஹெலிகாப்டர் மூலம் செல்ல பதிண்டாவில் தரையிறங்கினார்... அப்போது மோசமான வானிலை காரணமாக அவரது பயணத்தில் திடீர் மாற்றம் செய்யப்பட்டது.

பயணம்
மழை மற்றும் மோசமான வானிலை காரணமாக, மேகம் தெளிவடைவதற்காக சுமார் 20 நிமிடங்கள் வரை ஏர்போர்ட்டிலேயே அவர் காத்திருக்க நேர்ந்தது.. ஆனால், வானிலை தொடர்ந்து சீரடையாததால், சாலை வழியாக பயணம் செய்ய திட்டமிடப்பட்டது... அதுவும், பஞ்சாப் மாநில காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதிப்படுத்திய பிறகே, பிரதமர் சாலை வழியாக பயணம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

மேம்பாலம்
அதன்படி, ஹுசைனிவாலாவில் உள்ள தேசிய தியாகிகள் நினைவிடத்திலிருந்து சுமார் 30 கி.மீ தூரத்தில் பிரதமரின் வாகனம் ஒரு மேம்பாலத்தை அடைந்தது.. அங்கே சில எதிர்ப்பாளர்கள் சாலை மறியல் செய்தனர். போராட்டத்தில் ஈடுபட்டனர்.. அதனால் அந்த மேம்பாலத்தில் பிரதமரும் அவரது வாகன தொடரணியும் 15-20 நிமிடங்கள் சிக்கி கொண்டன... இந்த இடத்தில் இருந்து பிரதமர் பயணம் செய்ய வேண்டிய பகுதி, சரியாக 18 கி.மீ தூரத்தில் உள்ளது. ஆனால், 10 கிமீ முன்னதாகவே வாகனம் தடுத்து நிறுத்தப்பட்டது.

வீடியோ
இது தொடர்பான வெளியான வீடியோக்களில், காருக்குள்ளேயே பிரதமர் உட்கார்ந்திருந்ததையும் காண முடியும்.. ஆனால், பிரதமரை மற்ற வாகனங்கள் சூழ்ந்து கொண்டன.. இதில் போராட்டக்காரர்களின் ஒருசில விவசாயிகள் மோடியின் வாகனத்துக்கு அருகிலேயே நின்றிருப்பதையும் காண முடிந்தது.. கடைசியாகத்தான் அங்கிருந்து திரும்ப வேண்டிய சூழல் ஏற்பட்டது... பிரதமரின் வாகனம் திரும்பியதுமே, அதற்கு பின்னால் போராட்டக்காரர்களும் சேர்ந்து ஓடியதும் அந்த வீடியோக்களில் பதிவாகி இருந்தது.

பரபரப்பு
பிரதமரின் பாதுகாப்பு ஏற்பாட்டில் ஏற்பட்ட மிகப்பெரிய குளறுபடி நடைபெற்றதையடுத்து மோடி பங்கேற்க இருந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.. உடனடியாக பதிண்டா ஏர்போர்ட்டுக்கே பிரதமர் மோடி திரும்பி சென்றார்... பாதுகாப்பு குறைபாடுகளால் பிரதமர் மோடியின் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
-
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்!












Click it and Unblock the Notifications