ஓஹோ...ஏதோ சீக்ரெட் மிஷன்? பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர் விரைவில் இந்தியாவுடன் தானாகவே இணையப் போகுதாம்!
டெல்லி: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்தியாவுடன் இணையப் போவதாக வலியுறுத்தி தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தானாகவே இந்தியாவுடன் இணையப் போவதாக மத்திய அமைச்சர் விகே சிங் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஜம்மு காஷ்மீரின் ஒரு பகுதிதான் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என அழைக்கப்படுகிறது. 1947 முதல் இந்த பகுதியை பாகிஸ்தான் தனது நாட்டின் ஒருங்கிணைந்த பகுதியாக கூறி வருகிறது. ஆனால் இதனை மத்திய அரசு நிராகரித்து, இந்தியாவின் ஒரு பகுதிதான் என திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறது.

இந்தியாவின் ஒரு பகுதியே: மத்தியில் ஆளும் பாஜக அரசு, பாகிஸ்தான் ஆக்கிரமித்திருக்கும் காஷ்மீர் நிலம் முழுவதும் இந்தியாவின் ஒரு பகுதிதான் என வெளிப்படையாக பிரகடனம் செய்தது; வரைபடமும் வெளியிட்டிருந்தது. இதனால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீது ஏதேனும் ஒரு நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொள்ளலாம் என கூறப்பட்டு வந்தது.
பாகிஸ்தான் எதிர்ப்பு போராட்டம்: இந்நிலையில் மத குருமார் ஒருவர் மதநிந்தனை புகாரின் பேரில் பாகிஸ்தான் அரசு கைது செய்த சம்பவம், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அங்குள்ள கில்ஜிட், பல்டிஸ்தான் பகுதிகளில் பெரும் போராட்டங்களை மக்கள் முன்னெடுத்து வருகின்றனர். பாகிஸ்தான் சன்னி முஸ்லிம்களை பெரும்பான்மையினராக கொண்டது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஷியா முஸ்லிம்கள் கணிசமாக வசிக்கின்றனர். இந்த பிரிவு வேறுபாடுகளும் பாகிஸ்தான் எதிர்ப்பு போராட்டத்துக்கு காரணமாக சொல்லப்படுகிறது.
இந்தியாவுடன் இணைவோம் முழக்கம்: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் நடைபெறும் இந்தப் போராட்டங்களில் 'இந்தியாவுடன் நாங்கள் இணைகிறோம்' என்பது பிரதான முழக்கமாக இருந்து வருகிறது. இதனை வலியுறுத்தும் வகையில் சலோ! சலோ! கார்கில் சலோ என்பதும் இன்னொரு முழக்கமாக முன்வைக்கப்படுகிறது.
இருட்டடிப்பு செய்யும் பாக்: பாகிஸ்தான் பிடியில் இருந்து விடுபட்டு, இந்தியாவுடன் இணைகிறோம் என்ற இந்தப் போராட்டத்தை பாகிஸ்தான் ஊடகங்கள் இருட்டடிப்பு செய்கின்றன. அந்நாட்டு அரசும் இந்தப் போராட்ட செய்திகள் வெளியே செல்லாத வகையில் தடை நடவடிக்கைகளை அமல்படுத்தி இருக்கிறது. ஆனால் சமூக வலைதளங்கள் மூலமாக இந்த போராட்டங்கள் உலகத்தின் பார்வைக்கு தெரியப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தியாவுடன் தானாக இணையும்: இந்நிலையில்தான் ராஜஸ்தானில் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பின் போது கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மத்திய அமைச்சர் விகே சிங், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர் பகுதிகள் தானாகவே இந்தியாவுடன் இணைந்துவிடும். இதற்கு கொஞ்ச காலம் பொறுத்திருக்க வேண்டும் என்றார்.
ஏதோ சீக்ரெட் மிஷன் போல!












Click it and Unblock the Notifications