பிரசாந்த் கிஷோர் பப்ளிசிட்டிக்காக பேசுவார்.. அதையெல்லாம் என்கிட்ட கேக்காதீங்க.. நிதிஷ் அட்டாக்!
டெல்லி: நிதிஷ் குமார் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகினாலும் பாஜகவுடன் தொடர்பில் இருக்கிறார் என்று பிரசாந்த் கிஷோர் கூறிய நிலையில், இதற்கு பதில் அளித்து நிதிஷ் குமார் பேசியுள்ளார்.
பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆதரவுடன் முதல்வராக பதவி வகித்து வந்த நிதிஷ் குமார் யாரும் எதிர்பாராத வகையில் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல்வர் பதவியில் இருந்து ராஜினமா செய்தார்.
உடனடியாக காங்கிரஸ், ஆர்.ஜே.டி உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து மீண்டும் முதல்வராக பதவியேற்றுக்கொண்டார்.

ஒரு ஆச்சர்யம் இருக்கிறது
தற்போது பாஜகவுக்கு எதிராக தேசிய அளவில் கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் தீவிரமாக நிதிஷ் குமார் ஈடுபட்டுள்ளார். இதற்கு மத்தியில் பிகே என்று அழைக்கப்படும் பிரஷாந்த் கிஷோர் சமீப காலமாக நிதிஷ் குமாரை கடுமையாக விமர்சித்து வருகிறார். அந்த வகையில் மீண்டும் நிதிஷ் குமாரை பிரஷந்த் கிஷோர் கடுமையாக சாடியுள்ளார். இது தொடர்பாக பிரசாந்த் கிஷோர் கூறுகையில், ''பாஜகவுக்கு எதிராக தேசிய கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் நிதிஷ் குமார் தீவிரமாக ஈடுபட்டு இருப்பதாக நினைத்து இருப்பவர்களுக்கு ஒரு ஆச்சர்யம் இருக்கிறது.

பாஜகவுடன் நிதிஷ் குமார் தொடர்பு
பாஜகவுக்கான கதவுகளை அவர் இன்னும் திறந்தே வைத்துள்ளார். தனது கட்சி எம்.பியும் ராஜ்யசபா துணைத்தலைவருமான ஹரிவன்ஷ் ஜி மூலமாக பாஜகவுடன் நிதிஷ் குமார் தொடர்பு வைத்துள்ளார். அதன் காரணமாகவே ஹரிவன்ஷை ராஜினாமா செய்யுமாறு நிதிஷ் குமார் வலியுறுத்தவில்லை. பாஜகவுடன் கூட்டணி வைக்க வேண்டிய ஒரு சூழல் ஏற்பட்டால் உடனடியாக நிதிஷ் குமார் சென்று விடுவார் என்பதை மக்கள் மனதில் கொள்ள வேண்டும்'' என்று பேசியிருந்தார்.

நிதிஷ் குமார் பதில்
தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து நிதிஷ் குமார் வெளியே வந்தாலும் இன்னும் பாஜகவுடன் தொடர்பில் தான் இருக்கிறார் என்றும் மீண்டும் சேருவதற்காக தேவையேற்பட்டால் தயங்காமல் பாஜகவுடன் சென்று விடுவார் என்று கூறியது பீகார் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக நிதிஷ் குமாரிடம் செய்தியாளர்கள் இன்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்து நிதிஷ் குமார் கூறியதாவது:-

அவர் விரும்பியதை பேசலாம்
பிரஷாந்த் கிஷோரைப் பற்றி என்னிடம் கேட்காதீர்கள். அவர் பேசிக்கொண்டேதான் இருப்பார். விளம்பரத்திற்காக பிரஷாந்த் கிஷோர் இப்படி பேசுகிறார். அவர் விரும்பியதை பேசலாம். அதைப்பற்றி எங்களுக்கு எந்த கவலையும் இல்லை. ஒரு காலத்தில் அவரை நான் மதித்தேன். இப்போது பிரஷாந்த் கிஷோரின் மனதில் என்ன உள்ளது என்று எனக்கு தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications