ஜனாதிபதி தேர்தல் 2022: அடுத்த குடியரசுத்தலைவர் யார்.. வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்
குடியரசுத்தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. குடியரசுத்தலைவர்தேர்தல் அடுத்த மாதம் 18ஆம் தேதி நடக்கிறது.
டெல்லி: குடியரசுத்தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. குடியரசுத்தலைவர் தேர்தல் ஜூலை 18ஆம் தேதி நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனையடுத்து குடியரசுத்தலைவர் தேர்தலுக்கான வேட்பாளர் தொடர்பான ஆலோசனைகள் களைகட்டி உள்ளன.
Recommended Video
குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் அடுத்த மாதம் 24ஆம் தேதி முடிகிறது. புதிய குடியரசுத்தலைவர் ஜூலை 25ஆம் தேதி பதவி ஏற்க வேண்டும். அதற்குள் புதிய ஜனாதிபதியை தேர்வு செய்ய வேண்டும்.
இதற்கான தேர்தல் அடுத்த மாதம் 18ஆம் தேதி நடைபெற உள்ளது. இன்றைய தினம் வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. ஆனால், மத்தியில் ஆளும் பாஜக கூட்டணியோ, எதிர்க்கட்சிகளோ தங்களது வேட்பாளரை இன்னும் முடிவு செய்யவில்லை. இது தொடர்பான ஆலோசனைகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.

வேட்புமனு தாக்கல்
குடியரசுத்தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. ஜூன் 29ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை ஜூன் 30ஆம் தேதி நடைபெறும். வேட்பு மனுக்களை திரும்ப பெறுவதற்கான கடைசி நாள் ஜூலை 2 ஆகும்.

ஜூலை 18ஆம் தேதி தேர்தல்
பொது வேட்பாளரை தேர்வு செய்ய மத்தியில் ஆளும் பாஜக முயற்சி மேற்கொண்டுள்ளது. எதிர்கட்சியினரும் தங்கள் சார்பில் வேட்பாளரை நிறுத்த ஆலோசித்து வருகின்றன. குடியரசுத்தலைவர் தேர்தலில் போட்டியிருக்கும் பட்சத்தில் ஜூலை 18ஆம் தேதி ஓட்டுப்பதிவு நடைபெறும். ஜூலை 21ஆம் தேதி வாக்குகள் எண்ணி முடிவு அறிவிக்கப்படும்.

களைகட்டும் தேர்தல் களம்
குடியரசுத் தலைவர் தேர்தலை நடத்தும் அதிகாரியாக ராஜ்யசபா செயலாளர் பி.சி.மோடி நியமிக்கப்பட்டுள்ளார். சிறப்பு பணி அதிகாரி முகுல் பாண்டே, இணைச்செயலாளர் சுரேந்திரகுமார் திரிபாதி ஆகியோர் துணை தேர்தல் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். குடியரசுத்தலைவர் தேர்தலுக்காக மாநிலங்களவையில் தனிப்பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.

எப்படி நடக்கிறது குடியரசுத்தலைவர் தேர்தல்
நாட்டின் குடியரசுத்தலைவரை மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் எம்.எல்.ஏக்கள்,எம்.பிக்கள் வாக்களித்து தேர்வு செய்கிறார்கள். இவர்கள் 'எலக்டோரல் காலேஜ்' எனப்படும் வாக்காளர் குழுமம் என்று அழைக்கப்படுகிறார்கள். சில மாநிலங்களில் மேலவை உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர். அவர்களுக்கு குடியரசுத்தலைவர் தேர்தலில் வாக்களிக்க உரிமை இல்லை. அதேபோல, ராஜ்யசபா, லோக்சபாவில் நியமன உறுப்பினர்களுக்கும் குடியரசுத்தலைவர் தேர்தலில் வாக்குரிமை கிடையாது.

வாக்கெடுப்பு
1971ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் இந்த தேர்தல் வாக்குகள் மதிப்பு கணக்கிடப்படுகிறது. இந்த தேர்தலில் ஒவ்வொரு மாநிலத்துக்கும் எம்.எல்.ஏ. எம்.பி.யின் வாக்கு வங்கி மாறுபடும். மாநிலங்களவை எம்பி, மக்களவை எம்பிக்களின் வாக்குகளின் மதிப்பு மாறாது. அதே சமயம், மாநிலத்தில் உள்ள மக்கள் தொகைக்கு ஏற்ப எம்.எல்.ஏ.க்களின் வாக்குகளின் மதிப்பு மாறுபடும்.

எத்தனை லட்சம் வாக்குகள்
ஜனாதிபதி தேர்தலில் மொத்தம் 776 எம்.பி.க்கள் 4,033 எம்.எல்.ஏ.க்கள் வாக்களிப்பார்கள். இவர்களது ஒட்டுமொத்த வாக்கு மதிப்பு 10 லட்சத்து 79 ஆயிரத்து 206 ஆகும். இதில் 50 சதவீதத்துக்கு மேல் வாக்கு பெறுபவர் வெற்றி பெற முடியும்.

பாஜகவின் பலம்
பாஜக தலைமையிலான கூட்டணிக்கு 5 லட்சத்து 26 ஆயிரத்து 420 வாக்குகள் உள்ளன. காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கு 2 லட்சத்து 59 ஆயிரத்து 892 வாக்குகள் உள்ளன. எந்த அணியையும் சேராத மாநில கட்சிகளுக்கு 2 லட்சத்து 92 ஆயிரத்து 894 வாக்குகள் உள்ளன. பாஜக கூட்டணி நிறுத்தும் வேட்பாளர் வெற்றிபெறுவதற்கு சுமார் 13 ஆயிரம் வாக்குகள் குறைவதாக தெரியவந்துள்ளது.

எதிர்கட்சிகள் ஆலோசனை
மாநில கட்சிகளின் ஆதரவை பெற்று பாஜக நிறுத்தும் வேட்பாளர் எளிதாக வெற்றிபெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் எதிர்கட்சியினரும் தங்கள் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்த முயற்சி மேற்கொண்டுள்ளதால் குடியரசுத்தலைவர் தேர்தல் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications