கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்.. குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, பிரதமர் மோடி வாழ்த்து!
டெல்லி: இன்று உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் வாழ்த்துக்களை பகிர்ந்துக்கொண்டுள்ளனர்.
இஸ்ரேல்-பாலஸ்தீனம் போர், உக்ரைன்-ரஷ்யா போர், உலக பொருளாதாரம், கோவிட் தொற்று, சிறுபான்மையினர் மீது தொடுக்கப்படும் தாக்குதல், ஒடுக்கு முறைக்கு உள்ளாக்கப்படும் பெண்கள், சாதிய, மத, இன மோதல்கள் என இந்த ஓராண்டில் ஏராளமான சம்பவங்கள் நடந்திருக்கின்றன. இந்நிலையில், இன்னும் ஒரு சில நாட்களில் புத்தாண்டு பிறக்கப்போகிறது. இந்நிலையில், புத்தாண்டுக்கு முன்னோட்டமாக இன்று உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

"புறாக்களை போல கபடமில்லாமல் இருங்கள்" என்கிற யேசுவின் பொன்மொழியை பிரதிபலிக்கும் பொருட்டு, ஏராளமான கிறிஸ்தவர்கள் ஒன்று திரண்டு இன்று அன்பை பகிர்ந்துக்கொண்டிருக்கின்றனர். ஒருவருக்கொருவர், இனிப்பு, புத்தாடை, அன்பு மொழி பரமாரிக்கொண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். நள்ளிரவு 12 மணியளவில் தேவாலயங்களில் சிறப்பு கூட்டுப் பிரார்த்தனைகள் நடைபெற்றன.
Merry Christmas to all!
— President of India (@rashtrapatibhvn) December 25, 2023
This festival of joy spreads the message of harmony, love and compassion. Let us recall the teachings of Jesus Christ and resolve to work together for well-being and prosperity of one and all.
இந்நிலையில் குடியரசுத் தலைவர் திரொளபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை பகிர்ந்துக்கொண்டுள்ளனர். "கிறிஸ்துமஸ் திருவிழா நல்லிணக்கம், அன்பு மற்றும் இரக்கத்தின் செய்தியைப் பரப்புகிறது. இயேசு கிறிஸ்துவின் போதனைகளை நினைவு கூர்வோம். அனைவரின் நல்வாழ்வு மற்றும் செழிப்புக்காக ஒன்றிணைந்து செயல்பட தீர்மானிப்போம்" என குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பகிர்ந்துள்ள வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.
Wishing everyone a Merry Christmas! May this festive season bring joy, peace and prosperity to all. Let’s celebrate the spirit of harmony and compassion that Christmas symbolizes, and work towards a world where everyone is happy and healthy. We also recall the noble teachings of…
— Narendra Modi (@narendramodi) December 25, 2023
அதேபோல அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள். இந்த பண்டிகைக் காலம் மகிழ்ச்சியையும், அமைதியையும், செழிப்பையும் தரட்டும். கிறிஸ்மஸ் குறிக்கும் நல்லிணக்கம் மற்றும் இரக்கத்தின் உணர்வைக் கொண்டாடுவோம். அனைவரும் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும் உலகத்திற்காக செயல்படுவோம். கர்த்தராகிய கிறிஸ்துவின் உன்னத போதனைகளையும் நாம் நினைவுகூருவோம்" என பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து செய்திகளை பகிர்ந்திருக்கிறார்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications