ரொம்ப பெருமையாக இருக்கு.. தமிழ்நாட்டு வாழைப்பழம் சவுதி அரேபியால கிடைக்கிறது..பிரதமர் மோடி பெருமிதம்!
டெல்லி : தமிழகத்தில் விளைவிக்கப்படும் வாழைப்பழங்கள் சவுதி அரேபியாவில் கிடைக்கிறது என்றும், ஆந்திராவின் பங்கனப்பள்ளி மாம்பழம், நாகாலாந்து ராஜ மிளகாய் லண்டனுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்
சர்வதேச அளவில், வாழைப்பழம் உற்பத்தியில், பிரேசில், இந்தியா ஆகியவை முன்னணியில் உள்ளன. இந்தியாவில் ஆண்டுக்கு, 9.07 கோடி டன் வாழைப்பழம் உற்பத்தியாகிறது. இந்தியாவில் பழங்கள் உற்பத்தியில் வாழைப்பழம் முதலிடத்தில் உள்ளது.
நாட்டின் மொத்த வாழைப்பழம் உற்பத்தியில், மகாராஷ்டிரா, தமிழகம், மத்திய பிரதேசம், ஆந்திரா, குஜராத், கர்நாடகம் ஆகிய மாநிலங்களின் பங்களிப்பு 68.67 சதவீதம் என்ற அளவில் உள்ளது.

தமிழக வாழைப்பழம்
தமிழகத்தில் மட்டும், 20க்கும் மேற்பட்ட வாழைப்பழ வகைகள் உற்பத்தியாகின்றன. தமிழகத்தில் விளையும் பழங்களில் வாழைப்பழம் முதலிடத்தில் உள்ளது. இதையடுத்து, மாம்பழம், திராட்சை, சப்போட்டா, கொய்யா, நெல்லி ஆகியவை உள்ளன.உள்நாட்டில், கடந்த 20 ஆண்டுகளில், வாழை பயிரிடும் பரப்பளவு, 2 லட்சம் ஹெக்டேரிலிருந்து, 6.20 லட்சம் ஹெக்டேராக அதிகரித்துள்ளது.

வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி
நாட்டில், உற்பத்தியாகும் மொத்த வாழைப்பழத்தில், பெங்களூரு பச்சைப் பழத்தின் பங்களிப்பு, 69 சதவீதம் என்ற அளவில் உள்ளது. இதைத் தொடர்ந்து, பூவம் பழம், 17 சதவீதமும், பச்சை வாழை, நேந்திரம், ரஸ்தாளி ஆகியவை, தலா 4 சதவீத பங்களிப்பையும் கொண்டுள்ளன. தமிழகத்திலிருந்து, ஐக்கிய அரபு நாடுகள், சவுதி அரேபியா, ஈரான், குவைத், பக்ரைன், நேபாளம், கத்தார், ஓமன், மாலத்தீவு ஆகிய நாடுகளுக்கு, வாழைப்பழம் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

பிரதமர் நரேந்திர மோடி
மதிப்பின் அடிப்படையில், இந்தியாவின் மொத்த வாழைப்பழம் ஏற்றுமதியில், இந்நாடுகளின் பங்களிப்பு, 4.50 கோடி ரூபாயாகும்.சர்வதேச அளவில், வாழைப்பழம் ஏற்றுமதியில், ஈக்வடார் நாடு, 18 சதவீத சந்தை பங்களிப்புடன் முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில் இன்று மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, தமிழகத்தில் விளைவிக்கப்படும் வாழைப்பழங்கள் சவுதி அரேபியாவில் கிடைக்கிறது என்றும் ஆந்திராவின் பங்கனப்பள்ளி மாம்பழம் நாகாலாந்து மிளகாய் லண்டனுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது என கூறியுள்ளார்.

இந்தியாவின் பெருமிதம்
நாட்டு மக்களிடையே இன்று வானொலி மூலம் உரையாற்றிய பிரதமர், இந்தியர்கள் திறன் உலகின் அனைத்து இடங்களையும் சென்றடைந்துள்ளது எனவும் வெளிநாடுகளில் இந்திய பொருட்கள் முன்பைவிட தற்போது அதிக அளவில் கிடைக்கிறது என்றார் குறிப்பாக தமிழகத்தின் வாழைப்பழங்கள் சவுதி அரேபியாவில் கிடைக்கிறது எனவும் ஆந்திரா பங்கனபள்ளி மாம்பழம் நாகராஜ் மிளகாய் லண்டனுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது என்றார் மேலும் உத்திரபிரதேசம் இமாச்சல பிரதேசத்தில் விளைவிக்கப்படும் தானியங்கள் உலகெங்கிலும் ஏற்றுமதி செய்யப்படுகிறது எனவும் மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்












Click it and Unblock the Notifications