இனி வரும் காலங்கள் எப்படி இருக்கும்ணு பாருங்க.. பட்ஜெட் 2022 குறித்து பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
டெல்லி : தற்சார்பு இந்தியாவை உருவாக்குவதற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், கொரோனாவுக்கு பிறகு உலகில் பல மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் ஆத்மநிர்பார் பொருளாதாரம் என்ற தலைப்பில் நாடு முழுவதும் பாஜகவினர் மற்றும் பல்வேறு தரப்பினரிடையே காணொலி காட்சி மூலம் உரையாற்றினார்.
நேரடியாக ஒளிபரப்பப்பட்ட இந்த நிகழ்ச்சியில் தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் பாஜக நிர்வாகிகள் கலந்துகொண்டு பிரதமர் நரேந்திர மோடியுடன் உரையாடினர். நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் 7 ஆண்டுகளில் நமது நாட்டின் வளர்ச்சியைப் பற்றியும், உலக நாடுகள் மத்தியில் நமது நாட்டின் முக்கியத்துவம் உயர்ந்திருப்பதாகவும் பேசினார்.

ஆத்ம நிர்பார் நிகழ்ச்சி
நிகழ்ச்சியில் தொடர்ந்து பேசிய பிரதமர், சுயச்சார்பு மற்றும் நவீனத்துவத்தை நோக்கிய நமது வளர்ச்சிப் பாதை அமைய வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த ஆண்டின் நிதிநிலை அறிக்கையில் 5ஜி சேவை, ஸ்டார்ட் அப் இந்தியா திட்டங்களுக்கு வழங்கப்படும் வரிச் சலுகைகள், அனைத்து கிராமங்களுக்கும் இணையதள சேவை வழங்க ஆப்டிகல் ஃபைபர் திட்டம் மற்றும் நதிநீர் இணைப்பு திட்டங்கள் போன்றவையின் முக்கிய பங்கைப் பற்றி எடுத்துரைத்தார்.

அந்நிய செலாவணி உயர்வு
இந்தியாவின் ஜிடிபி தற்போது 2.3 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது என பேசிய பிரதமர் நரேந்திரமோடி, நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு 200 மில்லியன் டாலரில் இருந்து 130 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது எனவும், இவை அனைத்திற்கும் மத்திய அரசின் பயனுள்ள கொள்கைகளே காரணம் என கூறினார். இயற்கை விவசாயத்தை மையமாக வைத்து இந்திய விவசாயத்தை நவீன மயமாக்குவது குறித்தும் கவனம் செலுத்தியது என பேசிய பிரதமர், இதனால் விவசாயிகளுக்கு அதிக லாபம் தரும் விவசாய ட்ரோன்கள் உள்ளிட்ட இயந்திரங்கள் விவசாயிகளுக்கு நியாயமான விலையில் கிடைக்கும் என கூறினார்.

தற்சார்பு இந்தியா
இந்தியாவை நோக்கிய உலகின் மாறிய கண்ணோட்டத்தில் நமது பொருளாதாரத்தை வலுப்படுத்துவதன் மூலம் நாட்டை குறைவான வேகத்தில் முன்னோக்கிக் கொண்டு செல்வது நமக்கு கட்டாயம் ஆகும் என நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி கடந்த 7 ஆண்டுகளில் விளையாட்டுக்கான பட்ஜெட் மூன்று மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதாக விவசாயிகளின் குடும்பத்தில் தேசத்தை பெறுகிறார்கள் என தெரிவித்தார் மேலும் தற்சார்பு என்ற அடித்தளத்தில் வருங்கால இந்தியாவில் இட வேண்டும் எனவும் பிரதமர் நரேந்திர மோடி அந்த நிகழ்ச்சியில் உரையாற்றினார்.
Recommended Video

இந்திய இளைஞர்கள்
சமீபத்தில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் தற்சார்பு இந்தியாவை உருவாக்குவதற்கான பட்ஜெட் என பேசிய பிரதமர், இனிவரும் காலங்கள் கொரோனாவுக்கு முந்திய காலங்களைப் போல இருக்காது எனவும் கொரோனாவுக்கு பிறகு உலகில் பல மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது எனவும், இந்தியாவை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல இளைஞர்கள் உத்வேகத்துடன் செயல்பட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications