பாஜகவின் 44வது ஸ்தாபன தினம் இன்று.. கட்சி தொண்டர்களிடம் காலை 10 மணிக்கு உரையாற்றுகிறார் பிரதமர் மோடி
டெல்லி: பாஜகவின் 44வது ஸ்தாபன தினத்தை இன்று முதல் சிறப்பாக கொண்டாட கட்சி திட்டமிட்டுள்ளது. அதன் ஓர் அங்கமாக பிரதமர் நரேந்திர மோடி கட்சியின் புதிய அலுவலகத்திலிருந்து பாஜக தொண்டர்களிடையே உரையாற்றுகிறார்.
1984ம் ஆண்டு வெறும் 2 எம்பிக்களில் தொடங்கிய பாஜகவின் கணக்கு தற்போது 303 எம்பிக்களாக உயர்ந்திருக்கிறது. ஆண்டு தோறும் ஏப்ரல் மாதம் 6ம் தேதி பாஜகவின் ஸ்தாபன தினம் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இன்று இந்த கொண்டாட்டங்கள் தொடங்குகின்றன. தற்போதுவரை பாஜக இரண்டாவது முறையாக தொடர்ந்து அட்சியை பிடித்திருக்கிறது. மேலும் மற்றொரு 5 ஆண்டுகள் தங்களது ஆட்சியை நீட்டிக்க பல்வேறு யூகங்களையும் கட்சி வகுத்திருக்கிறது.
இந்நிலையில், கட்சியின் 44வது ஸ்தாபன தினத்தை சிறப்பாக கொண்டாட கட்சி திட்டமிட்டுள்ளது. அதன்படி இன்று கட்சியின் தலைமை அலுவலகத்தில் தலைவர் ஜே.பி.நட்டா கொடியை ஏற்றி வைத்து ஸ்தாபன விழாவை தொடக்கி வைக்கிறார். இதனையடுத்து 8 நாட்கள் வரை பாஜகவினர் இந்த ஸ்தாபன தினத்தை கொண்டாடுவார்கள். இதற்கிடையில் சமூக சீர்திருத்தவாதி ஜோதிராவ் பூலேவின் பிறந்த நாள் வருகிறது. அதையும் கட்சியினர் கொண்டாடுகின்றனர். இறுதியாக ஏப்ரல் மாதம் 14ம் தேதி அம்பேத்காரின் பிறந்தநாள் கொண்டாட்டத்துடன் பாஜக ஸ்தாபன தின கொண்டாட்டமும் நிறைவடைகிறது.
கொண்டாட்டம்

நட்டா கட்சியின் தேசிய தலைமை அலுவலகத்தில் கொடியை ஏற்றிய பின்னர் அதன் பின்னர் 36 மாநிலங்களில் உள்ள தலைவர்கள் மாநில அலுவலகங்களில் கட்சி கொடியை ஏற்றி வைப்பார்கள். இதனைத் தொடர்ந்து 954 மாவட்டத் தலைவர்கள் மாவட்ட தலைமை அலுவலகங்களில் கட்சி கொடியை ஏற்றி வைப்பார்கள். இந்த ஸ்தாபன தின கொண்டாட்டங்களின் வழியாக மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசின் சாதனைகளை நாடு முழுவதும் கொண்டு சேர்க்க பாஜக திட்டமிட்டுள்ளது. குறிப்பாக கர்நாடாக போன்று இந்த ஆண்டு தேர்தலை சந்திக்க உள்ள மாநிலங்களில் பாஜக இந்த ஸ்தாபன விழாவை சிறப்பாக கொண்டாட அறிவுறுத்தியுள்ளது.
3வது முறையாக
2014ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்றிருந்தாலும் அதன் பின்னர் பல்வேறு சவால்களை கட்சி சந்தித்து வந்தது. ஆனாலும் 2019ம் ஆண்டு தேர்தலில் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் 303 இடங்களை கைப்பற்றி அபாரமான வெற்றியை பெற்றது. தற்போது 10 ஆண்டு ஆட்சி காலம் முடிவடையும் நிலையில் அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலிலும் கட்சி வெற்றி பெற வேண்டும் என்று பாஜக பக்காவாக ப்ளான் போட்டு காய் நகர்த்தி வருகிறது. இந்த ப்ளான் ஒர்க்அவுட் ஆகி பிரதமராக மீண்டும் நரேந்திரமோடி பதவியேற்றால், இந்தியாவில் தொடர்ந்து 3 முறை பிரதமாராக இருந்தவர் என்கிற பெருமை நேருவுக்கு அடுத்து நரேந்திர மோடிக்கு கிடைக்கும்.
அதிருப்தி
ஆனால், என்னதான் பக்கா ப்ளான் போட்டாலும் 10 ஆண்டு ஆட்சியில் மக்களிடையே ஆளும் கட்சி மீது சலிப்பு ஏற்பட்டுள்ளதாக சில உளவு தகவல்கள் தெரிய வந்தள்ளதால் பாஜக தலைவர்கள் அதிருப்தியடைந்துள்ளனர். இதற்கு முக்கிய காரணம் எதிரக்கட்சிகள் கடந்த காலத்தை விட தற்போது வலுவடைந்துள்ளனர். அதேபோல மாநில கட்சிகளும் பலம் வாய்ந்த சக்தியாக உருவாக்கியுள்ளன. இந்த சவால்களை சமாளிப்பதோடு இந்த முறை 400 தொகுதிகளில் வெற்றி பெற்று விட வேண்டும் என்று பாஜக தனது வியூகங்களை கூர்மையாக்கி வருகிறது.

இதற்கு முன்னோட்டமாக 150 தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த தொகுதிகளில் பாஜக எப்படியாவது வெற்றி பெற்றே ஆக வேண்டும் என பூத் கமிட்டி வேலைகள், மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்துதல் என நிர்வாகிகள் தீவிரமாக இயங்க உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே இவற்றையெல்லாம் மனதில் கொண்டுதான் இந்த ஸ்தாபன தின கொண்டாட்டங்களை பாஜக தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications