டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ரயில்வே துறையில் ரூ.50 லட்சம் கோடி முதலீடு செய்ய திட்டம்.. தனியார் பங்களிப்பு அவசியம் என அறிவிப்பு

Google Oneindia Tamil News

Recommended Video

    Railway Budget 2019 : ரயில்வே துறை தனியார் மயமாக்கப்பட்டால் மக்களுக்கு கடும் பாதிப்பு.!- வீடியோ

    டெல்லி: வரும் 2030-ம் ஆண்டிற்குள் ரயில்வே துறையில் ரூ.50 லட்சம் கோடி முதலீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ரூ.50 லட்சம் கோடி ரயில்வே துறையில் முதலீடு செய்வது அவசியம் என்பதால் தனியார் பங்களிப்பும் அவசியமாவதாக குறிப்பிட்டார்.

    Private contribution is essential to modernize the railway sector. Budget Announcement

    அனைத்து ரயில் தடங்களையும் மின்மயமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அவர், ரயில்வே தனியார் மயமாக்கப்படுவதால் விரைவில், இந்திய ரயில்வே பயணிகள் உலகத் தரம் வாய்ந்த தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்படும் ரயில்களில் பயணிக்க முடியும்.

    ரயில்வே துறையை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வதற்கு தனியார் பங்களிப்பு மிகவும் அவசியம் என்றார். மேலும் புறநகர் ரயில்வே நெட்வொர்க் மேம்பாட்டிற்கென சிறப்பு ரயில்கள் தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    2022ஆம் ஆண்டுக்குள் 1.95 கோடி வீடுகள் வழங்கப்படும்.. பட்ஜெட்டில் அறிவித்த நிர்மலா! 2022ஆம் ஆண்டுக்குள் 1.95 கோடி வீடுகள் வழங்கப்படும்.. பட்ஜெட்டில் அறிவித்த நிர்மலா!

    ரயில்வே துறையை மேம்படுத்த பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன. இதற்கு தனியார் துறை முதலீட்டின் தேவை எழுகிறது. ரயில்வே துறையில் தனியார் முதலீட்டை விரைவுபடுத்தப்படாவிட்டால், பல்வேறு திட்ட செயலாக்கம் தாமதமாகும். இந்த சூழலை தவிர்கக்வே மத்திய அரசு விரும்புகிறது.

    எனவே எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக ரயில்வே துறையில் தனியார் முதலீடுகள் செய்வதற்கு அனுமதி அளிக்கப்படும் என கூறினார். மேலும் பேசிய மத்திய அமைச்சர் உள்நாட்டு நீர்வழிப்பாதைகளின் வளர்ச்சி இந்திய ரயில்வே மீதான அழுத்தத்தைக் குறைக்க உதவும் என்றும் அவர் கூறினார்.

    தற்போது தாக்கல் செய்யப்பட்டு வரும் பட்ஜெட்டில் ரயில்வே உள்கட்டமைப்பின் பாதுகாப்பு மற்றும் நவீனமயமாக்கலில் அரசு கவனம் செலுத்த உள்ளது தெளிவாகியுள்ளது. மேலும் நவீன உலகத் தரம் வாய்ந்த ரயில் பெட்டிகளுடன் ,அதிவேக ரயில் பயணங்களுக்கும் அடுத்து வரும் ஆண்டுகளில் முக்கியத்துவம் அளிக்கப்பட உள்ளது.

    இந்திய ரயில்வே தனது பழைய கட்டமைப்பிலிருந்து வெளிவந்து நவீனமாக்கபடுவதற்கு தனியார் முதலீடு அவசியம் என மத்திய அமைச்சர் திட்டவட்டமாக கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    English summary
    The Central Budget has announced that Rs 50 lakh crore is expected to be invested in the railways sector by 2030.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X