டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஹத்ராஸ் பெண்ணின் உடலை ஏன் பெட்ரோல் ஊற்றி எரித்தார்கள்? பெற்றோரின் கேள்விகளை பட்டியலிடும் பிரியங்கா

Google Oneindia Tamil News

டெல்லி: ஹத்ராஸில் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணின் உடலை தங்களுக்குக் கூட காண்பிக்காமல் பெட்ரோல் ஊற்றி எரித்தது ஏன் என குடும்பத்தினர் கேட்ட கேள்விகளை தனது ட்விட்டர் பக்கத்தில் பிரியங்கா காந்தி கேட்டுள்ளார். இந்த ட்வீட்டில் அவர் மொத்தம் 5 கேள்விகளையும் கோரிக்கைகளையும் முன் வைத்துள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸில் 19 வயது பெண் கொடூரமாக கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க ராகுல் காந்திக்கு கடந்த வியாழக்கிழமை அனுமதி மறுக்கப்பட்டது.

இதையடுத்து நேற்றைய தினம் பிரியங்கா காந்தியும் ராகுல் காந்தியும் தனது கட்சித் தொண்டர்களுடன் ஹத்ராஸ் சென்ற நிலையில் அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து இருவரும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து பேசினர்.

ஹத்ராஸ்: நாடே பற்றி எரிகிறது.. பாஜக அமைச்சர் ஸ்மிருதி இரானி இப்படி பேசுகிறாரே .. புதிய சர்ச்சை!ஹத்ராஸ்: நாடே பற்றி எரிகிறது.. பாஜக அமைச்சர் ஸ்மிருதி இரானி இப்படி பேசுகிறாரே .. புதிய சர்ச்சை!

குடும்பத்தினர்

குடும்பத்தினர்

இதுகுறித்து பிரியங்கா காந்தி செய்தியாளர்களிடம் கூறுகையில் கடைசியாக தனது மகளை அந்த குடும்பத்தினர் ஒரு முறை கூட பார்க்கவில்லை. உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பொறுப்புணர்வை புரிந்து கொள்ள வேண்டும். இதுவரை நீதி கிடைக்கவில்லை. அது வரை நாங்கள் போராடுவோம்.

விசாரணை குழு

விசாரணை குழு

உச்சநீதிமன்ற மேற்பார்வையில் விசாரணைக் குழு அமைக்க பெண்ணின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர் என பிரியங்கா காந்தி தெரிவித்தார். இந்தநிலையில் உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

இடைநீக்கம்

இந்த நிலையில் பிரியங்கா தனது ட்விட்டர் பக்கத்தில் ஹத்ராஸ் மாவட்ட ஆட்சியர் பர்வீன் லக்ஷார் இடைநீக்கம் செய்யப்பட வேண்டும் என்றும் இனி எந்த ஒரு மூத்த பதவிகளுக்கும் அவரை நியமிக்கக் கூடாது என்றும் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

சடலம்

சடலம்

எங்களை கேட்காமல் எங்கள் பெண்ணின் உடலை பெட்ரோல் ஊற்றி எரித்தது ஏன்? எங்களை ஏன் தொடர்ந்து மிரட்டி வருகிறார்கள்? என கேட்கிறார்கள். இடுகாட்டிலிருந்து பூக்களை நாங்கள் கொண்டு வந்தோம். ஆனால் அது அங்கு எரிக்கப்பட்டது எங்கள் பெண்ணின் சடலம்தான் என்பதை எப்படி தெரிந்து கொள்வது என கேள்வி எழுப்பியுள்ளார்கள்.

ராகுல் ட்வீட்

இந்த கேள்விகளை கேட்க அந்த குடும்பத்தினருக்கு முழு உரிமை உள்ளது. உத்தரப்பிரதேச அரசு நிச்சயம் பதில் அளித்தே ஆக வேண்டும் என பிரியங்கா தெரிவித்துள்ளார். அது போல் ராகுல்காந்தியும் தனி ட்வீட் போட்டுள்ளார். அதில் அவர் கூறுகையில் நான் ஹத்ராஸில் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை சந்தித்தேன்.

தன்னிச்சை

தன்னிச்சை

அவர்களின் வலியும் வேதனையும் எனக்கு தெரியும். இந்த இக்கட்டான நேரத்தில் அவர்களுக்கு ஆதரவாக நாங்கள் இருக்கிறேன் என அவருக்கு உறுதி அளித்துள்ளோம். அந்த பெண்ணுக்கு நீதி கிடைத்த எங்களால் இயன்றதை செய்வோம். ஹத்ராஸில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும் என இந்த நாடே ஒன்றுபட்டிருப்பதால் உத்தரப்பிரதேச அரசே விரும்பினாலும் தன்னிச்சையாக செயல்பட முடியாது என ராகுல் தெரிவித்துள்ளார்.

English summary
Priyanka Gandhi says after met the Hathras victim's kin that she will fight till justice is being served.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X