பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேராவுக்கு தொடரும் சிக்கல்.. இன்று மீண்டும் சம்மன்
டெல்லி: ஷிகோபூர் நில ஒப்பந்தம் குறித்த ஊழல் முறைகேடு தொடர்பான வழக்கில் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும், எம்பியுமான பிரியங்கா காந்தியின் கணவா் ராபா்ட் வதேராவிடம் நேற்று சுமாா் 6 மணி நேரம் அமலாக்கத் துறை விசாரணை மேற்கொண்ட நிலையில், இன்று மீண்டும் விசாரணைக்கு ஆஜராகுமாறு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஹரியானாவில் கடந்த 2008-ஆம் ஆண்டு ஷிகோபூர் நில ஒப்பந்தத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக புகார்கள் எழுப்பப்பட்டன. ராபா்ட் வதேராவின் ஸ்கைலைட் ஹாஸ்பிடாலிட்டி தனியாா் நிறுவனம், மனேசா்-ஷிகோபூா் பகுதியில் 3.5 ஏக்கா் நிலத்தை டிஎல்எஃப் ரியல் எஸ்டேட் நிறுவனத்திடம் இருந்து ரூ.7.5 கோடிக்கு நிலத்தை வாங்கியுள்ளது. இந்த நிலத்தை வாங்கிய அடுத்த நாளே ஸ்கைலைட் நிறுவனத்தின் பெயருக்கு மாற்றப்பட்டுள்ளது. பொதுவாக இந்த நடைமுறைகள் எல்லாம் நிறைவடைய சுமார் 3 மாதங்கள் ஆகும். ஆனால், 24 மணி நேரத்தில் ஆவணப் பதிவுகள் நடந்து முடிந்துள்ளன.

அப்போது ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசு சரியாக ஒரு மாதம் கழித்து புதிய வீட்டு வசதி வாரிய திட்டத்தை அறிவித்தது. மேலும், அந்த நிலத்தின் பெரும்பகுதியில் வீட்டு வசதித் திட்டத்தை மேற்கொள்ள ஸ்கைலைட் ஹாஸ்பிடாலிட்டி நிறுவனத்துக்கு அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான மாநில அரசு அனுமதி அளித்தது. இதனால் அந்த நிலத்தின் மதிப்பு உடனடியாக உயா்ந்தது.
இதைத்தொடர்ந்து, 2008 இல் அதே நிலத்தை ரூ. 58 கோடிக்கு வாங்க டிஎல்எஃப் யுனிவா்சல் ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. வதேரா ரூ.7.5 கோடிக்கு வாங்கப்பட்ட அந்த நிலத்தின் மதிப்பு, சில மாதங்களில் சுமாா் 700% உயா்ந்து ரூ. 58 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, ஊழல் முறைகேட்டின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்று கருதி, பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்தது.
இந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என ராபா்ட் வதேராவுக்கு ஏப்ரல் 8 ஆம் தேதி அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியது. ஆனால் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதைத்தொடா்ந்து அவருக்கு மீண்டும் அனுப்பப்பட்ட சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் டெல்லியில் உள்ள அமலாக்கத் துறை தலைமை அலுவலகத்தில் நேற்று ஆஜரானாா். தனது இல்லத்தில் இருந்து அலுவலகத்திற்கு நடந்தே சென்றார்.
ராபர்ட் வதேராவிடம் கிட்டத்தட்ட 6 மணி நேரம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அவரின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட நிலையில், அவரை மீண்டும் இன்று (புதன்கிழமை) விசாரணைக்கு ஆஜராகுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். ராபர்ட் வதேரா இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று கூறியதோடு தன் மீதான ஊழல் புகார்களையும் நிராகரித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications