கைதாகும் பிரிஜ் பூஷண்? மல்யுத்த சம்மேளனத்துக்கு ஜூன் 30க்குள் தேர்தல்! அனுராக் தாகூரை கவனிச்சீங்களா
டெல்லி: மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் உடனான பேச்சுவார்த்தையை தொடர்ந்து மல்யுத்த வீராங்கனைகள் போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர். இதையடுத்து அனுராக் தாகூர் சந்தித்த நிலையில் அவர் கூறிய தகவலால் வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் பாஜக எம்பி பிரிஜ் பூஷண் சரண் சிங் விரைவில் கைது செய்யப்படுகிறாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராக இருப்பவர் பிரிஜ் பூஷண் சரண் சிங். இவர் பாஜக எம்பியாகவும் உள்ளார். இவர் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து பிரிஜ் பூஷண் சரண் சிங்கை கைது செய்ய வலியுறுத்தி டெல்லியில் வீரர், வீராங்கனைகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர்.

இதையடுத்து உச்சநீதிமன்ற உத்தரவின்பேரில் பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது டெல்லி போலீசார் போக்சோ உள்பட 2 வழக்குகளை பதிவு செய்தனர். ஆனாலும் கைது செய்யப்படவில்லை. இதனால் வீரர், வீராங்கனைகள் ஜந்தர் மந்தரில் தொடர்ந்து போராட்டம் நடத்தினர்.
இதற்கிடையே தான் புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவின்போது அங்கு பேரணி செல்ல முயன்ற வீரர், வீராங்கனைகள் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். அப்போது அவர்களை போலீசார் தரதரவென இழுத்து சென்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் அவர்கள் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இருப்பினும் வீரர், வீராங்கனைகள் அசரவில்லை. தொடர்ந்து தங்களின் கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வந்தனர்.
இந்த போராட்டத்துக்கு எதிர்க்கட்சிகளிடம் இருந்து ஆதரவு குவிந்தது. மேலும் உலக மல்யுத்த கூட்டமைப்பும் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அதோடு மல்யுத்த வீரர், வீராங்கனைகளின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். விரைவில் இந்திய மல்யுத்த சம்மேளனத்துக்கு தேர்தல் நடத்த வேண்டும். இல்லாவிட்டால் இந்திய மல்யுத்த சம்மேளனம் கலைக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தது.
இந்நிலையில் தான் இன்று டெல்லியில் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர், மல்யுத்த வீரர், வீராங்கனைகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தை 6 மணிநேரம் நடந்தது. அப்போது இந்திய மல்யுத்த சம்மேளனத்துக்கு புதிய தலைவராக பெண் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும். பிரிஜ் பூஷண் சரண் சிங் கைது செய்யப்பட வேண்டும். அவரது குடும்பத்தை சேர்ந்தவர்கள், அவரது ஆதரவாளர்கள் மல்யுத்த சம்மேளனத்தில் இடம்பெற கூடாது. மல்யுத்த சம்ளேனத்துக்கு நியாயமான தேர்தல் நடத்த வேண்டும். டெல்லியில் போராடியபோது பதிவு செய்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து ஜூன் 15ம் தேதி வரை போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுவதாக வீரர் வீராங்கனைகள் அறிவித்துள்ளனர்.
இதையடுத்து மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: இந்திய மல்யுத்த சம்மேளனத்துக்கு உள்புகார்களை விசாரிக்க பெண் தலைமையில் குழு அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதேபோல் அவர்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்குகளை திரும்ப பெற கோரிக்கை வைத்துள்ளனர். அதோடு இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராக 3 முறை செயல்பட்டு வரும் பிரிஜ் பூஷண் சரண் சிங் மற்றும் அவரது கூட்டாளிகளை மீண்டும் தேர்வு செய்யக்கூடாது என தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக நான் 6 மணிநேரம் மல்யுத்த வீரர், வீராங்கனைகளிடம் பேசினேன். அப்போது பிரிஜ் பூஷண் சரண் சிங் மீதான விசாரணையை ஜூன் 15ம் தேதிக்குள் முடித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதாக உறுதியளித்தேன். மேலும் ஜூன் 30ம் தேதிக்குள் இந்திய மல்யுத்த சம்மேளனத்துக்கு தேர்தல் நடத்தப்படும் எனவும் கூறினேன். இதையடுத்து வரும் 15ம் தேதி வரை எந்த போராட்டத்தையும் முன்னெடுக்கப்போவது இல்லை என மல்யுத்த வீரர், வீராங்கனைகள் தெரிவித்துள்ளனர்'' என்றார். இந்நிலையில் தான் பிரிஜ் பூஷண் சரண் சிங் ஜூன் மாதம் 15ம் தேதிக்குள் அல்லது அதன்பிறகு கைது செய்யப்படுவாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications