இறுகும் பிடி! நேரில் வாங்க! நுபுர் சர்மாவுக்கு 2வது முறையாக பறந்த சம்மன்! அனுப்பியது யார் தெரியுமா?
டெல்லி: நபிகள் நாயகம் குறித்து தொலைக்காட்சி விவாதத்தில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த நுபுர் சர்மாவுக்கு 2வது முறையாக மகாராஷ்டிரா போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.
ஞானவாபி மசூதி விவகாரம் தொடர்பாக தனியார் தொலைக்காட்சியில் விவாதம் நடந்தது. இதில் இஸ்லாமிய இறை தூதர் நபிகள் நாயகம் குறித்து பாஜகவின் செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்து இருந்தார்.
இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தியாவில் உள்ள முஸ்லிம் மக்கள் மட்டுமின்றி பல முஸ்லிம் நாடுகள் கண்டனங்கள் தெரிவித்தன.

தொடர் போராட்டங்கள்
இதையடுத்து நுபுர் சர்மா கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்நிலையில் நுபுர் சர்மாவை கைது செய்ய வலியுறுத்தி நேற்று முன்தினம் உத்தர பிரதேசம், ஜார்கண்ட், கர்நாடகம் உள்பட வெவ்வேறு மாநிலங்களில் போராட்டம் நடந்தது. இதில் உத்தர பிரதேசத்தில் 6 இடங்களிலும், ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியிம் வன்முறை வெடித்தது.

போலீசில் குவியும் புகார்கள்
இதற்கிடையே நுபுர் சர்மா மீது மகாராஷ்டிரா, டெல்லி உள்பட பல்வேறு மாநிலங்களில் உள்ள போலீஸ் நிலையங்கள் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக அவர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்னும் அவர் கைது செய்யப்படவில்லை. இதற்கிடையே தான் நுபுர் சர்மாவை கைது செய்ய வேண்டும். அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

2வது சம்மன்
இந்நிலையில் தான் சர்ச்சை பேச்சு தொடர்பாக மகாராஷ்டிரா மாநிலம் மும்பை பைடோனி போலீசார் நுபுர் சர்மாவுக்கு நேற்று சம்மன் அனுப்பினர். இதன்மூலம் ஜூன் 25ம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. முன்னதாக இந்த விவகாரத்தில் மகாராஷ்டிரா தானே மாவட்டம் மும்ப்ரா போலீசார் சார்பில் நுபுர் சர்மாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதில் ஜூன் 22ல் விசாரணை அதிகாரி முன்பு ஆஜராக வேண்டும் என கூறப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
Recommended Video

போலீஸ் பாதுகாப்பு
முன்னதாக தனக்கும், தனது குடும்பத்துக்கும் கொலை மிரட்டல் வருவதாக நுபுர் சர்மா போலீசில் புகார் செய்திருந்தார். இதனால் அவருக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் விசாரணைக்கு ஆஜராக 2வது முறையாக அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதுதவிர பிற மாநில போலீஸ் நிலையங்களிலும் இருந்து விரைவில் அவருக்கு சம்மன் அனுப்பப்படலாம் என கூறப்படுகிறது.
-
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications