ராகுலை விடுங்க.. சீனாவுக்குப் போய் நீங்க என்ன பேசினீங்க? மோடி மீது பாய்ந்த மல்லிகார்ஜூன கார்கே
பிரதமர் மோடியின் சீனா பேச்சை முன்வைத்து பதிலடி தந்துள்ளார் மல்லிகார்ஜூன கார்கே.
டெல்லி: இந்தியாவில் ஜனநாயகம் சீர்குலைக்கப்படுவதாக லண்டனில் ராகுல் காந்தி தெரிவித்த கருத்து நாடாளுமன்றத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என லோக்சபா, ராஜ்யசபாவில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், பியூஷ் கோயல் வலியுறுத்தினர். இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இங்கிலாந்து சென்ற ராகுல் காந்தி, லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் மாணவர்களிடையே உரையாற்றினார். அதேபோல் லண்டனில் உள்ள இந்திய பத்திரிகையாளர் சங்கத்திலும் உரையாற்றினார் ராகுல். அங்கு பேசிய ராகுல் காந்தி, இந்தியாவில் அரசுக்கு எதிரான குரல்கள் ஒடுக்கப்படுகின்றன. இந்தியாவின் ஜனநாயக கட்டமைப்புகள் தாக்குதலுக்குள்ளாகின்றன. இதற்கு எதிராக குரல் கொடுக்கத்தான் ஒற்றுமை யாத்திரை நடத்தப்பட்டது என்றார்.

மேலும் இந்தியாவின் நாடாளுமன்றம், நீதித்துறை உள்ளிட்ட அனைத்துமே தாக்கப்படுகின்றன; ஒடுக்கப்படுகின்றன. இதனால் மக்களின் குரலை வெளிப்படுத்துவதில் நெருக்கடி உருவாகி இருக்கிறது என்றார் ராகுல் காந்தி.
ராகுல் காந்தியின் இந்த விமர்சனத்தை பிரதமர் மொடி மற்றும் மத்திய அமைச்சர்கள், பாஜக தலைவர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். நாடாளுமன்றத்தில் லோக்சபாவில் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வலியுறுத்தி, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வந்தார். ராஜ்யசபாவில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வலியுறுத்தினார். இதனை காங்கிரஸ் மற்றும் இதர எதிர்க்கட்சி கட்சி எம்.பிக்கள் கடுமையாக எதிர்த்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கமிட்டியின் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பதில் அளித்துள்ளார். பிரதமர் மோடி முன்னர் சீனா சென்ற போது நமது நாட்டை பற்றி பேசியதை சுட்டிக்காட்டி மல்லிகார்ஜூன கார்கே விமர்சித்துள்ளார். அதாவது. சீனாவில் நீங்கள் கூறிய கருத்தை உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். முன்பு, நீங்கள் இந்தியராக பிறந்ததற்காக வெட்கப்பட்டீர்கள். இப்போது நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துவதில் பெருமை கொள்கிறீர்கள். இது இந்தியாவையும் இந்தியர்களையும் அவமானப்படுத்தவில்லையா?உங்கள் அமைச்சர்களுக்கு அவர்களின் நினைவுகளைப் புதுப்பிக்கச் சொல்லுங்கள். "கடந்த ஜென்மத்தில் என்ன பாவம் செய்தோமோ அதைத்தான் இந்தியாவில் பிறவி எடுத்திருக்கிறோம் என்று மக்கள் உணர்ந்த காலம் ஒன்று இருந்தது" என்று தென் கொரியாவில், நீங்கள் சொன்னீர்கள். காங்கிரஸ் கட்சிக்கு அறிவுரை சொல்வதற்கு முன் முதலில் 'உண்மையின் கண்ணாடி'யைப் பாருங்கள்! என கொந்தளித்துள்ளார் கார்கே.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications