ராஜீவ் காந்தி நினைவு தினம்.. அஞ்சலி செலுத்திய ராகுல் காந்தி.. டுவிட்டரில் பிரியங்கா உருக்கம்
டெல்லி: முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் 30வது நினைவு தினத்தையொட்டி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, டெல்லியிலுள்ள தனது தந்தையின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.
1991ம் ஆண்டு, மே 21ம் தேதி, தமிழகத்தின் ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்றபோது அப்போதைய பிரதமரான ராஜிவ் காந்தி, மனித வெடிகுண்டு தாக்குதலால் கொல்லப்பட்டார்.

பாரத ரத்னா பெற்றவரான ராஜீவ் காந்தி நாட்டின் ஆறாவது பிரதமராக பதவி வகித்தவர். ராஜீவ் காந்தியின் தாயார் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து 1984 ஆம் ஆண்டில் பிரதமராக பொறுப்பை ஏற்றுக்கொண்டார். அப்போது அவருக்கு 40 வயது என்பதால் இந்தியாவின் இளம் பிரதமர் என்ற பெருமையை ராஜீவ் காந்தி பெற்றார். தகவல் தொழில்நுட்ப துறையில் இந்தியா அடைந்த வளர்ச்சிக்கு அடித்தளம் போட்டது ராஜீவ் காந்தி.

ராஜீவ் காந்தியின் 30வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் அவருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. காங்கிரஸ் தலைவர்கள் பலரும் டுவிட்டரில் ராஜிவ் காந்தியை நினைவுகூர்ந்து பதிவுகளை ஷேர் செய்து வருகிறார்கள்.

ராகுல் காந்தி மற்றும் அவர் சகோதரி பிரியங்கா காந்தி ஆகியோரும் தங்களது டுவிட்டர் பதிவுகளில், தங்கள் தந்தையை நினைவு கூர்ந்தனர். இந்நிலையில், டெல்லியில் உள்ள ராஜீவ் காந்தியின் நினைவிடத்தில், ராகுல் காந்தி, மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
இந்த ஆண்டு, கோவிட் -19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக "சேவா மற்றும் சத்பவ்னா" நாளாக ராஜீவ் காந்தியின் நினைவு தினத்தை அனுசரிக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைமை அனைத்து மாநில கட்சி கிளைக்கும் உத்தரவிட்டது.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்?












Click it and Unblock the Notifications