டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஆயுதங்களின்றி இந்திய வீரர்களை அனுப்பியது யார்?.. யார் இதற்கு பொறுப்பு.. ராகுல் சரமாரி கேள்வி

Google Oneindia Tamil News

டெல்லி: சீனாவுடன் நடந்த பேச்சுவார்த்தைக்கு ஆயுதங்களின்றி இந்திய வீரர்களை அனுப்பியது யார்? என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

Recommended Video

    India வீரர்களை தாக்க china பயன்படுத்திய மோசமான ஆயுதங்கள்

    இந்தியா சீனா எல்லையில் திங்கள்கிழமை இரவு இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. லடாக் எல்லையில் கால்வன் பள்ளத்தாக்கு பகுதியில் அத்துமீறி இந்திய எல்லைக்குள் வந்த சீன ராணுவத்தினர் இந்திய வீரர்கள் மீது கல்வீச்சில் ஈடுபட்டனர்.

    இதனால் இந்திய தரப்பைச் சேர்ந்த 20 பேர் வீரமரணம் அடைந்தனர். பதிலுக்கு இந்தியாவுக்கு தாக்கியதால் சீன வீரர்களும் மரணமடைந்ததாக தெரிகிறது. இதனால் எல்லையில் பதற்றம் அதிகரித்த வண்ணம் இருந்தது.

    முற்கள் சுற்றப்பட்ட கம்பிகள்.. இந்திய வீரர்களை தாக்க சீனா பயன்படுத்திய ஆயுதம்.. லீக்கான புகைப்படம்!முற்கள் சுற்றப்பட்ட கம்பிகள்.. இந்திய வீரர்களை தாக்க சீனா பயன்படுத்திய ஆயுதம்.. லீக்கான புகைப்படம்!

    இரு தரப்பு

    இரு தரப்பு

    பதற்றத்தை தணிக்க இரு தரப்பு அதிகாரிகளும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். எல்லையில் மோதல் தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார். அதில் அவர் வீடியோவில், இந்திய வீரர்கள் மீது கடுமையான தாக்குதலை நடத்தி சீனா மிகப் பெரிய குற்றத்தை செய்துள்ளது.

    ராஜ்நாத் சிங்

    ராஜ்நாத் சிங்

    மேலும் ஆயுதங்கள் இன்றி இந்திய வீரர்களை பேச்சுவார்த்தைக்கு அனுப்பியது யார்? இந்த நிலைமைக்கு யார் பொறுப்பு? லடாக் கால்வன் பள்ளத்தாக்கில் இந்திய வீரர்களை கடுமையாக தாக்கியதால் வீரர்கள் வீரமரணமடைந்த நிலையில் சீனாவின் பெயரை குறிப்பிடாமல் இந்திய ராணுவத்தை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஏன் அவமானப்படுத்துகிறார்?

    சரமாரி கேள்வி

    சரமாரி கேள்வி

    இந்திய ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்துவதற்கு சீனாவுக்கு எப்படி தைரியம் வந்தது? இந்திய வீரர்கள் வீரமரணமடைந்த இரு நாட்கள் கழித்து ஆறுதல் கூறுவது ஏன் என்று ராகுல் காந்தி சரமாரியாக கேள்விகளை எழுப்பியுள்ளார். இந்தியா சீனா எல்லையில் 3,488 கி.மீ. தூரம் சர்ச்சைக்குரிய இடமாகும்.

    மோதல்

    திபெத்தின் தெற்கு பகுதியின் ஒரு பகுதிதான் அருணாசல பிரதேசம் என்கிறது சீனா,. ஆனால் இதை இந்தியா மறுக்கிறது. திங்கள்கிழமை இரவு இரு தரப்பினரிடையே நடந்த மோதல் 1967-ஆம் ஆண்டுக்கு பிறகு நடந்த மிகப் பெரிய மோதலாகும். நாதுலாவில் 1967-ஆம் ஆண்டு நடந்த மோதலில் 80 ராணுவ வீரர்கள் வீர மரணமடைந்தனர். 300 சீன வீரர்கள் கொல்லப்பட்டனர்.

    English summary
    Congress Ex MLA Rahul Gandhi questions Centre about why were soldiers sent unarmed?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X